பரப்பலாறு அணை

அணை

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் மலைப் பாதையில் வடகாடு என்ற கிராமத்திற்கு முன்பாக தமுக்குப் பாறைக்கும், தட்டைப்பாறைக்கும் இடையே பரப்பலாறு அணை சுமார் 81.08 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. வடகாடு, சிறுவாட்டுக்காடு, பாச்சலூர், பன்றிமலை ஆகிய பகுதியில் உள்ள சிறு ஓடைகள், பெத்தானியாபுரம் அருகே சிறு ஆறாக மாறி பரப்பலாறு அணைக்கு வருகின்றன. [1]

அணையின் அமைப்பு

தொகு

பரப்பலாறு அணை 1971க்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பு அணையிலிருந்து சுமார் 1373 ஏக்கர் மட்டுமே நீர் ஆதாரம் பெற்று வேளாண்மை செய்யப்பட்டது. நீர் உபரியை முறையாக பயன்படுத்திட தமிழக அரசு சுமார் 10.40 லட்சம் செலவில் சுமார் 2500 ஏக்கர் நிலம் வேளாண்மை செய்யத்தக்க வகையில் 1971ல் தொடங்கப்பட்டு 1974ல் முடிக்கப்பட்டது. அணை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீரின் கொள்ளளவு உயரம் 27.44 மீட்டர்

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பலாறு_அணை&oldid=3219821" இலிருந்து மீள்விக்கப்பட்டது