பராபரை மாலை
பராபரை மாலை என்பது வீரை அம்பிகாபதி இயற்றிய தோத்திர நூல்.
பராபரை மாலை [1] என்பது வீரை அம்பிகாபதி இயற்றிய தோத்திர நூல். 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதில் காப்புச் செய்யுள் ஒன்றும் "பரமாயப் பராபரையே" என முடியும் 53 விருத்தங்களும் உள்ளன. இந்த 53 பாடல்களும் வருக்கக் கோவை, வருக்கமாலை நூல்களில் [2] பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்படுவது போல அ, ஆ, இ, ஈ ... எழுத்துக்களை முதலெழுத்தாக அமைத்துக்கொண்ட பாடல்களாக அடுக்கப்பட்டுள்ளன. [3]
1
- அள்ளல் கமலம் கருஞ்சேறு நாறும் என்று அன்பர் தங்கள்
- உள்ளக் கமலத்து உறைகின நீ உம்பர் உள்ளம் உறும்
- கள்ளத்து இருக்கை கரைக்க என்றோ கம்பை ஆற்றங்கரைப்
- பள்ளத்து இருந் தவம்மே! பரமாய பாராபரையே
2
- சுரக்கும் பசு என்றும் சிந்தாமணி என்றும் சொல்லிச் செல்வம்
- கரக்கும் பெருஞ் செல்வரு பால் நடந்தே கவி கண்டு நிதம்
- இரக்கும் தொழிலில் தடுமாறி நெஞ்சம் இரவு பகல்
- பரக்கும் பரப்பு ஒழிப்பாய், பரமாய பாராபரையே
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 260.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ ஒப்புநோக்குக - ஆத்திசூடி, கொன்றைவேந்தன்
- ↑ எல்லா மொழிமுதல் எழுத்துக்களுக்கும் பாடல்கள் இல்லை. நெரிந்தெடுத்துக்கொண்ட சில முதலெழுத்துக்களை வைத்தே பாடல்கள் பாடப்பட்டுள்ளன
- ↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை