பயம் (2018 திரைப்படம்)
பயம் (ஆங்கிலம் : Fear), (மலையாளம் : ഭയാനകം) இது 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர் ஜெயராஜ் ஆகும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரென்சி என்பவரும், ஆஷா சரத் என்பவரும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதை சிவசங்கரன் என்பவரால் 1978 ஆம் ஆண்டு எழுதப்பட்ட மலையாள காப்பியமான கயர் (Kayar) என்பதிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.[1]
பயம் | |
---|---|
இயக்கம் | ஜெயராஜ் |
மூலக்கதை | |
இசை | எம். கே. அர்ஜுனன் |
நடிப்பு | ரென்சி (Renji Panicker) ஆஷா சரத் (Asha Sharath) |
வெளியீடு | சூலை 20, 2018(India) |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
கதை
தொகுகேரளா மாநிலத்தின் கடலோர தாழ்வான பகுதியான குட்டநாடு என்ற இடத்தில் கதைக்களம் துவங்குகிறது. முதலாம் உலகப் போரில் பங்கெடுத்து 21 ஆண்டுகள் கழித்து தன் ஒரு கால் முடமானவரான, தற்சமயம் குட்டநாட்டில் தபால்காரராக வருகிறார் முன்னால் ராணுவ வீரர் ஒருவர். அவருக்கு தங்க வீடு கொடுக்கும் அவ்வூர் பெண்மணியின் பையன்கள் இருவரும் ராணுவத்தில் பணிகிறார்கள். இவர் அங்கு வேலைக்கு வந்த நேரம் இரண்டாம உலக போர் துவங்குகிறது. வருமையின் காரணமாகவும், ஆங்கிலேயர்களின் கட்டாயத்திற்காகவும் தங்களின் பையன்களை அவ்வூர் மக்கள் ராணுவத்திற்கு அனுப்புகிறார்கள். முதலில் தங்களின் குழந்தைகள் அனுப்பும் பணத்தை வாங்கும் பெற்றோர் சந்தோசப்படுகிறார்கள். போக போக போரின் காரணமாக ஒவ்வொருவரின் ஆண் பிள்ளைகளும் மரண செய்தி தந்தி மூலியமாக வருவதைக் கொடுக்க செல்லும் தபால்காரரை ஊர் பொதுமக்கள் வெறுக்க ஆரம்பித்துவிடுகிறாகள். ஒரு கட்டத்தில் தபால்காரருக்கு வீடு கொடுக்கும் பெண்ணின் பையன்களும் போரில் மரணமடைய அதை அப்பெண்ணிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இனி அவர்களின் குழந்தைகள் மரணமடைந்ததைச் சொல்லவேண்டாம் என்று முடிவெடுக்கும் தபால்காரர் பலபேருக்கு வரும் தந்தி தாள்களை சிறிய பேப்பர் கப்பல்களாக செய்து தண்ணீரில் மிதக்க விடுகிறார்.
பரிசு
தொகுஇத்திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகள், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய மூன்று பரிசுகளைப் பெற்றுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ P.K. Ajith Kumar (14 April 2018). "Jayaraj basking in hat-trick glory". தி இந்து. Retrieved 15 April 2018.
- ↑ "Kerala State Awards: The master composer is rewarded... after 50 years!". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 March 2018. Retrieved 15 April 2018.
- ↑ Deepa Soman (8 March 2018). "I have never bothered much about awards: M K Arjunan, Best composer (Bhayanakam)". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 15 April 2018.