பயனர் பேச்சு:ஜீவா.பிரபா/மணல்தொட்டி

சாதி பாகுபாடு

தீண்டாமை

சாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் ஈடுபட விடாது மக்களை மந்தப்படுத்தும், முடக்கிப் போடும், ஊனப்படுத்தும் அமைப்பிது.’ இதனை உலகின் மிகப் புகழ்வாய்ந்த இந்தியரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மறுதலித்தார். சாதி இந்தியச் சமுதாயத்தின் மாண்பைக் குறித்திடுவதாக அவர் நம்பினார். 1921இல் அவரது நவஜீவன் என்னும் குசராத்தி ஏட்டில் எழுதினார்: ‘இந்துச் சமுதாயத்தால் நிமிர்ந்து நிற்க முடிகிறது என்றால், அது சாதி அமைப்பின் மீது நிறுவப்பட்டிருப்பதே காரணம்… சாதி அமைப்பை அழித்து மேற்கத்திய ஐரோப்பியச் சமுதாய அமைப்பை ஏற்றுக் கொள்வதென்றால், சாதி அமைப்பின் ஆன்மாவாகத் திகழும் குலத் தொழில் கொள்கையைக் கைவிடுவதாகத்தான் பொருள். குலக் கொள்கை ஒரு நிலைபேற்றுக் கொள்கை ஆகும். இதை மாற்றுவது சீர்குலைவை உண்டாக்கும். நான் பிராமணரை வாழ்நாள் முழுதும் பிராமணர் என்றே அழைக்காது இருப்பேனேயானால் அவரால் எனக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. ஒவ்வொரு நாளும் பிராமணர் சூத்திரராகவும், சூத்திரர் பிராமணராகவும் மாறிக் கொண்டே இருந்தால் குழப்பமே மிஞ்சும்.’ அருந்ததி ராய்யின் ஆதங்கமே மாயாவதி போன்ற தலித் இனத்தை சேர்ந்தவர்களின் ஊழல்கள் தான் பிரதான படுத்தப்படுகிறது என்றும் இந்து மதம் மட்டுமே இந்தியாவின் இழிவுக்கு காரணம் என்றும்,தலித்துக்களின் அவல நிலைக்கு பார்ப்பன,பனியாவின் மேலாதிக்கமே இன்றும் காரணம் என்பதாக அக்கட்டுரை விரிகிறது.


இது போல் இந்தியாவின் வளர்சியை ஊக்குவிக்கும் அறிஞர்கள் அரசியல்வாதிகள் பலர், சாதி பாகுபாட்டை எதிர்து குறல் குடுக்க தயங்குகிரார்கள். ஏன்! சாதி அல்லது மத பாகுபாட்டையும் அதன் அடிப்படையில் தீண்டாமையை ஒளிப்தையையே கொள்கையாக் கொண்ட திராவிட அமைப்புகளே, அமைப்பினுள்[[சாதிய அடிப்படையில் உறிப்பினர்களிடம் பாகுபாடு காட்டுவதான் இன்றைய நடைமுறை.

இனப்பாகுபாடு பார்த்தல் என்பது அவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் ஒரு தனிநபரைப்பற்றி கற்பனையான எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்வது ஒரு பொலிஸ் அதிகாரி அல்லது பாதுகாவலர் போன்றவர்கள் ஒரு நபரின் சாதி, நிறம், இனம், வம்ச பரம்பரை, மதம் அல்லது பிறப்பிடம் என்பனவற்றின் அடிப்படையில், வழக்கமாக இப்படித்தான் நடைபெறுகின்றது என்ற நினைப்பில், ஒரு தீர்மானத்தை எடுக்கும்போது சாதிப் பாரபட்சம் காட்டப்படுகிறது. பழங்காலதில்தான் சாதி வெறி என்றால், இந்தக் காலத்தில் இப்படியொரு கொடுமையா என்று நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, ம.பி. மாநிலத்தில் நடந்துள்ள தீண்டாமைக் கொடூரம்.ம.பி.யின் சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள கணேஷ்புரா கிராமத்தில் கடந்த ஜூன் 13 அன்று, பொதுக் குழாயில் ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி தண்ணீர் பிடிக்கச் சென்றபோது, அந்த வழியாகச் சென்ற புரான் யாதவ் என்ற ஆதிக்க சாதிவெறியனது டிபன் பாக்ஸ் மீது அந்தச் சிறுமியின் நிழல் விழுந்ததாம். அதனால் அவனது உணவு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதைத் தொடர்ந்து, அந்த ஆதிக்கசாதி வெறியனின் மனைவியும் குடும்பத்து பெண்களும் திரண்டு அச்சிறுமியை நடுத்தெருவில் இழுத்துப்போட்டு மிருகத்தனமாகத் தாக்கி, இனிமேல் தண்ணீர் எடுக்க பொதுக்குழாய் பக்கம் வந்தால் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இத்தாக்குதலின்போது, அமைதியான பார்வையாளர்களாக இருந்த அப்பகுதிவாழ் ஆதிக்க சாதியினருக்கு இது சமூகக் கொடுமையாகவே தெரியவில்லை.

நாடெங்கும் தொடரும் தீண்டாமைக் கொடுமையின் துலக்கமான வெளிப்பாடுதான் இது. தாழ்த்தப்பட்ட பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்கள் கடந்த மே மாதத்தில் உ.பி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்துள்ளன. மகாராஷ்டிராவின் அஹமத் நகர் மாவட்டத்தின் ஷிரடி நகரில், கடந்த மே மாதத்தில் சாகர் ஷேஜ்வால் என்ற ஒரு தலித் இளைஞர், அம்பேத்கரைப் போற்றும் பாடலை செல்போனின் ரிங்டோனாக வைத்திருந்த குற்றத்துக்காக மராத்தா சாதிவெறியர்களால் அடித்து உதைக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் ஏற்றி கொல்லப்பட்டார். உயர் கல்விக்கான இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் நுழைவுத் தேர்வில் தாழ்த்தப்பட்ட கூலித்தொழிலாளியின் இரண்டு மகன்கள் தெரிவு செய்யப்பட்டதைச் சகித்துக் கொள்ள முடியாமல், உ.பி. மாநிலத்தின் பிரதாப்கார் கிராமத்திலுள்ள அவர்களது வீட்டின் மீது ஆதிக்க சாதிவெறியர்கள் கல்லெறித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

இவற்றையெல்லாம் அதிர்ச்சியூட்டும் விவகாரமாகப் பார்க்கும் சமுதாயம்தான், கோயில்களில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பதையும், சவ ஊர்வலத்திற்கு தாழ்த்தப்பட்டோரை பறையடிக்கச் சொல்வதையும், சவ அடக்க வேலைகளை தாழ்த்தப்பட்டோரைச் செய்ய வைப்பதையும், வாடகைக்கு வீடு கேட்டால் நீங்கள் சைவமா, அசைவமா என்று வீட்டு உரிமையாளர்கள் நைச்சியமாக விசாரிப்பதையும் இயல்பான சமூகப் பழக்கவழக்கங்களாக ஆதிக்க சாதி மனோபாவத்துடன் அணுகுகிறது. நவீன காலத்திலும் இத்தகைய சாதியாதிக்கத்தை சகஜமான சமூகப் பழக்கவழக்கங்களாக மாகிவிடுமோ என்றதுதாம் என்றைய இளைய தலைமுறையின் போராட்டம்.

Start a discussion about பயனர்:ஜீவா.பிரபா/மணல்தொட்டி

Start a discussion
Return to the user page of "ஜீவா.பிரபா/மணல்தொட்டி".