tamil words are really very tough −முன்நிற்கும் கருத்து 125.22.251.206 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

எந்தக் கட்டுரையில் இவ்வாறு புரிந்து கொள்ளத் தடை இருந்தது எனக்கூறினால் எளிமைப்படுத்த முடியுமா எனப் பார்க்கலாம். சில வேளைகளில் துறை சார்ந்த சொற்கள் எம்மொழியானாலும் முன்னறிமுகமில்லையென்றால் புரிந்து கொள்வது கடிதாக இருக்கலாம். அவ்வேளைகளில் பொதுவாக அகரமுதலிகளை நாடலாம். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்#அகரமுதலிகள் தமிழ் விக்சனரி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். எளிய நடையில் மாற்றி எழுத முடிந்தால் நீங்களும் தொகுத்து உதவுங்கள். பொதுவாக தமிழ் சொற்கள் எவையானாலும் புரிந்து கொள்வதில் உங்களுக்குச் சிக்கல் இருந்தால் ஆங்கில விக்கிப்பீடியா உங்களுக்கு உதவக்கூடும். -- சுந்தர் \பேச்சு 06:53, 26 ஏப்ரல் 2009 (UTC)

தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:125.22.251.206&oldid=371090" இலிருந்து மீள்விக்கப்பட்டது