பரவுயிரி சந்தைப்படுத்தல்

பரவுயிரி சந்தைப்படுத்தல் (வைரல் மார்க்கெட்டிங்) மற்றும் பரவுயிரி விளம்பரப்படுத்தல் (வைரல் அட்வர்டைசிங்) போன்ற புழக்க வார்த்தைகள், நோய்க்கிருமிகளான வைரஸ்கள் பரவுவது போன்ற அதே வகையில் தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் பரவுயிரி செயல்முறைகள் மூலமாக, வணிகப் பொருள்களை சந்தைப்படுத்துதல் ஆகும். இம்முறையில் சமுகத்தில் வாழும் மக்களிடம் இருக்கும் சமூக வலைப்பின்னல்களை பயன்படுத்தி சந்தைப்படுத்தல் நடைபெறுகிறது. அது செவி வழி பரவுவனவாக இருக்கலாம் அல்லது இணையத்தின் மூலம் வலைப்பின்னல் விளைவுகளால் மேம்படுத்தப்படுவதாய் அமையலாம்.[1] பரவுயிரி விளம்பரங்கள் காணொலி கோப்புகள், ஊடாடும் ஃபிளாஷ் விளையாட்டுகள், விளம்பர விளையாட்டுகள், மின் புத்தகம்ங்கள், வர்த்தகபெயர் கொண்டாடத்தக்க மென்பொருள்கள், படங்கள் அல்லது உரை செய்திகளின் வடிவத்திலும் இருக்கலாம். பரவுயிரி சந்தைப்படுத்தலின் அடிப்படை வடிவம் என்றென்றைக்கும் மாறாமல் காப்பாற்றப்பட முடியாது.

வெற்றிகரமான வைரல் மார்க்கெட்டிங் நிரல்களை உருவாக்க ஆர்வமுடைய விளம்பரதாரர்களின் இலக்காக இருப்பது என்னவென்றால், உயர்ந்த சமூக வலைப்பின்னல் திறனும் ஆர்வமும் (SNP) கொண்ட, இன்னொரு போட்டியாளரால் கவரப்படக் கூடிய சாத்தியம் அதிகம் கொண்ட தனிநபர்களைக் கண்டறிந்து அவர்களை ஈர்க்கும் வகையிலான வைரல் செய்திகளை உருவாக்குவதாகும்.

ஆன்லைன் விளம்பரங்களுடன் சேர்த்து விற்பனை மையங்களிலும் கடைக்காரர்களுடன் பேசி வைத்துக் கொண்டு, ஆனால் செவி வழி ஊக்கத்தின் மூலமாக தன்னிச்சையாக பொருளின் மீது நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதான பிரமையைத் தோற்றுவிக்கும் முறையற்ற ரகசிய விளம்பர பிரச்சாரங்களுக்கும் இந்த “வைரல் மார்க்கெட்டிங்” என்கிற பதம் இழிவுப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.[2]

வரலாறு தொகு

இந்த வைரல் மார்க்கெட்டிங் என்கிற வார்த்தை பிரயோகம் தோன்றிய விதம் மற்றும் பிரபலமான விதம் விவாதத்திற்குரியதாக உள்ளது, என்றாலும் இப்போதைய பிரயோகத்தின் சில ஆரம்ப பயன்பாடுகளுக்கு ஹார்வர்டு வணிக பள்ளி பட்டதாரியான டிம் டிராபர் மற்றும் ஹார்வர்டு வணிக பள்ளி ஆசிரியரான ஜெப்ரி ரேபோர்ட் ஆகியோர் தான் காரணமாகக் கூறப்படுகின்றனர்.

