பயனர் பேச்சு:Aathavan jaffna/தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

நீங்கள் இக் கட்டுரையை அணுகி இருக்கும் விதம் சரியானதே. காமிக்சு, விளையாட்டு, பொழுதுபோக்குக்கள் போன்று விக்கியில் பங்களித்தலும் ஒரு ஈடுபாடாக வளர்ந்தால் பங்களிப்புக்கள் கூடும். விக்கிப்பீடியாவில் மட்டும் இல்லாமல் வேறு பல வழிகளில் பங்களிக்க முடியும். எ.கா ஒளிப்படங்கள், நிகழ்படங்கள் எடுத்து பொதுவகத்தில் பதிவேற்றுதல். சூரியப் பிரகாசு, மாகிர் மாதிரி நிரலாக்கம். அன்ரன் தாரிக் மாதிரி வரைகலை. தொடர்பாடல் பரப்புரை என்று பல பணிகள்.

விக்கியூடக மன்றத்தை பள்ளிகளில் உருவாக்குவது மிகவும் உதவும். தமிழில் தட்டச்சுப் பயிற்சி தேவைப்படின் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை ஒழுங்குபடித்தி நாம் உதவ முடியும். தமிழ் தட்டச்சு மட்டும் இல்லாமல், நிரலாக்கம், ஒளிப்படக்கலை, நிகழ்படக்கலை, வரைகலை, விக்கியில் தொகுப்பது போன்று ஒரு மாணவர் குழுவிற்கு ஈடுபாடு உள்ள, தேவையான திறன்கள் தொடர்பாக பயிற்சிகள் ஒழுங்கமைக்க உதவ முடியும்.

பள்ளியில் ஆசியர்கள் விக்கியில் பங்களிப்பதை ஒரு பயிற்சியாக வழங்கலாம். இதை விக்கியோடு இணைந்து செய்வது வரவேற்கத்தக்கது. இல்லாவிடின் அண்மையில் ஏற்பட்ட சிக்கல்கள் போல ஏற்படலாம்.

விக்கியில் இருந்து தகவல்களைப் பயன்படுத்தும் போது அவதனாமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் தவறனா தகவல்கல் இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். தகவல்கள் முழுமையாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே சுட்டப்பட்ட மூலங்களை பயன்படுத்தலாம். பேச்சுப் பக்கத்தை அவதானித்து மேலும் சிக்கல்களை அவதானிக்கலாம். மாணவர்கள் விக்கித் தகவல்களை, இணையத் தகவல்களை எவ்வாறு முறையாகப் பயன்படுத்தலாம் என்று விபரிக்கலாம். பெரும்பாலான ஆசிரியர்கள்/பள்ளிகள்/கல்லூரிகள் விக்கிப்பீடியாவை மேற்கோள் காட்ட விடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. --Natkeeran (பேச்சு) 01:36, 5 செப்டம்பர் 2013 (UTC)

மிக்க நன்றி நற்கீரன். தங்கள் கருத்துக்களை கருத்தில் கொண்டு தொகுக்கிறேன். மிக்க நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10
05, 7 செப்டம்பர் 2013 (UTC)
//பெரும்பாலான ஆசிரியர்கள்/பள்ளிகள்/கல்லூரிகள் விக்கிப்பீடியாவை மேற்கோள் காட்ட விடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.// இதற்குப் பெரும்பான்மைக் காரணம் மாணவர்கள் தேடி அறிந்து செய்து முடிக்கவேண்டிய ஆக்கங்கள்/ ஒப்படைகளை விக்கிப்பீடியாவில் உள்ளவற்றை அப்படியே வெட்டி ஓட்டுவதாகும். இதை ஆசிரியர்கள் மேற்கோளைக்கொண்டே அறிகின்றனர். அதன்காரணமாக விக்கிப்பீடியாவில் இருந்து அப்படியே தகவல் எடுக்க முடியாது. :( --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:53, 5 செப்டம்பர் 2013 (UTC)
இக் குறிப்புக்கள் பத்தி வடிவில் தொகுத்தெழுதப்பட வேண்டும். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:23, 10 செப்டம்பர் 2013 (UTC)


சுருக்கமாக:
  • பத்திரிகைக் கட்டுரை என்ற படியால் ஒரு பொது அறிமுகப் பத்தியும், இறுதியாக எல்லாவற்றையும் கோர்த்து ஒரு முடிவுப் பத்தி தேவை. அவை இரண்டையும் சேர்க்கவும். பின்னர் மீண்டும் பார்க்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:03, 11 செப்டம்பர் 2013 (UTC)

இறுதிப்படுத்தல்

தொகு

வணக்கம் ஆதவன். கட்டுரையை நாளைக்குள் இறுதிப்படுத்த முடிந்தால் நன்று. தேனியாரின் கட்டுரையில் இருந்து தகவல்கள் சிலவற்றைச் சேர்க்கலாம். --Natkeeran (பேச்சு) 21:18, 15 செப்டம்பர் 2013 (UTC)

Return to the user page of "Aathavan jaffna/தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்".