VRA
பத்திரிகைத் தரமும், அதன் ஆசிரியரும்
கட்டுரை: வெ.ரா.ஆனந்த்
தொகுமுன்னுரை:
பத்திரிகைத் துறை என்பது, ஒரு மாயத்துறையன்று! இது ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டையே வழி நடத்தும் ஆசிரியனாக, ஏணியாக திகழ வேண்டும்! ஒரு தரமான பத்திரிகை, எந்த ஓர் தனித்துரைக்கும் தனிமுக்கியத்துவம் தரக்கூடாது! தனித்துவம் என்பதும், தனிமுக்கியத்துவம் என்பதும் முற்றிலும் எதிர்மறை நிலைகள்! தனித்துவம் என்பது “ஒரு ஈடுபாடு” என்பதே பொறுத்தமான நிலை! ஆனால் தனிமுக்கியத்துவம் என்பது ஒரு துறைசார்ந்த பத்திரிகையைக் குறிப்பதேயாகும்! எடுத்துக்காட்டாக, “கணினிப் பத்திரிகை”, “வணிகப் பத்திரிகை”, “தொழிற்ப்பத்திரிகை”, “அரசியல் பத்திரிகை” என்று பலவகைப் பத்திரிகைகள் இன்னாளில் பிரபலம்! எந்த துறைசார்ந்த பத்திரிகையைக்கும் வாசகர்கள் என்பது அந்த துறைசார்ந்த வல்லுனர்களே தொண்ணுறு சதவீதம்! எனவே, ஒரு ஒட்டுமொத்த சமுதாயமே படிக்க வேண்டுமாயின், அது தினசரி பத்திரிகைக்குத்தான் சாத்தியம்! அது ஒரு தினசரி பத்திரிகைக்கையின் பொறுப்பையும் அதிகரிக்கிறது! அதாவது ஒரு தினசரி பத்திரிகை, மேற்கூறிய சமுகப்பொருப்புடன் பணியாற்றுவதற்கு அதன் ஆசிரியரும், நிறுவனருமே முழுப்பொறுப்பேற்றக வேண்டும்!
சமுகப்பொறுப்பு
சமுகப்பொறுப்பு என்றால், அந்த நிறுவனர் நிர்வாகத்தில் மட்டுமே (Administration) தலையிட வேண்டும், அவர் தலைமையாசிரியர் அல்லது ஆசிரியரக்குழுவுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்! ஒரு பத்திரிகையாசிரியர் ஒர் அரசாங்கத்துக்கு அறிவுரை சொல்லும் நிலையில் சுதந்திரம் தேவை! சமுகப்பொறுப்பும், தினசரி பத்திரிகையும் ஒன்றுசேர்ந்து, அதன் ஆசிரியர் பன்முனை வித்தகராயின், அந்த பத்திரிகை, சமுதாயத்தின் பொற்கீறீடமாய் விளங்கும் என்பதில் அய்யமில்லை! ஆனால் இன்று இந்தியாவில் எத்தனைப் பத்திரிகைள் இந்தப் பொறுப்பை சுமந்துக் கொண்டிருக்கின்றன??
நோக்கம்
சமுகப்பொருப்பு என்றாலே, தன்னலம், சுயசார்பு, பணத்தாசை, என்ற எல்லவற்றையும் தாண்டி கடமையாற்ற வேண்டும்! அதிலும் பத்திரிகையாசிரியர் என்றால், சமுக மருத்துவராய் பணியாற்ற வேண்டும், இந்த சமுகமும், ஏன் பத்திரிகையும் கூட சரியாக பணியாற்றவில்லை யெனில், அதை சரிசெய்யும் பொறுப்பு பத்திரிகையாசிரியரையே சாரும்மாதலால், அவரை “சமுக மருத்துவர்” என்றே அழைக்கின்றனர்! எனவே, சமுகப்பொருப்புள்ள ஓர் பத்திரிகையாசிரியர், எப்படி ஒரு பத்திரிகையை வகைப்படுத்த வேண்டுமென்று ஆராய்ந்து, அப்படி வகைப்படுத்தப்பட்டதில், ஒரு பகுதியை இந்த ஆய்வுரைக்கு மூலமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது!
தரமான பத்திரிகை என்றால் என்ன?