அதன்பின், ஜெப்ரி ரேபோர்ட் 1996 ஆம் ஆண்டில் எழுதிய ஃபாஸ்ட் கம்பெனி கட்டுரையான ‘தி வைரஸ் ஆஃப் மார்க்கெட்டிங்’ மூலமும், பின் ஹாட்மெயில் தனது பயனர்கள் அனுப்பிய மின்னஞ்சல்களுடன் தனது விளம்பரத்தையும் இணைத்துக் கொண்ட நடைமுறையை விவரிக்க 1997 ஆம் ஆண்டில் இதனைப் பயன்படுத்திய டிராபர் ஃபிஷர் ஜுர்வெட்சன் துணிகர முதலீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த டிம் டிராபர் மற்றும் ஸ்டீவ் ஜுர்வெட்சன் மூலமும், இந்த பதம் பிரபலமுற்றது.[3]
வைரல் மார்க்கெட்டிங் குறித்து 1994 ஆம் ஆண்டு வெளியான தனது Media Virus: Hidden Agendas in Popular Culture  புத்தகத்தில் குறிப்பிட்ட ஊடக விமர்சகரான டக்ளஸ் ருஷ்கோஃப் தான் இன்டர்னெட்டில் இது குறித்து முதலில் எழுதியவர்களில் ஒருவர்.  வைரல் ஒப்பீட்டு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு ”பாதிக்கத்தக்க” பயனரை இந்த விளம்பரம் எட்டும்போது அந்த பயனருக்கு இது “தொற்றி”க் கொள்ளும் பட்சத்தில் (அதாவது இந்த சிந்தனை அவருக்கு பிடித்திருக்கும் பட்சத்தில்) பின் அவர் அதனை மற்றவர்களுக்கு பரப்பி அது ”அவர்களையும் தொற்றிக் கொள்ள” செய்வார்.  தொற்று கொண்ட ஒவ்வொரு பயனரும் அந்த சிந்தனையை சராசரியாக ஒன்றுக்கும் அதிகமான பாதிக்கத்தக்க பயனருடன் பகிர்ந்து கொள்கிற வரை (அதாவது, அடிப்படை புனருற்பத்தி விகிதம் ஒன்றை விட அதிகமாக இருக்கும் - இது தொற்று என்று ஒன்றைக் குறிப்பிட தொற்றியல் நிர்ணயமாக அமைந்திருப்பதாகும்), தொற்று பாதித்த பயனர்களின் எண்ணிக்கை ஒரு கணித வளைகோட்டின் படி வளர்ந்து கொண்டு போகும், அதன் ஆரம்ப பகுதி அடுக்குக்குறிக்குரியதாக அமைந்திருக்கும்.  இந்த பயனர்-பயனர் பகிர்வு மக்கள் தொடர்பு அல்லது விளம்பரங்கள் போன்ற மற்ற சந்தைப்படுத்தல் வடிவங்களுடன் சேர்ந்து நீட்டிக்கப்படும் போது, தொற்றுக்குரிய விகிதாச்சாரத்தில் இந்த விஷயங்கள் பரவாவிடினும் கூட அந்த விளம்பர பிரச்சாரம் நல்ல வெற்றிகரமானதாகவே அமையலாம்.

அட்வர்டைசிங் ரிசர்ச் இஸ் சேஞ்சிங் ’கில் பாப் கெர்ஸ்ட்லி, உயர்ந்த சமூக வலைப்பின்னல் திறனுடைய ஆட்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்ட செயல்முறையை குறித்து முதலில் எழுதியவர்களில் ஒருவராவார். வைரல் மார்க்கெட்டிங் விளம்பரங்களின் திறம்பாட்டை அதிகப்படுத்த விளம்பரதாரர்களுக்கு உதவ குவான்டிடேடிவ் மார்க்கெட்டிங் ரிசர்ச்சில் SNP செயல்முறைகளை கெர்ஸ்ட்லி பயன்படுத்துகிறார். 2004 ஆம் ஆண்டில் ஆல்பா யூசர் கருத்து வெளியாகி, இப்போது எந்த ஒரு வைரல் பிரச்சாரத்தின் முக்கிய புள்ளியாக திகழும் உறுப்பினர்களை, மிக செல்வாக்கு செலுத்தக்கூடிய “மையங்களை”, தொழில்நுட்பரீதியாக தனித்து அடையாளம் காண்பது சாத்தியமாகியிருப்பதை சுட்டிக்காட்டியது. இன்று ஆல்பா யூசர்கள் பிரித்தறியப்படவும் அடையாளம் காணப்படவும், இன்னும் மிகத் துல்லியமாக, மிக அந்தரங்க பயன்பாட்டுக்குரியதாய் இருக்கும் செல் பேசிகளையும் இலக்கு கொள்ளத்தக்க வகையில் செல் பேசி வலைப்பின்னல்களை வைரல் விளம்பர நோக்கங்களுக்கு இலக்காக்கும் வரை செய்ய முடியும்.

