முத்து ஐயர் என்ற இப்பிறவி தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் என்ற இடத்தில் இறைவனால் ராஜம் ஐயர்-குஞ்சம்மாள் என்ற தம்பதியர் மூலம் மனித சமுதாயத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. அது தவழ்ந்து, நின்று, நடந்து பிறகு ஓட ஆரம்பித்து 1963-ஆம் ஆண்டு இந்தியத்தலைநகரம் தில்லியில்வந்து பணி நிமித்தமாகத் தஞசமடைந்தது. இன்று முத்து ஐயர் ஓர் ஓய்வுபெற்ற பத்திரிகையாளன். பயனை எதிர்பாராது பலருக்கு இப்பிறவி பலனளித்துள்ளது. இளமையில் வீட்டுக்கு வெளியே ஓடியாடி விளையாடிய இப்பிறவி, வாலிபத்தில் ஒரு மனைவியைப் பெற்று வீட்டுக்குள் விளையாடி ஒரு ஆண், ஒரு பெண் சிசுக்களுக்குப் பெற்றோராகி, இப்போது வீட்டின் கொல்லைப்புறம் வந்து வானத்தின் வெட்டவெளியை நோக்கியிருக்கும் ஒரு பிறவிதான் முத்து ஐயர்.

வருக முத்து ஐயர். நீங்கள் ஒரு பத்திரிகையாளர். விக்கிப்பீடியாவுக்கும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கும் நிறையவே பங்களிப்புச் செய்ய முடியும். மயூரநாதன் 16:31, 4 பெப்ரவரி 2009 (UTC)


நல்வரவு முத்து ஐயர். --Natkeeran 23:15, 4 பெப்ரவரி 2009 (UTC)

தங்கள் குழுமத்தினிடையே எனக்கு ஓர் அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றி. என்னைத் தொடர்புகொள்ள எண்ணும் அன்பர்களுக்கு எனது இணைய முகவரியைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். என்னைத் தொடர்புகொள்ள ஆவலுள்ளோர் muthuaiyer@gmail.com என்ற இணையதள முகவரிக்கு மடல் அனுப்பலாம். திரு.மயூரநாதன் என்ற பெயரைக் கேட்டவுடன் என் இளம்பருவம் ஞாபகத்திற்கு வருகிறது. காரணம், நான் வளர்ந்தது வழுவூர் என்ற மாயூரத்தை அடுத்த கிராமத்தில்தான். நான் 6 முதல் 8 வகுப்புவரைப் படித்தது மாயூரம் கொரநாடு மேல்நிலைப்பள்ளியில்தான். மாயூரத்திலிருந்து திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையிலுள்ள எலந்தங்குடி புகைவண்டி நிலையத்திலிருந்துதான் புகைவண்டியில் தினந்தோறும் 1956-1959ல் வந்து படித்த அந்த இன்ப நாட்கள் ஞாபகம் வந்தது. நன்றி.....முத்து ஐயர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muthuaiyer&oldid=336087" இலிருந்து மீள்விக்கப்பட்டது