பரமேசுவரா கல்லூரி, யாழ்ப்பாணம்

பரமேசுவரா கல்லூரி (Parameshwara College) 1921 முதல் 1974 வரை இலங்கையின் முதன்மையான சைவப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இப்பாடசாலை 1921 ஆம் ஆண்டில் சேர் பொன். இராமநாதனால் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.

பரமேஸ்வரா கல்லூரி
முகவரி
பரமேஸ்வரா கல்லூரி is located in Greater Jaffna
பரமேஸ்வரா கல்லூரி
பரமேஸ்வரா கல்லூரி
யாழ்ப்பாணத்தில் அமைவிடம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், Northern Province
இலங்கை
அமைவிடம்9°41′01.50″N 80°01′24.20″E / 9.6837500°N 80.0233889°E / 9.6837500; 80.0233889
தகவல்
சமயச் சார்பு(கள்)சைவம்
நிறுவல்ஆகத்து 22, 1921
நிறுவனர்பொன்னம்பலம் இராமநாதன்
மூடல்1974

சேர் பொன். இராமநாதன் தனது கல்விப்பணியாக யாழ்ப்பாணத்தில் இரு முக்கிய பாடசாலைகளை நிறுவினார். அவற்றிலே, பெண்களுக்காக இராமநாதன் கல்லூரியை உடுவிலில் ஆரம்பித்ததோடு, ஆண்களுக்காக பரமேசுவராக் கல்லூரியை திருநெல்வேலியில் ஆரம்பித்தார். அவை பிரித்தானியக் குடியேற்றக் கால யாழ்ப்பாணத்தில் சைவப் பண்பாட்டினையும், சமயத்தையும் பேணுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கின. இப்பாடசாலையை பல்கலைக்கழகமாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. பரமேசுவரா கல்லூரி 1921 ஆகத்து 22 இல் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஆசிரியப் பயிற்சிப் பாடசாலையாகவும், பின்னர், இலண்டன் மெட்ரிக்குலேசன், கேம்பிரிட்ச் தேர்வுகளை நடத்தும் பாடசாலையாகவும் விளங்கியது. பின்னர், தரம் 10 இற்கான தேர்வுகளும், பல்கலைக்கழக புகுமுகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. இப்பாடசால 36 ஏக்கர் (150,000 சதுரமீ) பரப்பளவு நிலத்தில், மேலும் விரிவாக்கம் செய்ய ஏதுவாகக் கட்டப்பட்டது. பின்னர் மாணவர்களின் வசதிக்காக ஒரு சிவன் கோவில் இதன் வளாகத்தில் கட்டப்பட்டது. 1974 ஆம் ஆண்டில் இவ்வளாகம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண வளாகத்திற்காக இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டது.[1][2] இக்கல்லூரியின் படித்த மாணவர்களும் ஆசிரியர்களும் அருகிலுள்ள ஏனைய அரசுப் பாடசாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

பழைய மாணவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "About Us". யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-08.
  2. "Establishment of the Jaffna Campus of the University of Sri Lanka". யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். Archived from the original on 2012-07-21.