பரளிக்காடு
பரளிக்காடு (Baralikadu) கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோடைக்கால சுற்றுலாத் தலம் ஆகும்.[1][2]
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, பில்லூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் பரிசல் பயணம், பவானி ஆற்றில் குளியல், பழங்குடி மக்கள் வழங்கும் சத்தான உணவு, மேற்கு தொடர்ச்சி மலைக் காட்டில் நடைப்பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு வனத்துறையினர் உதவுகின்றனர். சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கும் கட்டணம், பழங்குடி மக்களுக்கே செலவிடப்படுகிறது.
கட்டணம் மற்றும் முன்பதிவு
தொகுஇங்கு ஒருநாள் இயற்கையோடு தங்குவதற்கு பெரியவர்களுக்கு ரூ. 500, பன்னிரண்டு வயதிற்கு குறைவானவர்களுக்கு ரூ. 400 உணவு செலவு உட்பட வனத்துறையால் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிளது. இதற்கு ஒரு வாரம் முன்பே வனத்துறையிடம் முன்பதிவு செய்வது அவசியம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பரளிக்காடு சுற்றுலாத் தலம்
- ↑ "கூகுள் வரைபடம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2017.
வெளி இணைப்புகள்
தொகு- Baralikadu பரணிடப்பட்டது 2022-08-22 at the வந்தவழி இயந்திரம்