பய்யனூர் முரளி
பய்யனூர் முரளி என்பவர் ஒரு மலையாள நாடக நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் நூற்றுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக்குறிப்பு
தொகுகண்ணூர் மாவட்டத்தில் பய்யன்னூர்க்கு அருகில் உள்ள அன்னூரில் பிறந்தார். சகாவ், பழஸ்ஸி ராஜா உட்பட்ட நாடகங்களில் முதன்மை வேடங்களில் நடித்துள்ளார். 2002-ல் எர்ணாகுளத்தில் கலாசேதன என்னும் நாடகக்குழுவைத் தொடங்கினார். அமதன், சிநேககாயகன், ஆராதகன், நன்மனிறஞ்சவன், விஸ்வனாயகன் உட்பட்ட நாடகங்களை இக்குழுவினர் நடித்தனர். பத்மஸ்ரீ அம்பாட்டு கேசவன் என்னும் நாடகத்தில் அம்பாட்டு கோவிந்தமேனோன் என்னும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை இயக்கி, தயாரித்தவரும் இவரே.[1]
2013-ல் வெளியான 3ஜி என்னும் மலையாளத் திரைப்படத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்தார்.
விருதுகள்
தொகுநான்கு முறை கேரள மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். கண்ணூர் சங்கசேதனையின் உணர்த்துபாட்டு என்னும் நாடகத்திற்காகவும் விருது கிடைத்தது[2]
தேவஸ்பந்தனம் என்னும் நாடகத்தினை இயக்கியதற்காக 2002-ல் மிகச் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. 2003-ல் சகுனி என்னும் நாடகத்தினை இயக்கியதற்காகவும் 2004-ல் சிநேககாயகன் என்னும் நாடகத்தினை இயக்கியதற்காகவும் விருதுகள் கிடைத்தன.
160-ற்கும் அதிகமான விருதுகளைப் பெற்றுள்ளார். திக்குறிசி பௌண்டேஷன், அச்சன்குஞ்சு விருது, சங்ஙனாசேரி நடராஜன் விருது முதலியனவும் பெற்றுள்ளார்.[2]
சான்றுகள்
தொகு- ↑ "நாடகம் வழி ஸினிமயில், பய்யன்னூர் முரளி". தீபிகா இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013090300/http://malayalam.deepikaglobal.com/feature/Feature_Details.aspx?newscode=7335&feature_cat=cat19. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 13.
- ↑ 2.0 2.1 "பய்யன்னூர் முரளி...". ஜனயுகம் இம் மூலத்தில் இருந்து 2013-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131013090605/http://www.janayugomonline.com/php/mailnews.php?nid=89279. பார்த்த நாள்: 2013 ஒக்டோபர் 13.