பிரம்மதந்திர சுதந்திர பரகலா மடம் (Bramhatantra Swatantra Parakala Matha) என்பது கர்நாடகாவில் நிறுவப்பட்ட ஒரு வைணவ மடமாகும். [1] இந்து சமுதாயத்தின் வைணவ மத மரபுக்குள் வடகலை இந்து சமுதாயத்தின் வைணவ வகுப்பினரின் முதல் இடைக்கால மடமாகும். இந்த மடம் முதன்முதலில் வேதாந்த தேசிகரின் சீடரான பிரம்மதந்திர சுதந்திர ஜீயர் என்பவரால் நிறுவப்பட்டது.

பரகலா மடம்
கோயிலின் நுழைவும், அலுவலகமும்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கருநாடகம்
மாவட்டம்:மைசூர்
அமைவு:சாம்ராஜ்யபுரம்
கோயில் தகவல்கள்
தலைமை குரு
மடத்தின் முதன்மை தெய்வம்: இலட்சுமி ஹயக்ரீவ சுவாமி (மையத்தில்)

பரகலன் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ திருமங்கை ஆல்வாருக்குப் பிறகு மடத்திற்கு "பரகலா" என்ற பெயர் வந்தது. மடத்தின் தலைமையகம் மைசூரில் உள்ளது . 1399 முதல் மைசூர் இராச்சிய மன்னர்களுடன் மடம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. அதனால்தான் மைசூர் அரண்மனை மடத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. மைசூர் மன்னர்கள் மடத்தை தங்கள் அதிகாரப்பூர்வ குருகுலமாக வைத்திருந்தார்கள். இப்போது கூட, அரச பரம்பரை மடத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. அனைத்து அரச விழாக்களும் இன்றும் மடத்தால் கண்காணிக்கப்படுகின்றன.

இராமானுசரின் போதனைகளின் வெளிச்சமாக இருந்த வேதாந்த தேசிகரைப் பின்பற்றும் அமைப்புகளில் பரகலா மடமும் ஒன்று. அகோபில மடம், திருவரங்கம் ஆண்டவன் ஆசிரமம், புண்டரிகாபுரம் ஆண்டவன் ஆசிரமம் போன்றவை பிற மடங்களாகும்.

இம்மடத்தில் இதுவரை 36 தலைவர்கள் இருந்துள்ளனர். இந்த மடத்தின் தலைவர் மைசூர் அரச குடும்பத்தின் பரம்பரை ஆச்சார்யராகஇருக்கிறார். இங்கு வழிபடும் ஹயக்ரீவா சிலை வேதாந்த தேசிகரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. [2]

பரகலா யோகி பிரம்மதந்திர சுதந்திர பரகலா சுவாமி, பரகலா மடத்தின் 21 வது தலைமை குரு
அபிநவ ரங்கநாத பிரம்மதந்திர சுதந்திரா பரகலா சுவாமி, பரகலா மடத்தின் 33 வது தலைமை குரு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.parakalamatham.org
  2. Swami Swahananda: "Monasteries in South Asia", page 50. Vedanta Press, 1989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரகலா_மடம்&oldid=3047055" இருந்து மீள்விக்கப்பட்டது