பயனர்:Sharon mathew joseph/மணல்தொட்டி
சட்டம்
சட்டவரையறை
தொகுமனிதன் கூடிவாழ தொடங்கியபொழுதுதான் மனித சமுதாயத்தில் அறிவியல் சிந்தனைகள் தோன்றின. பழக்க வழக்கங்களினால் பல சட்டவியல் கூறுகளும் தோற்றம் பெற்றன. சட்டம் என்பதற்குச் செம்மை என்பது பொருள் . செம்மை என்பதன் பொருள் நடுவுநிலைமை என்னும் பொருளிலும் இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது.
சட்டங்களின் வகைகள்
தொகுசட்டங்கள் பலவகைபடும் அகில நாடுகளிடையேயுள்ள தொடர்புகளை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை அனைத்து நாட்டுச் சட்டம் என்கிறோம்,. நம் நாட்டின் முதன்மையான. வாழ்வியல் அடிப்படை. சட்டத்தை அரசியல் சட்டம் என்கிறோம்,.நாட்டில் உள்ள அனைத்துவகைச் சட்டங்களுக்கும் அடிப்படையானது அரசியல் அமைப்பு சட்டமே,. மக்களின் வாழ்வியல் அடிப்படை உரிமைகளும் இச்சட்டத்தின் வாயிலாகத்தான் காக்கப்படுகின்றன
குற்றம் என்றால் என்ன
தொகுசட்டப்படி தண்டிக்கத்தக்க செயலையே குற்றம் என்கிறோம்,. குற்றங்கள் இரு வகைபடும் ஒன்று சட்டம் செய்யக் கூடாது என்று சொன்னதை செய்தல், மற்றொன்று செய்ய வேண்டும் என்று சொன்னதை செய்யாமல் இருத்தல்.
போக்குவரத்து சட்டங்கள்
தொகுசில இடங்களுக்க போகவும் வரவும் எனத் தனித்தனி பாதைகள் உள்ளன,.அவற்றை உரிய அறிவிப்பு பலகை வாயிலாக அறிந்து முறையாக நடந்து கொள்ளுதல் வேண்டும். சிவப்பு விளக்கு எரிந்தால் உடனே வண்டியை நிறுத்துதல் வேண்டும். பச்சை விளக்கு எரியும்போது புறப்படுதல் வேண்டும். மஞ்சள் விளக்கு எரிந்தால் தயாராக இருத்தல் வேண்டும். இத்தகைய சாலைவிதிகளை மீறிநடந்தால் அது குற்றமாகும்.
மாணாக்கர் வன்கொடுமைத் தடைச்சட்டம்
தொகுகல்வி நிறுவனங்களில் மாணாக்கர் சேர்ந்த புதிதில் மூத்த மாணவர்களுடன் பழக தயங்குவர்.இத்தயக்கத்தை போக்க வலிய வந்து பேசிச் சிரித்து விளையாடுவது உண்டு. இத்தகைய உதவ வேண்டிய பண்பு அளவுக்கு மீறி போய்விட்டது.இதனால் சில இடங்களில் வன்கொடுமை நிகழ்கின்றன.அதாவது அடித்தல் உதைத்தல் முதலியன நிகழ்கின்றன.படிப்பக்கு மூத்த மாணாக்கரின் வழிகாட்டுதல் தேவை எனினும் அதனை தவறாக பயன்படுத்தாமல் மாணாக்கர் என்னும் பெயருப்கேற்ப மாண்புடையோராகத் திகழ்வது நன்று.
குழந்தை தொழிலாளர் தடைச்சட்டம்
தொகுபெற்றோர் தம் வறுமையைப் போக்க குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்,.குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பை பெற விரும்பும் முதலாளிகள் இவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள் .அந்நிலையை மாற்றவே குழந்தை தொழிலாளர் தடைச்சட்டம் இருக்கின்றன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள்
தொகுஅரசு மற்றும் தனியார் நினுவனங்கள் மக்களுக்கு பல்வேறு வகைகளில் சேவைகளை வழங்குகின்றன.சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் மாநில அல்லது மாவட்ட குறைதீர் மன்றங்களையோ ஙகர்வு பாதுகாப்புக் குழுவையோ அணுகித் தீர்வு காணலாம்.
