பரமக்குடி கலவரம் - 2011

பரமக்குடி கலவரம் - 2011 (ஆங்கில மொழி: Paramakudi riots) தமிழ்நாடு மாநிலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நடந்தது ஆகும். தேவேந்திர குள வேளாளர் என்ற சமுதாய மக்களின் வழிகாட்டிகளில் ஒருவரான இம்மானுவேல் சேகரன் என்பவரின் 54 வது நினைவு நாள் கொண்டாட்டத்தின் போது இப்போதைய தலைவர்களில் ஒருவரும் தமமுக என்ற கட்சியின் தலைவருமான ஜான் பாண்டியன் என்பவரை காவல் துறை கைது செய்ததால் இங்கு கலவரம் ஏற்பட்டது.[1]

கலவரம் தொகு

செப்டம்பர் 11 ஆம் திகதி கூட்டத்தினரைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை காவலர்கள் உபயோகம் செய்ததிலும், பின்னர் துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தியதிலும் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் காவலர்களின் தடியடியால் 50 பொதுமக்கள் காயம் அடைந்தனர். இவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த வன்முறையின் காரணமாக பல காவலர்களும் காயம் அடைந்தனர். காவல் கண்காணிப்பாளர், கே ஏ செந்தில் நாதன், பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் கணேசன் என்பவரும் காயம் அடைந்தனர். [2] மாவட்ட ஆட்சியர் அருண் ராய் கண்ணீர் புகை குண்டுகள் வீச மட்டுமே அனுமதி கொடுத்திருந்த நிலையில் காவல்துறை துப்பாக்கி சூடும் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. [3] அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இச்சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் என்பவரை நியமித்தார்.[4]

முடிவு தொகு

ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் அளித்த அறிக்கையில் கலகக்காரர்கள் பொது சொத்தை சேதப்படுத்தியதால் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய கட்டாயம் உண்டாகியுள்ளது, அதோடு சாதி சங்கங்கள் நடத்தும் ஊர்வலத்திற்கு இனிமேல் தமிழகத்தில் அனுமதி கொடுக்கக்கூடாது என்று கூறியிருந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "India: Seven killed as police open fire on protesters". BBC News – India. BBC News. பார்க்கப்பட்ட நாள் 30 August 2012.
  2. http://www.thehindu.com/news/national/tamil-nadu/paramakudi-police-firing-toll-rises-to-seven/article2446414.ece
  3. DNA Correspondent. "7 die as Tamil Nadu cops fire on dalit mob". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 30 August 2012.
  4. Ramakrishnan, Sathyalaya (8 May 2013). "Paramakudi Communal Clash:Justice Sampath Commission justifies Police Firing". Asian Tribune. Archived from the original on 9 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013.
  5. Ramakrishnan, Sathyalaya (8 May 2013). "Paramakudi Communal Clash:Justice Sampath Commission justifies Police Firing". Asian Tribune. Archived from the original on 9 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 3 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமக்குடி_கலவரம்_-_2011&oldid=3561957" இலிருந்து மீள்விக்கப்பட்டது