பயனர்:Tnse jegatheeswari kar/மணல்தொட்டி உருவாக்கம் - 7
ஃபிலாலஜி
ஃபிலாலஜி என்பது வரலாற்று மூலங்களிலிருந்து மொழியைப் பற்றி படிப்பது ஆகும். இது இலக்கியத் திறனாய்வு, வரலாறு மற்றும் மொழி நூலாராய்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஃபிலாலஜி என்பது பொதுவாக இலக்கிய புத்தகங்களைப் பற்றியும், எழுதப்பட்ட பதிவுகள் பற்றியும் அதன் நம்பகத் தன்மைமய நிலை நாட்டுதல் பற்றியும் அதன் மூலத்தைப் பற்றியும் மற்றும் அதன் பொருளை உறுதி செய்தலைப் பற்றியும் வரையறுப்பதாகும். இவ்வகை ஆராய்ச்சி செய்பவர் பிலாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். பிலாலஜி என்பது ஆங்கிலத்தில், அதன் பழைய உபயோகமான, ஒப்புமை மற்றும் வரலாற்று நூலாராய்ச்சிையப் பற்றியதாகும்.
தொன்மை வாய்ந்த மொழிகளைப்பற்றி அறியும் கல்விக்கு கிளாசிகல் பிலாலஜி எனப்படும். கிளாசிகல் பிலாலஜி பெர்காமம் மற்றும் அலெக்சாண்டிாியா ஆகிய நூலகங்களிலிருந்து 4-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது கிரேக்க மற்றும் ரோமானிய பேரரசுகளால் தொடர்ந்து வளர்க்கப்பட்டது. மொழி ஆராய்ச்சி மற்றும் இசுலாமிய பொற்காலத்தில் பாதுகாத்து மேம்படுத்தப்பட்டது. இறுதியாக மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பிய கல்வியாளர்களால் வளர்க்கப்பட்டது. இதனுடன் ஐரோப்பிய மொழிகளான ஜெர்மன், செல்டிக், யுரேஷியன் மற்றும் சமஸ்கிருதம் , பெர்சியன், அரேபியன், சைனீஷ் ஆகிய மொழிகள் இணைந்தன. இந்தோ - ஐரோப்பிய ஆராய்ச்சியானது இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் ஒப்புமையை ஆராய்ச்சி செய்தது. பெர்டினட் டீ சாசாின் ஒரே காலத்தில் நிகழக்கூடிய பகுப்பை வலியுறுத்தினார். இது வரலாற்று பகுப்பிலிருந்து வேறுபட்டது.
இந்த வேறுபாட்டைத் தொடர்ந்து கட்டமைப்பியல் உருவானது. அத்துடன் சாம்ஸ்கியின் மொழி ஆராய்ச்சி சொற்றொடாில் முக்கியத்துவம் கொடுத்தது
சொல் வரலாறு
தொகுபிலாலஜி (philology) என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான (philologia) பிலாலஜியா என்ற சொல்லிலிருந்து உருவானது பிலாஸ்(philos) என்றால் அன்பு என்றும் (logos) என்றால் கற்றல் என்றும் பொருள்படும். அதாவது பிலாலஜி (philology) என்பது கற்றலை நேசித்தல் என்று பொருள் கொள்ளலாம். லத்தீன் மொழியில் இந்தச் சொல் சிறிது மாறுபட்டு காணப்படுகிறது. பிறகு 16-ம் நூற்றாண்டில் ஆங்கில மொழியில் "லவ் ஆப் லிட்ரச்சர் என்ற பொருளில் நுழைந்தது.
மேற்கோள்கள்
தொகு
- Philology in Runet—(A special web search through the philological sites of Runet)
- v: Topic:German philology
- (இத்தாலியம்) Rivista di Filologia Cognitiva
- CogLit: Literature and Cognitive Linguistics
- Institute for Psychological Study of the Arts, University of Florida
- A Bibliography of Literary Theory, Criticism, and Philology (ed. José Ángel García Landa, University of Zaragoza, Spain)
- Asociación de Jóvenes Investigadores Filólogos de la Universidad Complutense de Madrid (AJIF-UCM)