பாரத் பூசண் (Bharat Bhushan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி. பரத் பூசண் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் கத்துவா சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

பரத் பூசண்
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்ராஜீவ் ஜஸ்ரோத்தியா
தொகுதிகத்துவா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

கல்வி

தொகு

பரத் பூசண் சம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் பட்டத்தினை 1994ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இதன் பின்னர் முதுகலைப் பட்டத்தினை இதழியலில் பாரதிய விதியா பவன் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP's Dr Bharat Bhushan Wins Jammu And Kashmir's Kathua Assembly Seat". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  2. "Kathua, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Dr. Bharat Bhushan with 45944 defeats BSP's Sandeep Majotra". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  3. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=916
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்_பூசண்&oldid=4120016" இலிருந்து மீள்விக்கப்பட்டது