பரஞ்சோதி மகான்

பரஞ்சோதி மகான் (மே 2, 1900 - ஜனவரி 7, 1981) சென்னை மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கான்சாபுரம் என்னும் சிறு ஊரில் ஒரு ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் நமது எளிமையில் பிறந்தார். [1]

1919ஆம் ஆண்டில் பணி யாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த ஒரு பெரியவர் மூலம் இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 1938, நவம்பர் 7 இல் உபதேசம் பெற்றார்.

1939 செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினார். 1944ஆம் ஆண்டு முதல் இந்தியா மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தி குண்டலினி உபதேசத்தை வழங்கி வந்தார். "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 1946 ஜூலை 20 இல் தொடங்கப்பட்டது.

சான்றுகள் தொகு

1.பரஞ்சோதி மகான் இணையதளம்

2.அர்ச்சிவ்.ஆர்க் இணையதளம்

3.வலைதமிழ் இணையம்

4.வாழ்க்கை குறிப்பு

வெளி இணைப்புகள் தொகு

ஞானம் என்பதே விஞ்'ஞானம்' தான்..

இவற்றையும் காண்க தொகு

உசாத்துணைகள் தொகு

  1. வாழ்க்கை வரலாறு.[1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரஞ்சோதி_மகான்&oldid=2920740" இலிருந்து மீள்விக்கப்பட்டது