பயனர்:TNSE Rekhasaro DIET CHN/மணல்தொட்டி

தென்னிந்திய கல்வெட்டுகள்

நம் இளைய சமுதாயத்திற்கு இன்று தேவைப்படுவது தன்னம்பிக்கை! இத்தன்னம்பிக்கையை அளிப்பதற்கே இத்தகைய ஆய்வுகள் தேவைப்படுகின்றன! தமிழர் நாகரிகத்திற்கு ஆதாரமாக இருந்தவை ஓலைச் சுவடிகள்! அந்த ஓலைச்சுவடிகளைச் கொண்டு வடிக்கபட்டவையே கல்வெட்டுகள் ஆகும். இப்படிப்பட்ட கல்வெட்டுகளில் இதுவரை எந்த அரசன் எங்கே வென்றான்,எந்த அரசன் என்போது வாழ்ந்தான் என்ற பாங்கிலேயே ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு உள்ளது.இந்தப் பாங்கு அல்லாமலும் வேறு எத்தனையோ நோக்குகளுக்காகவும் தமிழ்க்கல்வெட்டுகள் இடம் தருகின்றன. இக்கல்வெட்டுகள் தமிழர்களின் சொத்து ஆகும்.

பழந்தொழில்கள் பற்றிய கல்வெட்டுகள் தொகு

1) பரகேசரிவர்மன் உத்தமச்சோழன் காலத்தியே செப்புப்பட்டயத்தில் பட்டசாலியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டசாலியர் என்போர் பட்டுத் துணிகள் நெய்வோர் இவர்கள் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான ஊரகம் என்ற ஊரில் பட்டுசாலியர்கள் வாழ்ந்த்தை இப்பட்டயம் தெரிவிக்கின்றது.[1] 2)குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டில் (மதுராந்தகம் தாலுகா செய்யூரில் உள்ள கல்வெட்டு) உப்புத்தொழில் செய்வோர் பற்றி பேசப்பட்டுயுள்ளது.

குடிபெயர்தல் பற்றிய கல்வெட்டுகள் தொகு

1) முதலாம் குலோத்துங்கசோழன் திருவாலங்காட்டு கல்வெட்டி 25 குடும்பங்கள் குடியேற்றம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடபட்டுள்ளது 2) விக்கிரமசோழதேவரின் கல்வெட்டில் ஊரே அழிந்த்தாம் குடிகள் சிதறி ஓடி வேறோரு நாட்டில் குடியேறினர் என கூறியுள்ளர்.

பெண்கள் பற்றிய கல்வெட்டுகள் தொகு

1) விரிஞ்சிபுரம் என்ற ஊர் கோயில் கல்வெட்டில் பெண்ணுக்குப் பொன்னைப் பரிசப்பணமாக தந்து அப்பெண்ணை மணந்தாலோ அல்லது பொன்னை வாங்கிக் கொண்டு பெண்ணை கொடுத்தாலோ அவர்கள் பிராமண சமுகத்தை விட்டு விலக்கி வைக்கப்படுவர். 2)இராசநாராயணச்சம்புவராயர் என்ற மன்னரின் கல்வெட்டில் நல்லாத்தாள் என்ற பெண் வைகைத்திருமலை மீது சமணத்தெய்வ உருவைப் பிரதிஸ்டை பண்ண ஏற்பாடு செய்தாள் என கூறப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கோயில் கல்வெட்டு தொகு

1)”நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி” என்ற கல்வெட்டில் இராசராசன் கோயில்கள் கட்டியது மட்டுமல்லாம் கோயிலில் பற்பல பொருட்களையும் செய்வதற்கு தங்கம் கொடுத்தை பற்றி உள்ளது. 2)எண் 24 ஆம் கல்வெட்டில் கடவுளை குளிப்பாட்டுயும் போது சண்பக மொட்டு,ஏலக்காய் அரிசி, மற்றும் இலாமிச்சம் போன்றவற்றை தண்ணீரில் கலந்து சிலைகள் மீது ஊற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது.மேலும் சில தமிழ்பிராமி கல்வெட்டுகள் குறித்த தகவல்களையும் நாம் அறியலாம். [2]

மேற்கோள்கள் தொகு

  1. முனைவர் சு.செளந்தரபாண்டியன் - சமுதாய நோக்கில் கல்வெட்டுகள் -பக்கம் 27
  2. https://groups.google.com/forum/#!msg/mintamil/y9tCWkFsmYE/VgnH4Qgv84QJ