படிமம் ஒன்று சரியான இடத்தில் இல்லை

தொகு

கீழ்க்கண்ட படக்கோப்பு இணைப்பு தமிழ் விக்கிபீடியாவில் சரியாக வேலை செய்யவில்லை.ஆனால் ஆங்கிலத்தில் சரியாக இருக்கிறது.இந்த கோப்பை எங்கு இடவேண்டும்? இடுவது எப்படி?

படிமம்:SpongeBob SquarePants characters cast.png
Major characters in the series (from left to right): Gary, Mrs. Puff, Squidward, Patrick, SpongeBob, Sandy, Pearl, Mr. Krabs, and Plankton.

Vbtamil (பேச்சு) 06:46, 26 மே 2018 (UTC)Reply

வேங்கைப்போட்டியில் கோப்பு அளவு எப்படி கணக்கிடப்படிகிறது?.

தொகு

மீரா காந்தியைத் தொகுக்கும்போது ஒரு கிரண்காந்தி என்று ஒரு இணைப்பு தென்பட்டது. அதை உருவாக்கி முதன்மை வெளியில் சேர்த்தேன். 300 சொற்கள் இருக்கவேண்டும். கிரண் காந்தியில் போதிய சொற்கள் இல்லை. ஆங்கில மூலத்திலும் இல்லை. இதனால் கிரண் காந்திகட்டுரையை வேங்கைப்போட்டியில் சமர்ப்பிக்க முடியவில்லை. ஆனால் மீரா காந்தி சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் ஒரு கேள்வி எழுந்தது.

இப்போது என்னுடைய கேள்வி பொதுவானது. ஒருகட்டுரையை சமர்ப்பிக்கும் அதிலுள்ள இணைப்பு பக்கங்கள் எல்லாவற்றையும் சேர்த்து சொற்கள் கணக்கிடப்படுகின்றனவா? நன்றி.

Vbtamil (பேச்சு) 05:29, 26 மே 2018 (UTC)Reply

ஒவ்வொரு கட்டுரையிலும் உள்ள சொற்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அதில் இருந்து இணைக்கப்பட்டுள்ள கட்டுரையும் போட்டிக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகளுள் ஒன்றாக இருந்தால், அதனை நீங்கள் தனியே இன்னொரு கட்டுரையாக சமர்ப்பிக்கலாம். அதவும் 300 சொற்கள் மற்றும் 9000 பைட்டு அளவுடையதாக இருக்க வேண்டும். --இரவி (பேச்சு) 20:59, 29 மே 2018 (UTC)Reply

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

ஒரு சமயம் ஒரு கட்டுரை

தொகு

ஸ்பாஞ்ஜ்பாப் ஸ்கொய்ர்பேண்ட்ஸ் -- தரம் பற்றி சொல்லப்பட்டதால் தற்காலிகமாக அதிலிருந்த வரிகளை பதிவிலிருந்து நீக்கினேன். மீண்டும் முழுமூச்சாக திரும்பும்போது அது செம்மை படுத்தப்படும். ஒரு சமயத்தில் ஒரு கட்டுரை மட்டும் கவனத்தில் இருக்க வேண்டும் என்று அறிந்ததால் ஒரே நேரத்தில் பல கட்டுரைகள் செய்யப்போவதில்லை என்று உறுதி தேவை என்பது புரிந்தது

Vbtamil (பேச்சு) 14:35, 21 மே 2018 (UTC)Reply

கட்டுரையை வெறுமைப்படுத்த வேண்டாம். அங்குள்ள அறிவிப்புக்களுக்கு ஏற்ற திருத்தித் தொகுத்தால் நல்ல கட்டுரையினை உருவாக்கிவிடலாம். பின்வரும் விடயங்களைக் கவனித்திற் கொண்டு, கட்டுரைகளில் திருத்தம் செய்யதால் தரமான கட்டுரைகளை உருவாக்கலாம்:
முன்மையானவை
  • கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
  • பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
அடுத்தவை

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

தொகு

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)Reply

மீரா காந்தி என்ற தலைப்பில் விட்டுப் போயிருந்த பத்திகள் சேர்ப்பு

தொகு

அன்புடைய திரு இரவி அவர்களுக்கு,

நான் மீரா காந்தி என்ற தலைப்பில் செயல்பாடுகள் என்ற தலைப்பின் கீழ் சில பத்திகள் விட்டுப் போனதை கவனித்தேன். நேற்று அதாவது ,மே 5 அன்று, ஒரு பத்தியை மொழி பெயர்த்து கட்டுரையில் புகுத்தினேன். யாரேனும் இச்செயலில் தற்போது ஈடுபட்டுள்ளனரா என்று தெரியாது. ஏற்கெனவே இருக்கும் கட்டுரையில் எந்த மாற்றமும் செய்யப் போவதில்லை. விட்டுப் போனதை மட்டும் புகுத்த நினைக்கிறேன். இது தவறென்றால் எனக்கு வேறொரு கட்டுரையை ஒதுக்கவும். அன்புடன், மாதவன்

இக்கட்டுரையில் தற்போது வேறு யாரும் பங்களிக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து எழுதலாம். நன்றி. --இரவி (பேச்சு) 23:19, 20 மே 2018 (UTC)Reply
Return to the user page of "Vbtamil/தொகுப்பு 1".