அதன் பயன்பாட்டுக்கு மறுமொழியாக, பல தளங்களும் வைரல் மார்க்கெட்டிங் என்பது என்ன என்பதை விவரிக்க முயலத் துவங்கியிருக்கின்றன.

குறிப்பிடத்தக்க உதாரணங்கள் தொகு

  • போன்சி (Ponzi) திட்டமும் அது தொடர்பான பிரமிடு திட்டங்களும் வைரல் மார்க்கெட்டிங்கின் ஆரம்ப உதாரணங்களாகும். ஒவ்வொரு சுற்றிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு அதற்கு பின் வரும் முதலீட்டாளர்களின் வைப்புத் தொகையில் இருந்தான வட்டி வழங்கப்பட்டது. ஆரம்ப முதலீட்டாளர்கள் ரொம்ப ஆர்வத்துடன் தங்கள் நண்பர்களைச் சேர்ப்பார்கள், இதனால் அடுக்கடுக்கான வளர்ச்சி விளையும், இறுதியில் இருக்கும் முதலீட்டாளர்கள் அனைவரையும் எட்டி விட்ட பிறகு திட்டம் வீழ்ச்சியுறுகிறது.
  • 1960கள் மற்றும் 70களில் புகழ்பெற்ற மல்டி-லெவல் மார்க்கெட்டிங் (போன்சி திட்டங்களுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்) அடிப்படையில் ஒரு வைரல் மார்க்கெட்டிங் வடிவமே, இதில் பிரதிநிதிகள் தங்கள் செல்வாக்கு வட்டத்தின் மூலம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி அதன் மூலம் வருவாய் சம்பாதித்தனர், தங்களது நண்பர்களுக்கும் அதே போல் பொருட்களை விளம்பரம் செய்ய வாய்ப்பளித்தனர். வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில், இந்த உத்தியானது அடுக்கடுக்காய் பிரதிநிதிகள் வளர்ச்சி காணும் ஒரு வலைப்பின்னலை உருவாக்கி பெருமளவில் பின்பற்றுவோரை உருவாக்குகிறது. ஆம்வே மற்றும் மேரி கே காஸ்மெடிக்ஸ் உட்பட பல நிறுவனங்களை இதற்கு உதாரணமாய் கூறலாம்.
  • மிஸ்டரி சயின்ஸ் தியேட்டர் 3000 தொலைக்காட்சி தொடரின் ஆரம்ப காலத்தில் (1988 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளுக்கு இடையில்) விநியோகம் மிகக் குறைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்கள் வீடியோ டேப்புகளில் பதிவு செய்து தனது நண்பர்கள் வட்டாரத்தில் விநியோகித்து பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், இதன்மூலம் துளிர்விட்டுக் கொண்டிருந்த காமெடி சென்ட்ரல் நெட்வொர்க்கிற்கு உதவ வேண்டும் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஊக்கப்படுத்தினர். இந்த காலகட்டத்தில் நிகழ்ச்சியின் முடிவில் பின்வரும் வாசகம் வந்தது: “தொடர்ந்து டேப்புகளை சுற்றில் விடுங்கள்

!"[4]

