குஷ்டவ் ஸ்ட்ரெஸ்மென்

(பயனர்:Tnse jegatheeswari kar/மணல்தொட்டி 20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குஷ்டவ் ஸ்ட்ரெஸ்மென்

Gustav Stresemann
Chancellor of Germany
பதவியில்
13 August 1923 – 30 November 1923
குடியரசுத் தலைவர்Friedrich Ebert
முன்னையவர்Wilhelm Cuno
பின்னவர்Wilhelm Marx
Foreign Minister of Germany
பதவியில்
13 August 1923 – 3 October 1929
அதிபர்Himself (1923)
Wilhelm Marx (1923–1925, 1926–1928)
Hans Luther (1925–1926)
Hermann Müller (1928–1929)
முன்னையவர்Hans von Rosenberg
பின்னவர்Julius Curtius
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1878-05-10)10 மே 1878
Berlin
இறப்பு3 அக்டோபர் 1929(1929-10-03) (அகவை 51)
Berlin
அரசியல் கட்சிNational Liberal Party (1907–1918)
German Democratic Party (1918)
German People's Party (1918–1929)
துணைவர்Käte Kleefeld
பிள்ளைகள்Wolfgang
Hans-Joachim

குஷ்டவ் ஸ்ட்ரெஸ்மென்[10 மே 1873-3அக்டோபர் 1929]ஒரு ஜெர்மானிய அரசியல்வாதி மற்றும் அரசியல்மேதை ஆவார்.இவர் 1923-ல் 102 நாள் மட்டுமே அமைச்சராக இருந்தார்.1923-1929-ல் வெய்மர் குடியரசு காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.1926-ல்வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார்.

இவருடைய சாதனைகளில் குறிப்பிடத்தக்கது ஜெர்மனிக்கும்,பிரான்சிற்கும் இடையே இருந்த முரண்பாட்டைக் கலைந்து,இணக்கமான சூழலை ஏற்படுத்தியது. இதற்காக அரிஷ்டைடு பிரியண்ட் மற்றும் குஷ்டவ் ஆகிய இருவருக்கும் 1926-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.வெர்மர் குடியரசு ஆட்சியில் அரசியல் நிலையற்ற தன்மை,அரசு சிரத்தன்மை இல்லாமல் இருந்தது,குறுகிய கால ஆட்சியிலும்,குஷ்டவ் செல்வாக்குமிக்க முக்கிய அமைச்சராக திகழ்ந்தார்.இவருடைய அரசியல் வாழ்க்கையில் மூன்று முறை லிபரல் கட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.வெர்மர் குடியரசு காலத்தில்,குஷ்டவ் ,ஜெர்மானிய மக்களிடையே ஒரு சக்தி வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார்.

இளமைக் காலங்கள்

தொகு

ஸ்ட்ரெஸ்மென் மே 10 1878-ல் பெர்லின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கொபெனிக்கர் ஸ்ட்ரெப் என்ற ஊரில் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார்.அவருடைய அப்பா மதுபான விற்பனையாளராகவும் மதுபான கடையும் வைத்து நடத்தி வந்தார்.அதிக வருமானத்திற்காக வாடகைக்கு விட்டு சம்பாதித்தார்.இவருடைய குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது.ஆனால் குஷ்டவிற்கு தரமான கல்வி கிடைக்க பொருளாதார உதவி கிடைத்தது.குஷ்டவ் ஒரு சிறந்த மாணவர்.குறிப்பாக ஜெர்மன் இலக்கியம் மற்றும் கவிதைகளில் சிறந்து விளங்கினார்.ஆசிரியராக இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று நினைத்தார்.ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாடம் மொழிப்பாடம் மற்றும் இயற்கை அறிவியல்.ஆனால் இப்பாடங்களில் இவருக்கு ஆர்வம் இல்லை.ஆகையால் பள்ளியை விட்டு வெளியேறினார்.ஆகையால் 1897-ல் பெர்லின்ல்கலைக்கழகத்தில் அரசியல் பொருளாதாரம் படித்தார்.படிக்கும் காலங்களில்,முக்கிய கொள்கை சார்ந்த குறிப்பாக,ஒப்புடைமை சார்ந்த ஜெர்மானிய விவாதங்களில் பங்கேற்றார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலங்களில்,மாணக்கர்களால் உருவாக்கப்பட்ட பர்சென்சாப்டன் இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டார்.பர்சென்சாப்டன் இயக்கத்தின் முற்போக்குக் கொள்கையின் தலைவரான, கான்ராட் கஸ்டன் என்பவரால் நடத்தப்பெற்ற அல்ஜிமென் டுயெட்ஜி யுனிவர்சிடாட்ஸ் ஸ்செய்டங் என்ற இதழின் தொகுப்பாசிரியராக 1898-ல் ஆனார்.இவருடைய பகுப்புகள் பெரும்பாலும் அரசியலைச் சார்ந்ததாகவே இருந்தது.அவர்காலத்திய அரசியல் கட்சிகளைப் பற்றி எழுதப்பட்டதால் இவருடைய பகுப்புகள் ஏதாவது ஒருவகையில் நீக்கப்பட்டன.இவருடைய வாழ்க்கை முழுவதும், இவரது கொள்கையான முற்போக்குடைமை மற்றும் தேசியவாதம் ஆகியவற்றில் தீவிரமாக இருந்தார்.1898-ல்

ஸ்ட்ரெஸ்மென் பெர்லின் பல்கலைக்கழகத்திலிருந்து விலகி,லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்தார்.1901-ல் தனது ஆராய்ச்சியை முடித்து பழரசத் தொழிற்சாலையைப் பற்றிய தனது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார்.இவரது ஆராய்ச்சிக் கட்டுரை அதிக மதிப்பெண்ணைப் பெற்றது.

 
Stresemann's tomb at the Luisenstädtischer Friedhof Cemetery, Berlin

Bibliography

தொகு

Historiography

தொகு
  • Gatzke, Hans W. "Gustav Stresemann: A Bibliographical Article." Journal of Modern History 36#1 (1964): 1-13. in JSTOR
தொகு
அரசியல் பதவிகள்


முன்னர் Minister of Foreign Affairs
1923-1929
பின்னர்
முன்னர் Chancellor of Germany
14 August - 23 November 1923
பின்னர்

வார்ப்புரு:GermanChancellors வார்ப்புரு:GermanFMs வார்ப்புரு:First Stresemann cabinet வார்ப்புரு:Second Stresemann cabinet வார்ப்புரு:First Marx cabinet வார்ப்புரு:Second Marx cabinet வார்ப்புரு:First Luther cabinet வார்ப்புரு:Second Luther cabinet வார்ப்புரு:Cabinet Muller II

வார்ப்புரு:Nobel Peace Prize Laureates 1926-1950

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஷ்டவ்_ஸ்ட்ரெஸ்மென்&oldid=3731573" இலிருந்து மீள்விக்கப்பட்டது