Bsivakanth
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி
தொகுபாடசாலை வரலாறு
தொகுவற்றாத வளம் கொழிக்கும் வன்னித் தொகுதியிலே முத்தென விளங்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலே புதுக்குடியிருப்பு என்னும் பிரதேசத்திலே வீரியத்துடன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பயணிக்கின்றது எமது கல்லூரி. புதுக்குடியிருப்பு வாழ் பெரு மக்களின் பெரு உதவியுடன் அன்றைய காலப்பகுதியில் எமது கல்லூரி நிறுவப்பட்டது.அன்று அதன் பெயர் சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை
எமது கல்லூரியின் முதல் தலைமை ஆசிரியராக விளங்கியவர் திரு மு .நேசரத்தினம் அப்போது ஆண்டு ஒன்று தொடக்கம் பத்து வரையிலான வகுப்புகளே இருந்தன. அவரை தொடர்ந்து திரு நமசிவய, திரு சின்னத்துரை ஆகியோர்கள் அதிபர்களாக கடமையாற்றினார் .திரு சின்னத்துரை அதிபராக கடமையாற்றிய வேளையில் தான் முதன் முதலில் கல்லால் அமைக்கப்பட்ட கட்டடம் அமைக்கப்பட்டது.இவரை தொடர்ந்து திரு தங்கராசா என்பவர் அதிபராக கடமை ஏற்றார் .இவரின் காலத்தில்தான் மகாவித்தியாலமாக தரமுயர்தப்பட்டது.அதன் பின் கடமையாற்றிய திரு கு வி.செல்லத்துரை அவர்களின் முயற்சியால் புதிய விஞ்ஞான ஆய்வு கூடமும் புதிய கட்டிடங்களும் உருவாக்கப்பட்டது.அத்தோடு இவரின் காலத்தில் தான் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் சித்தியடைய ஆரம்பித்தது .இவருக்கு பின் திரு வேலுப்பிள்ளை.திரு அரியரத்தினம் ஆகியோர்கள் அதிபர்களாக கடமையாற்றினர்கள். 1966ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய திரு மரியாம்பிள்ளை என்ற மாணவன் கலைப்பிரிவில் சித்தியடைந்து முதல் முதலாக பல்கலைக்கழகதிற்கு தெரிவாகி கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் .இதன் பிற்பட்ட கால பகுதியில் கல்லூரியின் அதிபர் பொறுப்பை திரு எ.கே மகாலிங்கம் பெற்றார் .இவருடைய காலம் கல்லூரிக்கு இன்னும்மொரு அத்தியாயம் என்று சொல்வதை விட புது புது மாற்றங்கள் ,திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது .இவருடைய காலம் பொற்காலம் என்று சொன்னால் கூட மிகையாகாது .இவருடைய காலத்தில் விஞ்ஞான பிரிவு இணைக்கப்பட்டது .இவரின் காலத்தில்தான் திரு ஏபிரகாம் என்பவர் மருத்துவத்திலும் ,வர்த்தக துறையில் திரு பார்த்திபன் ,திரு நேசராசா,திரு சபாரத்தினம் ஆகியோர்கள் பல்கலைகழகத்திற்கு அனுமதி பெற்று இன்னுமொரு அத்தியாயத்தை கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்கள் ,
இதன் பின் கல்லூரி கொத்தணி பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு அதன் அதிபராக திரு ச .நாகரத்தினம் பொறுப்பெடுத்து கொண்டார் .இவரின் பின் கல்லூரியின் அதிபராக திரு பி.கே சிவலிங்கம் அவர்கள் பொறுப்பெடுத்து கொண்டார் .இவரின் காலத்தில்தான் கல்லூரியின் பல சாதனைகள் உலகுக்கு தெரிய வந்தது .அற்புதமான வழிநடத்தும் திறமை கொண்ட இவர் கல்வி மட்டும் இல்லாமல் துறைசார்ந்த ஏனைய அம்சங்களையும் மாணவர்களுக்கு அறிமுகபடுத்தினார்.அத்தோடு மத்திய கல்லூரியாகவும் தரமுயர்தப்பட்டது .இதே வேளை புலம்பெயர் பழைய மாணவர்களும் சமூகமும் இணைந்து கல்லூரிக்கு பொன்விழா மண்டபம் (போரின் போது முற்றாக சேதமடைந்துள்ளது )நூலகம் ஆய்வுகூடம் .மாடி கட்டிடம் அமைக்கப்பட்டன.அத்தோடு போரின் பிற்பட்ட (போர் முடிவடைந்த பின் )வவுனியா காமினி ஒருங்கினைகப்பட்ட பாடசாலையாக இயங்கி வந்த எமது கல்லூரி இப்போது தன்னுடைய சொந்த இடத்தில் கால் பதித்து மெல்ல மெல்ல துளிர் விட்டு வருகின்றது .இப்போது கல்லூரியின் அதிபராக சி.சுப்ரமணியேஸ்வரன் அவர்கள் சிறப்பாகவும் கல்லூரியை நடத்தி வரும் அதே வேளை போரின் போது சிதைவடைந்த அணைத்து வளங்களையும் பெற அயராது உழைத்து வருகின்றார் .
அதிபர்கள்:
தொகு
திரு.மு.நேசரட்னம்
திரு.நமசிவய
திரு.சின்னத்துரை
திரு.தங்கராசா
திரு.அ.க.மகாலிங்கம்
திரு.ச.நாகரத்தினம்
திரு.பொ.க.சிவலிங்கம்
திரு.சி.சுப்பிரமனியேஷ்வரன்
reference
தொகுhttp://www.ptkcc.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/