கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி

தொகு

நண்பரே கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு ஆக்கப்பட்ட உள்ளடக்கங்களை அருள் கூர்ந்து சேர்க்கவேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். கருவி ஆல்ஃபா பதிப்பில் உள்ளது, சோதனைக் கூடத் தரம் கூட கிடையாது. இதனால் உருவாகும் ஆக்கங்கள் தரம் குறைந்தும் இலக்கணப் பிழைகள் மலிந்தும் உள்ளன. இவற்றில் உள்ள பிழைகளைத் திருத்துவது கடினமான வேலை. கீழே காணும் வாக்கியங்களைப் பாருங்கள்

  • சோழர்கள் இராச்சியம் யாருக்கும் தெரியாத தெளிவற்ற நிலையில் வாடியது.
  • பின் அவர் தஞ்சாவூரை தலைநகராக ஆக்கியும் இந்த இடத்தில் நிசும்பாசுட னீகு ஒரு கோவில் கட்டப்பட்டது.
  • சோழ அரசர் ராஜா ராஜா சோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது
  • தெற்கில் இருந்து பாண்டியர்கள் நுழைந்தன
  • சோழ பேரரசு 1279 இல் இருந்து 1311 வரை பாண்டியர்கள் அங்கமாக ஏற்க வேண்டியதாயிற்று
  • மபார் சுல்தான்கள் படிப்படியாக உயரும் விஜயநகர பேரரசால் உறிஞ்சப்பட்டு இருந்தது.

இவையெல்லாம் பெரும் பொருள் மற்றும் இலக்கணப் பிழையுள்ள சொற்றொடர்கள். இவை போன்ற சொற்றொடர்கள் த. விக்கியில் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல என்பதால், கூகுள் கருவி கொண்டு உருவாக்கப்படும் அனைத்தும் விரைவில் விக்கியில் நீக்கப்படும்.

கருவியைப் பயன்படுத்தாமல், எளிய தமிழில் விசயங்களைத் தாங்களே எழுதலாமே?--சோடாபாட்டில்உரையாடுக 10:47, 25 சூன் 2011 (UTC)Reply


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:14.140.90.14&oldid=801887" இலிருந்து மீள்விக்கப்பட்டது