  • 2000 ஆவது ஆண்டில், செவி வழி “வைரல்”களை உருவாக்க, விளம்பரப்படுத்தாமல் இணைய ஆர்வமிக்கோருக்கு இலவச TiVoக்களை வழங்கும் TiVoவின் திட்டம் குறித்து கூறிய ஸ்லேட், ஒரு வைரல் பிரச்சாரம் விளம்பர பல்டியில் இருந்து வித்தியாசப்பட்டதாகும் என்பதைச் சுட்டிக் காட்டியது.[5]
  • 2001 ஆம் ஆண்டில், ஹாட்மெயிலுக்கான இணைய வழி பிரச்சாரங்களையும் (1996) தி ப்ளேர் விட்ச் பிராஜெக்ட் (1999) திட்டத்தையும் வைரல் மார்க்கெட்டிங்குக்கான சிறந்த உதாரணங்களாக விவரித்த பிசினஸ்வீக் , அதே சமயத்தில் நகல் விளம்பர உத்திகளின் சில அபாயங்கள் குறித்தும் எச்சரித்தது.[6]
  • 2002 இல் வெளியான பிஎம்டபிள்யூ ஃபிலிம்ஸ் ஆரம்பகால வைரல் மார்க்கெட்டிங் பிரச்சாரங்களில் ஒன்றாகும். இது சுமார் 55 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்ததோடு கிளைவ் ஓவனின் தொழில் வாழ்க்கையை உயர்த்த உதவியது.
  • 2004 முதல் 2007 காலம் வரை ஓடிக் கொண்டிருந்த பர்கர் கிங்கின் தி சப்செர்வியன்ட் சிக்கன் பிரச்சாரம் வைரல் அல்லது செவி வழி விளம்பர உத்திக்கு மிகச் சிறந்த உதாரணம் என்று ஒயர்டு இதழ் மேற்கோள் காட்டியது.[7]
  • காட்பரி’ஸ் டெய்ரி மில்க் 2007 கொரில்லா விளம்பர பிரச்சாரம் யூட்யூப் மற்றும் ஃபேஸ்புக்கில் பெரும் பிரபலம் பெற்றது.
  • 2007 ஆம் ஆண்டில் நைன் இன்ச் நெயில்ஸ் வெளியிட்ட இயர் ஜீரோ கான்செப்ட் ஆல்பமும் ஒரு வைரல் மார்க்கெட்டிங் உத்தியை அடக்கியிருந்தது, இதில் இந்த இசைக்குழு NIN ஐரோப்பிய சுற்றுப்பயண கச்சேரிகளில் யுஎஸ்பி டிரைவ்களை விட்டு வருவதும் அடங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆல்பத்தின் சூழலாக அமையவிருக்கும் மோசமான வருங்கால சூழ்நிலை குறித்த துப்புகளும் தகவல்களும் கொண்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய இணையதளங்களின் தொடர்ச்சி வெளியானது.
  • 2007 ஆம் ஆண்டில், வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் கிறிஸ் ஜெரிகோ மீண்டும் வருவதை ஒரு 15 விநாடி ரகசிய பைனரி குறியீடு வீடியோக்கள் மூலமான வைரல் மார்க்கெட்டிங் பிரச்சாரம் மூலம் விளம்பரம் செய்தது. வீடியோக்கள் ஜெரிகோவை குறிக்கும் மறை செய்திகளையும் குறிப்புகளையும் அடக்கியிருந்தது, இந்த பிரச்சாரம் யாரைக் குறித்து செய்யப்படுகிறது என்பது குறித்து உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் ரசிகர்கள் இடையே ஏற்கனவே ஊகம் நிலவி வந்தது என்றாலும் கூட.[8][9] ”எங்களை காப்பாற்றுங்கள்” மற்றும் “2வது வருகை” ஆகிய உரைகள் தான் இந்த வீடியோக்களில் பிரதான இடம் பிடித்திருந்தவை. இந்த பிரச்சாரம் இன்டர்னெட்டில் ஏராளமான இணையதளங்களில் பரவியது, இது ஜெரிகோ திரும்ப வருவது குறித்த மறை செய்திகள் மற்றும் குறிப்புகளை அடக்கியதாக இருந்தது.[10][11]
  • 2009 ஆம் ஆண்டில் “ட்ரீ ஆஃப் லைஃப்” என்னும் ஒரு இணைய பயனர் ஒரு உணர்வு தூண்டும் கட்டுரையை சுற்றில் விடத் துவங்கினார், இந்த கட்டுரையை பல முறைகள் மறுபதிவிட இந்த கட்டுரை வாசகர்களை ஊக்குவித்தது. தி ப்ளேர் விட்ச் பிராஜெக்ட் (1999) வைரல் மார்க்கெட்டிங்கின் சிறந்த உதாரணமாக கூறப்பட்ட நிலையில், நகல் விளம்பர உத்தியாளர்களுக்கான சில அபாயங்கள் குறித்தும் அது எச்சரித்தது.[6]


