பயோக்கான்
பயோக்கான்(Biocon) இந்தியாவின் மிகப்பெரிய உயிரித் தொழில்நுட்ப நிறுவனம். 1978ம் ஆண்டு புறநகர் பங்களூரில் ஒரு சிறிய கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று உயிரித் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் 16வது இடத்திலும், ஆசிய அளவில் முதலாவது இடத்திலும் உள்ளது. மேலும் வணிக நோக்கில் உலகளவில் சுமார் 50 நாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் கிரன் மசும்தர்-ஷா என்பவரால் தொடங்கப்பட்டது. இவரே இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரும் மற்றும் இவர் கணவர் ஜான்ஷா-வும் சேர்ந்து இந்த நிறுவனத்தின் மொத்த பங்கு தொகையில் 60 சதவிகிதத்தை கொண்டுள்ளனர். இந்த நிறுவனம் 2004 -ம் ஆண்டு முதல் பங்குகளை வெளியிட்டு வருகிறது. சின்ச்சீன் அல்லது சிஞ்சீன் (Syngene), கிளிஞ்சீன் (Clingene), உயிரிய மருந்துநிறுவனம் (பயோ பார்மாசூட்டிக்கல்சு) (Biopharmaceuticals) போன்றவை பயோகான் நிறுவனத்தின் பிற துணை நிறுவனங்களாகும். இந்த நிறுவனம் 1994 ம் ஆண்டு புறநகர் பங்களூரில் பயோக்கான் பார்க் என்னுமிடத்தில் Dr. அப்துல் கலாம் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.
வகை | பொதுப்பங்காளர் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1978 |
தலைமையகம் | பெங்களூரு, இந்தியா |
முதன்மை நபர்கள் | கிரன் மசும்தார் ஷா (Kiran Mazumdar-Shaw) |
தொழில்துறை | உயிரியமருந்தியல்(Biopharmaceutical), நொதியம் |
உற்பத்திகள் | இதயவியல்(Cardiology) & புற்றுநோயியல்(Oncology) |
வருமானம் | இந்திய உருபாய் 7.282 பில்லியன் (2005) |
பணியாளர் | 3000 (2008) |
இணையத்தளம் | www.biocon.com |
முக்கிய குறிப்புகள்
தொகு- பயோக்கான் இந்தியாவின் முதல் உயிரித்தொழில்நுட்ப (பயோ டெக்நாலஜி) நிறுவனம்.
- இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நுண்ணியிரிய நொதிகள் (microbial enzymse) ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனம் பயோக்கான்.
- உயிரித்தொழில்நுட்பத் துறையில் ISO 9001 தரச் சான்றிதழ் ISO 14001 மற்றும் OHSAS 18001பெற்ற முதல் இந்திய நிறுவனம் பயோக்கான்.
- புதுவகை மருந்து ஆராய்ச்சி துறையில் ஈடுபட்ட முதல் இந்திய நிறுவனம் பயோக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஞ்சீன் (சின்ச்சீன்) ஆகும்.
- கொலசுட்ரால் என்னும் கொழுப்பை கட்டுப்படுத்தும் வேதிச்சேர்மமாகிய லோவாசிட்டாடின் (lovastatin) வகை கொலசுட்ரால்-குறைப்பு மருந்துகள் தயாரிப்புக்காக அமெரிக்காவின் US FDA-வால் ஏற்புபெற்ற முதல் இந்திய நிறுவனம் பயோகான்.
- பிச்சியா முறை எனப்படும் பிச்சியா இயீசிட்டு வெளிப்பாட்டு முறைப்படி உருவாக்கும் புரதங்கள் வழி (Pichia expression system) இன்சுலின் படைத்த முதல் உலக நிறுவனம் பயோக்கான்.