கையூட்டு
தொகுமக்களுக்கு தொண்டாற்றும் பணியில் அலுவலர் ஈடுபட்டுள்ளார்கள்,. ஆட்சியாளருக்குத் துணைபுரிவது அவர்களின் கடமையாகும்.அவர்கள் தம் கடமையை ஆற்ற
அரசிடமிருந்து ஊதியம் பெறுகிறார்கள்.ஆயினும் மனசாட்சியை துறந்து அலுவலர் சிலர் செயல்படுவதும் கையூட்டு பெறுவதும் ஆங்காங்கு நிகழ்கின்றன.ஒருவருக்கு கையூட்டு கொடுப்பதும் குற்றம், அதனை பெறுவதும் குற்றம் என்பதே நமது சட்டம்.
தகவல் அறியும் உரிமை சட்டம்
தொகுஅரசியல் சாசனத்தின் 19வது பரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருக்கும் முழுமையான பேச்சுரிமை ; எழுத்துரிமை உண்டு;மேலும், அதற்குரிய தகவல் களைப் பெறவும் முழுஉரிமை உண்டு. காரணம் நமது நாடு சனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும் . சனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள். தங்கள்மீது எத்தகைய நிருவாகம் நடத்தப்படுகிறது என்பதனை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப்பணம் எந்த வகையில் பயனபடுத்த படுகிறது எனபதனை தெரிந்துகொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதனைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது.
குடிமக்களின் உரிமைச் சட்டம்
தொகுஇந்திய குடிமக்கள் தனியாகவோ ஓர் அமைப்பின் மூலமாகவோ தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6ன் படி தகவல் பெறலாம். தகவல் பெறுவதற்கெனத் தனி விண்ணப்பம் இல்லை உரிய அலுவலகத்திலுள்ள பொதுத்தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்தல் வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் எத்தனை தகவல்களை வேணடுமானாலும் பெறலாம் மாநில மைய அரசு சார்ந்த அதிகார அமைப்பிடமிருந்து தகவல் பெறுவதற்குப் பத்து ரூபாயை விண்ணப்ப கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும். வறுமைக்கோட்டிற்குக்கீ
ழ் வாழ்பவராக இருந்தால் தகவல் பெறுவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
வரதட்சனைக் கொடுமை தடுப்புச் சட்டம்
தொகுவரதட்சணை கொடுக்க முடியாத பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையினால் தற்கொலை செய்து கொள்கின்றன. இவற்றை தடுக்கவே 1961ல் வரதட்சணை வாங்குவோருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டது அத்துடன் ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டது. வரதட்சணை வாங்குதல் கொடுத்தல் சட்டப்படி குற்றமாகும்.[1]
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
தொகுஇந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமுகத்தை சார்ந்தவர்களை துன்புறுத்துல், கொடுமை செய்தல், அடிமை படுத்துதல், கொலை செய்தல் போன்றவற்றிற்கு எதிராக அமைக்கப்பட்டதுதான் வன்கொடுமை தடுப்பச்சட்டம் ஆகும். இவை 1995 ஆம் ஆண்டு நடைமுறை படுத்தப்பட்டது.
மாநிலச் சட்டங்கள்
தொகுபொதுச்சட்டங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எனத் தனித்தனி சட்டங்களும் உள்ளன. அவை அந்தந்த மாநிலங்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், சூழ்நிலை க்கு ஏற்ப அமைந்துள்ளன. மாநில. சட்டங்களோ அச்சட்டங்களை இயற்றுகின்றன. அவை அந்தந்த மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
சமயச் சார்புச் சட்டங்கள்
தொகுஇந்தியா சமயச் சார்பற்ற நாடு ;எனினும் மக்கள் தாம் பின்பற்றும் சமயங்களுக்கு ஏற்ப உரிமையுடையவர் ஆவர். இந்தியாவில் அவரவர் பின்பற்றிய சமயத்நிற்கேற்ற சட்டங்களும் உள்ளன. இந்து சமயத்தை சார்ந்தோருக்கு இந்து சட்டமும்,இகலாமியர்களுக்கு இகலாமிய சட்டமும், கிறித்தவ சட்டமும் உண்டு.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
தொகுகுற்றம் நடந்தால் உடனே காவலருக்கு தெரிவிப்பதும்,குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவி செய்வதும் பொதுமக்களின் கடமையாகும் அமைதியைப் பாதுகாப்பதிலும் குற்ற ஆய்வு செய்வதிலும் காவலருக்கு நம்மாலான உதவிகளைச் செய்தல் வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு அயராத உழைப்பு மட்டும் காரணமன்று;மக்கள் கடைப்பிடிக்கும் சட்டம் ஒழுங்கும் காரணமாகும். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்று திருக்குறள் கூறுவதனை எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டத்தை மதிப்போம் குற்றம் களைந்த வாழ்கை வாழ்வோம்.[2]