  • 2007 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் விளம்பரத் துறை கட்டுரையாளரான ஸ்டூவர்ட் எலியட் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்காக வணிகத்திலிருந்து-வணிகத்திற்கு வைரல் பிரச்சாரம் குறித்து எழுதினார், இதில் நுகர்வோர் விளம்பரப்படுத்தலுக்கும் தாண்டிய பகுதிகளிலும் வைரல் விளம்பரத்திற்கு பயன்பாடு உள்ளதை அவர் காட்டினார்.[12]
  • 2007 ஆம் ஆண்டில், போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து கிளப்பான ஸ்போர்ட்டிங் போர்ச்சுகல் தங்களது சீசன் இடங்களுக்கான பிரச்சாரத்தில் ஒரு வைரல் அம்சத்தையும் சேர்த்துக் கொண்டிருந்தது. இவர்களது இணையதளத்தில் இருந்த வீடியோ ஒன்று ஓடத் துவங்கும் முன், பார்வையாளரை தனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிடும்படி கோரும், அடுத்து தனது வீரர்களுடன் லாக்கர் அறையில் காத்திருக்கும் பயிற்சியாளர் பவுலோ பென்டோ பார்வையாளருக்கு போன் செய்து அவர் சீசன் டிக்கெட்டை வாங்கும் வரை அவர்கள் சீசனை ஆரம்பிப்பதாக இல்லை என்று கூறுவதாக காட்சி இடம்பெற்றிருக்கும்.[13] இதில் சிறுகுறையில்லாமல் தயாரிக்கப்பட்டிருந்த வீடியோவும் தொலைபேசி அழைப்பு ஒத்திசைவும் அத்துடன் இது பார்வையாளருக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்ததாலும், 24 மணி நேரத்திற்குள்ளாக சுமார் 200,000 இணையபக்க பார்வையாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு இட்டுச் சென்றது.[மேற்கோள் தேவை]
  • டொரோன்டோவில் வசிக்கும் 25 வயது கன்னிப் பையனான ஜெப், தனது மிகவும் அழகான பெண் நண்பிகளில் ஒருவரான ஜென் மூலம், தனது கன்னித்தன்மையை இழக்க விரும்புவதாகவும், அதற்கு 30 நாட்களில் தனது வலைத்தளத்தில் ஐந்து மில்லியன் ஹிட்டுகள் அவசியப்படுவதாகவும், அதற்கு உதவுமாறும் Avirginsplea.com கோரியது.
  • 2008 இல் வெளிவந்த கிளாவர்ஃபீல்டு படத்தையொட்டி வெளிவந்த டீஸர் டிரெய்லரில் படத்தின் தலைப்பு இடம்பெறவிலை, அதன் வெளியீட்டு தேதி மட்டுமே "01·18·08." என வெளியானது. கற்பனைப் பாத்திரங்களுக்கு மைஸ்பேஸ் பக்கங்கள் உருவாக்கப்பட்டதும் படத்தில் மறைமுகமாய் குறிப்பிடப்பட்ட கற்பனை நிறுவனங்களுக்கு இணையதளங்கள் உருவாக்கப்பட்டதும் இதில் இருந்த வைரல் மார்க்கெட்டிங் பிரச்சார அம்சங்களில் அடக்கம்.