ஒர் தரமான பத்திரிகையின் எனில், கிழ்கண்ட பகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்! அது மற்ற தரமான பத்தரிகையிலிருந்து காப்பியடித்தாலூம் தப்பில்லை! அதன்படி ஓரு பத்திரிகை பகுதிகள் இப்படித்தான் பிரிக்கப்பட வேண்டும்! 1. தேசிய, மற்றும் மாநிலச் செய்திகள் 2. சமுகப் பிரதிபலிப்பு ! 3. ஆசிரியர் தலையங்கம் ! 4. வாசகர் பகுதி ! 5. சமுகப் பிரதிபலிப்பு ! 6. மாவட்ட செய்திகள்! 7. கல்வி பகுதி ! 8. அறிவியல் பகுதி ! 9. வணிகப் பகுதி ! 10. அரசியல் பகுதி ! 11. கட்டுரைப் பகுதி ! ( இந்த கட்டுரைப் பகுதியும் பன்முக
அறிஞ்சர்கள் மற்றும் படைப்பாளிகளின் கட்டுரைக் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது! )
12. விளையாட்டுப் பகுதி !
இன்றைய காலகட்டத்தில் MASS COMMUNICATION என்ற ஆங்கில வார்த்தை மிக பிரபலம்! அதன் சரியான தமிழ் வார்த்தை “திரள் தொடர்பு” ( MASS COMMUNICATION ) என்று கொள்ளலாம்! இந்த திரள் தொடர்பு அதிவளர்ச்சிக் கண்டுள்ளது! வருங்காலத்தில் வரலாற்றாசிரியருக்கு இது ஓர் வரப்பிரசாதமாய் அமையுமென்பதில் அய்யமில்லை! ஏனெனில் வரலாற்றில் எந்த ஒரு அய்யமுமின்றி, நடந்தது நடந்ததாகவே பதிவு செய்யப்படும்! தேவைப்படுமெனில் காட்சிகளும் கூட பதிவாகும்! எடுத்துக்காட்டாய்
• அண்மையில் ஜப்பானில் நடந்த சுனாமி மீட்புக்கு இந்த தொலைத் தொடர்பும், திரள் தொடர்பும் அருமையாக தன் கடமையை நிரைவேற்றியுள்ளது! அதாவது, இந்த தொலைத் தொடர்பு (TELE COMMUNICATION), சுனாமி நடந்த அடுத்த முப்பது நிமிடங்களில் உலகின் கண் முன்னே நேர்முகமாய் நிறுத்தியது சுனாமியை ! அதை, திரள் தொடர்பு (MASS COMMUNICATION) அழகாய் தோகுத்து அதை சேர்கவேண்டிய நேரத்தில் அரசாங்கத்திற்கு தெரிவித்து, முடிந்தவரை உயிரிழப்பை குறைத்தது என்றால் அது மிகையில்லை!! • மேலும் வருங்கால சுனாமி ஆராய்சிக்கும் பல அருட்பெரும் உதவி புரியும், இந்த திரள் தொடர்பு!
ஒரு நாட்டின், குறிப்பாக இந்தியாவில் திரள் தொடர்பு, தொலைக்காட்சி தவிர, அச்சு துரையிலும் அரியதொரு வழியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது! தொலைக்காட்சி ஓர் உயிரெனில், அச்சு துரை மனித மூளைக்கு சமம்! மூளை இருந்தால்தான் உயிரால் உபயம்! எனவே எந்தவொரு நிலைப்பட்டிற்கும் அச்சு துரை அதாவது பத்திரிகையின் பங்கு முக்கியம்! ஆனால் இந்தியாவில் ஆங்கில தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையின் வளர்ச்சி போல், மாநில அளவில் முன்னேற்றமடையவில்லை என்பது சற்று கவலைதரும் ஒன்றுதான்!
முடிவுரை:
இவ்வளவு அதிகார வரம்புடைய இதை வழிநடத்த ஒரு பொருப்பான ஆசிரியரின் கடமையும் தெளிவாகிறது! இதனால் ஒரு பத்திரிகையின் கட்டுரைகளை ஆய்வுக்குக்கூட எடுத்துக்கொள்ளும் அளவுக்கு தரம் நிரந்தரமாக இருக்க வேண்டும்! எனவே, தினசரி பத்தரிகைகளே, நாட்டை திருத்தும்முன் , முதலில் நீங்கள் உங்களுக்கென கொள்கை வழியை வகுத்துக் கொள்ளுங்கள்! எந்த நிலையிலும் கொள்கையிலிருந்து தடம் மாறாதீர்கள்! ஒரு சில பத்தரிகைகள் தமிழகத்தில் சரியான பாதையில் செல்கிறது என்பதும் உண்மை!