வெப்பமயமாதல், உலகமயமாதல் ,குறையும் விளைநிலங்கள்

:வெ.ரா.ஆனந்த் சென்னை - 63

புவி வெப்பமயமாதல் இந்த வார்த்தை அண்மையில் தொடாத பத்திரிகைகள் இல்லை, தொடாத ஊடகங்கள் இல்லை! ஏற்கேனவே இதைப்பற்றி ஐ.நா பல குழுக்களை நிறுவி பல தொடர் அராய்ச்சிக்கு அறிவுருத்தியது! அப்படி அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் முக்கியமான இரண்டு குழுக்கள், ஒன்று EPA ( ENVIRONMENTAL PROFECTION AGENCY – 1994), இரண்டாவது IPCC (International Panel on Climate Change). இந்த குழுக்கள் கடந்த பத்து ஆண்டுகளில் பல அராய்ச்சிகளை செய்தது! இதன் தாக்கம்தான் இன்று புவி வெப்பமயமாதல் பற்றி உலகமே இன்று கவலை கொண்டுள்ளது! இந்த IPCC (International Panel on Climate Change) குழு 1996 முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! இது அண்மையில் அளித்த ஒர் அறிக்கையில் வருங்காலத்தில் இந்த உலகத்தின் வெப்ப நிலை,

• தற்கால இந்திய (அதாவது 1960 முதல் 1990 காலகட்ட) சராசரி வெப்ப நிலை 26.76 செல்க்ஷீயஸ் • வருங்கால இந்திய (அதாவது 2070 முதல் 2099) காலகட்ட சராசரி வெப்ப நிலை 30.76 செல்க்ஷீயஸ்

மேலோட்டமாக பார்த்தால் பெரிய வியப்பில்லை. ஆனால் சராசரி வெப்ப நிலை 30.76 ć வர வேண்டுமெனில் , அந்த ஆண்டின் அதிக பட்ச வெப்பம் கிட்டத்தட்ட 38 ć முதல் 40 ć வரையும், குறைந்த பட்ச வெப்பம் 20 ć முதல் 32 ć வரை வளர வாய்பிருக்கிறது! அதாவது சென்னை பாலைவனமாகிப்போகும். இதன் முக்கிய காரணம் பூமியின் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது! இயற்கை வளமும், நாட்டின் வளர்ச்சியும் ஒன்றோடோன்று தொடர்புடையது.அது சரியாக கையாளப்படுவதில்லை என்பதே சரி! உண்மையில் வளர்ந்த நாடுகள் இதை சரியாக புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் சுயநல ஆதிக்கத்தால் பாதிக்கப்படுவது இந்தியா போன்ற வளரும் நாடுகள்! இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், புவி வெப்பமயமாதல் , உலகமயமாதல் ஒன்றோடோன்று தொடர்புடையதுதான்! ஒன்றை ஆராய்வோம், இன்று தொழிற்சாலை அமைக்க முதல் தேவை நிலம்,அதாவது உலகமயமாதல்! இதுதான் அரசாங்கம் நிலம் கையகப்படுத்தபடுவதன் நோக்கம். ஆனால் எந்த நிலம் கையகப்படுத்தபடுத்தப்பட வேண்டும்?? ஒரு நிலம் விவசாய நிலம் எனில் அதுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தக்கூடாது! குறிப்பாக அதை சுற்றி நகர வளர்ச்சி தடை செய்யப்பட வேண்டும். நகரம் வளர்ந்தால் நிலம், காற்று, தண்ணீர்,வானம், வெப்பம்(நெறுப்பு) என்ற பஞ்ச பூதங்களும் பாதிக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட படி உலகமயமாதலால் தொழில் வளர்கிறது, தொழிலால் நகரம் வளர்கிறது, வளர்ச்சியால் இயற்கை மாசுபடுகிறது. அப்படியெனில் தொழில் வளரக் கூடாதா?? அதுவல்ல கொள்கை! நிலம் கையகப்படுத்தபடுவதற்க்கு முன் அது எந்த நிலம் என்றால், பாலை நிலம். சரி எதல்லாம் பாலை நிலம், இயற்கையாக பாலையாய் இருக்க வேண்டும்! பாலையாய் மாற்றக்கூடாது (சென்னை பாலையாய் மாற்றப்பட்டது!!). அப்படியெனில் தமிழகத்தில் உண்மையில் எத்தனை பாலைநிலங்கள் இருந்தது? அப்படி என்றால் தமிழகத்தில் தொழிற்வளம் எப்படி பெறுகும்? இது தமிகத்துக்கு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். அப்படியெனில் அரசாங்கத்தின் தொழிற் கொள்கை என்ன?