  • 2008 ஆம் ஆண்டில் வெளியான தி பிக் வேர்டு பிராஜெக்ட், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியையே மறுவரையறை செய்வதாக இருக்கிறது, இது மக்கள் தங்கள் இணையத்தளங்களை அவர்கள் தெரிவு செய்த வார்த்தைக்கான வரையறையாக சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. இரண்டு முதுகலை மாணவர் கல்வி அமைப்புகளுக்கு நிதி திரட்ட உருவாக்கப்பட்ட இந்த வைரல் மார்க்கெட்டிங் திட்டம் டேரிங் ஃபயர்பால் மற்றும் ஒயர்டு மேகசின் ஆகியவற்றில் இடம்பெற்று உலகெங்கிலுமான வலைப் பதிவர்களின் கவனத்தை ஈர்த்தது.[14]
  • 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தி டார்க் நைட் திரைப்படத்திற்கான விளம்பர பிரச்சாரம் ஆன்லைன் மற்றும் வெளி வாழ்க்கை அம்சங்கள் இரண்டும் கொண்டு அதனை ஒரு மாற்று ரியாலிட்டி விளையாட்டைப் போன்ற ஒன்றாக ஆக்கியது. ஜோக்கர் ரசிகர்களின் பெரும் கூட்டங்கள், உலகெங்கிலும் ஸ்கேவெஞ்சர் வேட்டைகள், கோதம் நகரின் அரசியல் அலுவல்களுக்கு ரசிகர்களை உண்மையாகவே “வாக்களிக்க” செய்யும் விரிவான மற்றும் ஆழ்ந்த இணையதளங்கள், இன்னும் கோதம் ரயில், கோதம் டிராவல் ஏஜென்சி, மற்றும் அரசியல் வேட்பாளரின் பக்கங்களுக்கு இணைப்புகள் கொண்ட ஒரு கோதம் நியூஸ் நெட்வொர்க் ஆகியவையும் கூட இதற்கு பயன்பட்ட உத்திகளில் அடக்கம். ஆயிரக்கணக்கான பேட்மேன் ரசிகர்களிடம் இருந்தான செவி வழி பிரச்சாரம் மூலம் இந்த படம் விளம்பரம் செய்தது.
  • ஹேலோ தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விளையாட்டுகள் வைரல் மார்க்கெட்டிங்கின் பின் வந்தன, இரண்டாவது விளையாட்டிற்கு ஐ லவ் பீஸ் என்கிற மாற்று ரியாலிட்டி கேம் வடிவத்திலும், மூன்றாவது விளையாட்டிற்கு ஐரிஸ் வடிவத்திலும் இந்த வைரல் மார்க்கெட்டிங் வந்தது.
  • சமீபத்தில், வரவிருக்கும் நேரடியாக-டிவிடிக்கு தயாராகும் திரைப்படமான எஸ்.டார்கோ படத்தை நேரடி அடிப்படையாகக் கொண்ட வைரல் வீடியோ கிளிப்புகள் இன்டர்னெட்டில் வெளியிடப்பட்டன. ஒன்று, டேஞ்சன்ட் யுனிவர்ஸில் இருந்து வந்த ஒரு பொருளால் கொல்லப்பட்ட ஒரு அப்பாவி குறித்த கேமரா தொகுப்பை அடக்கியிருக்கிறது, ரசிகர்-உருவாக்கியது போன்ற பாணியில் இருக்கும் இன்னொன்றில், இணை பிரபஞ்ச த்தில் இருந்து வரும் பொருட்களால் டோனி டார்கோ உள்ளிட்ட மக்கள் கொலையாவது குறித்த சித்தாந்தங்கள் இடம்பிடிக்கின்றன.
  • வில் இட் ப்ளென்ட்” - ப்ளென்ட்டெக் நிறுவனரான டாம் டிக்சன், தனது யூட்யூப் வீடியோ தொடரில் பல்வேறு பொருட்களை (லைட் பல்புகள் மற்றும் ஐபோன்கள் போன்றவை) ஒரு ப்ளென்ட்டெக் கலவை உருவாக்கியில் போட்டு கலவை செய்கிறார், இந்த நிகழ்ச்சி பெரும் இன்டர்னெட் வரவேற்பை பெற்றுள்ளது.

