பரவுணித் தாவரம்

ஒரு தாவரம் வேறொரு தாவரத்தைப் பற்றிக்கொண்டு அத்தாவரத்திடமிருந்தே உணவு பறித்து வாழும் தாவரம் பரவுணித் தாவரம் (ஒட்டுண்ணித் தாவரம்) என்றழைக்கப்படும். பரவுணித்தாவரங்கள் அவற்றின் வாழ்க்கை முறையின்படி பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை;

  • 1a. கட்டாய ஒட்டுண்ணித் தாவரம்(Obligate parasite) : வாழ்க்கை வட்டத்தை ஒரு விருந்து வழங்கியின் துணையின்றிப் பூர்த்தி செய்யவியலாத தாவரமாகும்.
  • 1b. சமயாசமய ஒட்டுண்ணித் தாவரம்(Facultative parasite) : வாழ்க்கை வட்டத்தை ஒரு விருந்து வழங்கியின் துணையின்றித் தனித்துப் பூர்த்தி செய்யக்கூடிய தாவரமாகும்.
  • 2a. தண்டுக்குரிய ஒட்டுண்ணித் தாவரம் (Stem parasite): விருந்து வழங்கியின் தண்டுப்பகுதியில் வாழும் தாவரம்.
  • 2b. வேருக்குரிய ஒட்டுண்ணித் தாவரம் (Root parasite): விருந்து வழங்கியின் வேர்ப்பகுதியில் வாழும் தாவரம்.
  • 3a. நிறை ஒட்டுண்ணி (Holoparasite): விருந்து வழங்கியில் முற்றுமுழுதாக உணவுக்காகத் தங்கியிருக்கும் தாவரம்.
  • 3b. குறை ஒட்டுண்ணி (Hemiparasite): விருந்து வழங்கியிலிருந்து நீரையும் கனியுப்பையும் மட்டும் பெற்று தமக்கான உணவை தயாரிக்கக்கூடிய தாவரம்.
கஸ்கியூற்றா நிறைபரவுணித் தாவரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவுணித்_தாவரம்&oldid=2022815" இலிருந்து மீள்விக்கப்பட்டது