ஆதாவது இயற்கை வளம் அழிக்கப்படும் தொழில்கள் கண்டிப்பாக பாலை நிலத்தில்தான் அமைக்க வேண்டும்! இதற்கு முதல் தடை மொழிவாறி மாநிலமாக இந்தியா பிரிக்கப்பட்து| அன்று சரியாக இருந்திருக்கலாம்? ஆனால் இன்று? உலகம் ஒரு குடையின் கீழ் உலகமயமாக்கப்பட்டுள்ளது? இரண்டாம் உலகப்போரை துவங்கிய ஐரோப்பிய நாடுகள்தான் இன்று ஒரு நாணையத்தின் கீழ் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அரசியலே இந்த அரசாங்கத்துக்கு தலைவலியாய் போகும் என்றாலும் வியப்பில்லை! சரி இயற்கைக்கு வருவோம், இன்று தொழிற்சாலைகளை (இயற்கை வளம் அழிக்கப்படும் தொழில்) எல்லா இடங்களிலும் துவங்குவதால் தான் விவசாயம் ஆழிக்கப்படுகிறது. நகரம் வளர்கிறது. மக்கள் தொழிற்சாலைகளுக்கு அருகில் குடியேருகின்றனர். இதனால் விலைவாசி ஏறுகிறது! காரணம் பொருட்கள் அருகில் கிடைக்காமல் தொலைவிலிருந்து வருவதால் விலைவாசி ஏறுகிறது! அப்பொழுது எப்படி, எங்குதான் தொழிற்துவங்குவது? அதுதான் உள்கட்டமைப்பு (infrastructure Development) குறிப்பாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்து. மக்கள் காலையில் மதுரையிலிருந்து கிளம்பி பெங்களூர், விசாகப்பட்டினம், ஐதராபாத், சென்னை போன்ற நகரங்களில் வேலை செய்துவிட்டு இரவில் மீண்டும் மதுரையில் தூங்க வேண்டும். அப்படியேனில் முதலில் அமைக்கப்பட வேண்டியது, அதி விரைவு ரயில்! ஆனால் உண்மையில் நாம் இன்னும் யோசிக்கவேயில்லை! சென்னையில் பத்து கிலோமீட்டர் அமைக்கவே ஐந்து வருடமெனில் இந்தியா முழுவதும் இணைக்க ???...... ஆனால் சீனாவில் இந்த ரயில் ஓட துவங்கிவிட்டது! உண்மையில் இந்தியக் குடிமகன்!!!! குறிப்பாக 100% தமிழர்களும் தமிழகம் தாண்டி வேலை செய்ய முடியுமா??? ஆனால் பாரதி என்றோ பாடிவிட்டான், “சிந்து நதியின் இசை நிலவினிலே...... “ என்று தொடங்கி, இலங்கைக்கு பாலம் அமைப்போம் என்பது வரை !! அமைக்க சொன்ன அவன் தீரக்கதரிசி! ஆனால் நாம் மனித உயிர்களைக் கூட இலங்கையிடமிருந்து காப்பாற்ற வில்லை!!! உலகமயமாதல், வெப்பமயமாதல், உள்கட்டமைப்பு, நிலம், விவசாயம் , மாநிலங்கள், மொழிகள் இவையெல்லாம் ஒரு குடையின் கீழ் வைத்து அராயாமல் இருந்தால் ?, யோசித்துப்பாருங்கள் வருங்காலத்தில் ஓர் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு , இந்திய இறக்குமதிகள் நின்று போனால் ?..... இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் ! ஆனால் மற்ற நாடுகள் சுதாரித்து பல வருடங்களாகிவிட்டன! அதுதான் உலகமயமாதல்! ஐரோப்பிய நாடுகளின் ஒரு நாணைய திட்டம், சீனாவின் அதி விரைவு ரயில் போன்றவை!! சில எடுத்துக்காட்டுக்கள் தான். உலக வல்லுனர்களின் கருந்தும் மூன்றாம் உலகப்போர் உலக பஞ்சத்தால்தான்! சிந்தியுங்கள் இந்தியாவை (தமிழகத்தை) காப்பாற்றுங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:VRA&oldid=886703" இலிருந்து மீள்விக்கப்பட்டது