நல்ல முயற்சி. பாராட்டுகள். சில உரை திருத்தங்களைச் செய்துள்ளேன்.

  • வேறு வணிகப்பெயர்களுக்கு, அட்டவணையைத் தவிர்த்து வரியாகவே தரலாம்.
  • வணிகப்பெயர்களைத் தமிழிலும் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்திலும் தந்தால் நன்று.
  • நோய் பெயர்கள், பக்க விளைவுகள் போன்று வரும் தக்க இடங்களில் உள்ளிணைப்பு தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இது போல் எத்தனைக் கட்டுரைகளைப் பதிவேற்ற எண்ணியுள்ளீர்கள்? 100க்கு மிகுந்தால் விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் கொள்கையைப் பின்பற்ற வேண்டுகிறேன்--இரவி (பேச்சு) 18:11, 21 சூலை 2012 (UTC)Reply

உரை திருத்தத்துக்கு நன்றி. ஏற்கனவே பதிவேற்றி விட்டேன் இப்போது எப்படி திருத்துவது என்பதில் சிறிது குழப்பம். தற்போதைக்கு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்து வகையுள் இந்த ஏழு கட்டுரை மட்டுமே. வேறு ஒரே இனத்தைச் சேர்ந்த மருந்துகளுக்கு இம்முறை பயன்படுத்த எத்தனித்துள்ளேன். எனவே ஒவ்வொரு வகையுள்ளும் குறைந்தது 10 - 15 மருந்துகள் அடங்கும். இவற்றை ஒரேயடியாகவும் செய்ய முடியாது, எனவே குறைந்தது 10 - 15 கட்டுரைகளே ஒரே மாதிரியாக இருக்கும். இனிவரும் கட்டுரையின் மாதிரி அமைப்பை இங்கே பதிகின்றேன், அதன்பின்னர் ஏதாவது திருத்தம் இருப்பின் திருத்தலாம்.
  • //வேறு வணிகப்பெயர்களுக்கு, அட்டவணையைத் தவிர்த்து வரியாகவே தரலாம்.// ஆங்கில விக்கியில் இருந்த நடைமுறையை தழுவிக்கொண்டேன். இனி தவிர்க்கலாம்.
  • வணிகப்பெயர்கள் ஏராளம்..அவற்றை ஒருபோதும் தமிழில் பயன்படுத்தப்போவது இல்லை. எனினும் இனிவரும் கட்டுரைகளில் கவனத்திற்கு எடுக்கலாம்.
  • அடுத்த கட்டுரைகளில் உள்ளிணைப்பு இணைக்கலாம்.

விக்சனரியில் மட்டுமே CSV loader பயன்படுத்தி பழகியதால், இங்கு சற்று சிக்கல் இருந்தது. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 18:54, 21 சூலை 2012 (UTC)Reply

இங்குள்ள CSV loader-ன், பயன்பாட்டு இடர்களை அறிய ஆவல். அவை, என் முயற்சியையும் எளிதாக்கும்.எனவே,அவ்வனுபங்களைப் பகிர்ந்து கொள்ளக் கோருகிறேன்.-- உழவன் +உரை.. 02:48, 23 சூலை 2012 (UTC)Reply

செந்தி, ஏற்கனவே பதிவேற்றிய கட்டுரைகளை நாம் வழமை போல உரை திருத்தலாம். இங்கு குறிப்பிட்டுள்ள ஆலோசனைகளும் உரை திருத்தமும் இனி வரும் கட்டுரைகளுக்கு உதவியாக இருக்குமே என்று தான்.

//எனவே ஒவ்வொரு வகையுள்ளும் குறைந்தது 10 - 15 மருந்துகள் அடங்கும்.//

குறைந்தது எத்தனை வகைகளுக்கு இவ்வாறு செய்ய எண்ணியுள்ளீர்கள் என்று அறியலாமா?

//அவற்றை ஒருபோதும் தமிழில் பயன்படுத்தப்போவது இல்லை.//

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரும் ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள் அதனை எப்படி ஒலித்துப் பார்க்க முடியும்? :) நடைமுறையில் ஆங்கிலப் பெயர்களே இருந்தாலும், அவற்றைத் தமிழிலும் எழுதிக் காட்டுவது நன்று--இரவி (பேச்சு) 09:22, 23 சூலை 2012 (UTC)Reply

இப்போதைக்கு (விடுமுறையில் இருப்பதால்) ஒரு பத்து வகையாவது உருவாக்கலாம், செப்டம்பருக்குப் பின்னர் முடியாது. இதில் ஏதேனும் சிக்கல் அல்லது ஏதேனும் தெரிவிக்கவேண்டுமாயின் கூறுங்கள், அதை அனுசரித்து செய்கிறேன். விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள் கொள்கையைக் கருத்தில் கொண்டுள்ளேன்.

//தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரும் ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள் அதனை எப்படி ஒலித்துப் பார்க்க முடியும்? :) //

)..அதுசரிதான்..அவற்றைத் தமிழில் எழுதுவது ஏதோ கடினம் போலத் தோன்றியது (சோம்பல் எனலாம்..:))..இனி முயற்சித்துப் பார்கின்றேன், அன்றேல் ஓரிரு வணிகப்பெயர்கள் மட்டுமே இடவேண்டி இருக்கும்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:44, 23 சூலை 2012 (UTC)Reply
சரி, செந்தி. தமிழில் எழுதுவதற்குச் சிரமமாக இருப்பதற்காக சில வணிகப் பெயர்களை விட வேண்டாம். அவற்றைத் தமிழில் எப்படி இலகுவாக ஒலிக்க முடியுமோ அதற்கு ஏற்றாற்போல் மாற்றி எழுதினாலும் தகுமே--இரவி (பேச்சு) 09:59, 23 சூலை 2012 (UTC)Reply


தகவலுழவனுக்கு மறுமொழி

தொகு

முதற்கண் உங்களுக்கு கோடி நன்றிகள்..எனக்கு இந்த நுட்பத்தைப் படிப்பித்தது நீங்கள் அல்லவா..இதில் கூடுதல் எண்ணிக்கையில் ##something## வரும்போது CSV loader பிசகுகின்றது. மீண்டும் முயற்சித்துவிட்டு கூறுகிறேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 11:25, 23 சூலை 2012 (UTC)Reply

  • உங்களின் மருத்துவத்திறனை, தமிழுக்குக் கொண்டுவருவதில் நீங்கள் முனைப்பாக ஈடுபடுகிறீர்கள். அதற்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ய எண்ணினேன். எனக்குக் கற்றுத் தந்ததை, நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தியதில், எனக்கு மகிழ்வே. உங்கள் செயலாக்கத்தால், நான் புத்துணர்ச்சி பெறுகிறேன். மிக்க நன்றி.
//##something## வரும்போது CSV loader பிசகுகின்றது. // field seperator-க்கு, உறுப்பிசைக்குறியை(comma) விட, அலைக்குறியை(tilde) பயன்படுத்திப் பார்க்கவும்.-- உழவன் +உரை.. 05:47, 26 சூலை 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Drsrisenthil/AWB_CSV_LOADER&oldid=1173452" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Drsrisenthil/AWB CSV LOADER".