வைரல் விரிவாக்க வளையம் தொகு

ஒரே குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை தவிர ஒரு வைரல் விரிவாக்க வளையம் என்பது வைரல் மார்க்கெட்டிங்கை ஒத்தது தான்: வைரல் மார்க்கெட்டிங்கை எல்லையின்றி பெருக்கம் செய்து கொண்டே போக முடியாது, அதே சமயத்தில் வைரல் விரிவாக்க வளையம் இருக்க வேண்டுமென்றால் அது அவ்வாறு செய்தாக வேண்டும்.[15] முறையாக சிந்தித்து அமலாக்கப்பட்டால், ஒரு வைரல் வளையம் ஏறக்குறைய சுயபிரதியெடுப்பு வளர்ச்சியை உறுதியளிக்கிறது. சமூக வலைப்பின்னல் பொறியான நிங் (Ning) உட்பட நிறுவனங்கள் வைரல் வளையங்களை தங்களின் அனுகூலத்திற்கு பயன்படுத்த முயற்சித்திருக்கின்றன, அத்துடன் வைரல் வளையங்கள் டுவிட்டர், ஆர்குட், பேபால், யூட்யூப், ஃபேஸ்புக், மைஸ்பேஸ், டிக் (Digg) மற்றும் ஃப்ளிக்ஆர் (Flickr) உட்பட ஏராளமான வெப் 2.0 முன்னோடிகளுக்கு சக்தியளித்துள்ளன.

கூடுதல் பார்வைக்கு தொகு

குறிப்புதவிகள் தொகு

  1. "USAToday: Viral advertising spreads through marketing plans". ஜூன் 23, 2005, 2005
  2. "Wired: Commentary: Sock Puppets Keep It Shill on YouTube". Archived from the original on 2012-12-09. பார்க்கப்பட்ட நாள் 2009-12-19. மே 8, 2007
  3. Alan L. Montgomery (March-April 2001). "Applying Quantitative Marketing Techniques to the Internet" (PDF). Interfaces 31 (2): 90–108. doi:10.1287/inte.31.2.90.10630. http://pubsonline.informs.org/feature/pdfs/0092.2102.01.3102.90.pdf. பார்த்த நாள்: 2007-07-10. 
  4. Mullen, Megan Gwynne (2003). "A Scheduling and Programming Innovator". The Rise of Cable Programming in the United States: Revolution Or Evolution? (1st ). Austin, TX: University of Texas Press. பக். 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0292752733. http://books.google.com/books?id=c0ZYdOP8unIC&pg=PA170&dq=%22Keep+circulating+the+tapes%22&sig=6EsTpc_43pj4510c7DFBryxvIzU#PPA170,M1. பார்த்த நாள்: 2008-04-14. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "TiVo's Stealth Giveaway".
  6. 6.0 6.1 "Viral Marketing Alert!".
  7. "Marketers Feverish Over Viral Ads". Archived from the original on 2013-01-05. பார்க்கப்பட்ட நாள் 2009-12-19.
  8. "Breaking the Code". WWE. November 19, 2007.
  9. Clayton, Corey (November 19, 2007). "Orton burned by the second coming of Chris Jericho". WWE.
  10. "Chris Jericho - Save Us Secret Site". OnlineOnslaught.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-21.
  11. "New Info! Chris Jericho - Savior Self Secret Site". OnlineOnslaught.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-21.
  12. New York Times newsletter
  13. "Sporting Clube de Portugal". Archived from the original on 2008-02-14. பார்க்கப்பட்ட நாள் 2009-12-19.
  14. "Grad Students Redefine Easy Money With $1-a-Letter Web Site". Archived from the original on 2012-12-16. பார்க்கப்பட்ட நாள் 2009-12-19.
  15. Penenberg, Adam (May 2008). "Ning's Infinite Ambition" (Magazine). Fast Company (Mansueto Ventures LLC): pp. 76-84. 

நூற்பட்டி தொகு

  • சேத் கோடின்: Unleashing the ideavirus, 2001
  • இமானுவெல் ரோசென்: The Anatomy of Buzz, 2002
  • சுசானா கார்ட்னர்: Buzz Marketing with Blogs For Dummies, 2005
  • மார்க் ஹியூக்ஸ்: Buzzmarketing: Get People to Talk About Your Stuff, 2005
  • ரோன் மெக்டேனியல்: Buzzoodle Buzz Marketing, 2006
  • ஸ்டீபனோ கலிசியோ: Pass the Virus

! How to exploit the viral marketing to give an uproarious success to your own ideas, 2006

  • ஜேக் பரோ: Satanic Viruses - The fall of the Roman Empire and how to bring it about, 2008, 3வது பதிப்பு (முதலாவது 1989 இல் வெளியானது)