பரப்பப்பட்ட கேட்பொலி உணர்தல்

பரப்பப்பட்ட கேட்பொலி உணர்தல் (Distributed Acoustic Sensing - DAS) என்பது ஒளியிழை வடத்தினை உணர்விகளாகப் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தில் கம்பிவடம் முழுவதும் நடக்கும் அதிர்வுகள், கேட்பொலி அல்லது இயக்கங்களை கண்டறிய உதவுகிறது. பல தொழில்களுக்காக விரிவான கண்காணிப்பு அமைப்பாக இந்நுட்பம் பயன்படுகிறது.[1]

செயல்பாட்டு முறை

தொகு

பரப்பப்பட்ட கேட்பொலி உணர்தல் அமைப்பில், ஒளியிழை வடத்தின் வழியாக சீரொளியினை அனுப்பி செயல்படுத்துகின்றனர். இதில் அதிர்வுகள் மற்றும் இயந்திர மாற்றங்களின் காரணமாக ஒளியின் மீள்-பிரகாசத்தை அளவீடு செய்து நிகழ்வுகளை கண்டறிகின்றனர்.

பயன்பாட்டு பகுதிகள்

தொகு
  • கட்டமைப்பு கண்காணிப்பு: பாலங்கள், சுரங்கங்கள், பிற முக்கிய கட்டமைப்புகளை கண்காணித்து சாத்தியமான சேதங்களை கண்டறிதல்.[2][3]
  • ஆற்றல் துறை: எண்ணெய், வாயு குழாய்களில் ஒழுகலை கண்டறிதல், மின் வழிகளை கண்காணித்தல்.[4][5]
  • பாதுகாப்பு அமைப்புகள்: முக்கியமான இடங்களில் பாதுகாப்பு வலயங்களை கண்காணித்தல்.
  • நிலநடுக்க கண்காணிப்பு: நில நகர்வுகள், நிலநடுக்க செயல்பாடுகளை, கண்காணித்தல்.

நன்மைகள்

தொகு
  • உயர் அளவீட்டுச் திறன்: ஒற்றை பரப்பப்பட்ட கேட்பொலி உணர்தல் அமைப்பை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் கண்காணிக்க முடியும்.[6]
  • நம்பகத்தன்மை: மின் காந்தத் தலங்களால் பாதிக்கப்படாதது.
  • குறைந்த பராமரிப்பு செலவு: ஒளியிழை கம்பிவடம் நீண்டகாலப் பயன்பாடு உடையவை.
  • பல்துறை பயன்பாடு: பல்வேறு சூழல்களுக்கு தகுதியாக செயல்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "वितरित ध्वनिक संवेदन", विकिपीडिया (in இந்தி), 2025-01-01, பார்க்கப்பட்ட நாள் 2025-01-01
  2. "Fibre Optic Sensing for railways – Ready to use?!". Signalling+Datacommunication / Signal+Draht 114: 60. September 2022. https://www.sensonic.com/assets/dl/Tech-ref/fiber-optic-sensing-for-railways-ready-to-use-signalplusdraht-114-09-2022.pdf. 
  3. Wagner, Adrian; Nash, Andrew; Michelberger, Frank; Grossberger, Hirut; Lancaster, Gavin (January 2023). "The Effectiveness of Distributed Acoustic Sensing (DAS) for Broken Rail Detection" (in en). Energies 16 (1): 522. doi:10.3390/en16010522. பன்னாட்டுத் தர தொடர் எண்:1996-1073. 
  4. Gregor Cedilnik; et al. (2019). "Ultra-Long Reach Fiber Distributed Acoustic Sensing (DAS) for Power Cable Monitoring" (PDF).
  5. Rasmus Olson; et al. (2019). "Fault Localisation with Distributed Acoustic Sensing (DAS)" (PDF).
  6. Gregor Cedilnik (2018). "Pushing the Reach of Fiber Distributed Acoustic Sensing to 125 km Without the Use of Amplification". IEEE Sensors Letters 3 (3): 1–4. doi:10.1109/LSENS.2019.2895249. https://ieeexplore.ieee.org/document/8625530. 

மேலும் பார்க்க

தொகு