பரிசுத்தம் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி

தஞ்சாவூரில் உள்ள பொறியியல் கல்லூரி

பரிசுத்தம் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி ( Parisutham Institute of Technology and Science ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முன்னதாக திருச்சிரப்பள்ளியில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது

பரிசுத்தம் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரைTowards Excellence
வகைதனியார்
உருவாக்கம்2008
தலைவர்எஸ் பி அந்தோணிசாமி
கல்வி பணியாளர்
80 (முழு நேரம்)
நிருவாகப் பணியாளர்
150
மாணவர்கள்1100
அமைவிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
Colorsபச்சை     
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.parisuthamtech.com

இக்கல்லூரியை தொழிலதிபரும், தஞ்சாவூரில் உள்ள ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் குடும்ப உறுப்பினருமான திரு. எஸ். பி. அந்தோனிசாமி அவர்களால் 2008 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரியானது பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் தொழில்நுட்ப கல்வியை வழங்குகிறது. இது ஒரு சுய நிதி, சிறுபான்மை கல்வி நிறுவனம் ஆகும். இங்கு பள்ளிக்கல்வியை முடித்த மாணர்களுக்கு, நான்கு ஆண்டுகள் பொறியியல் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இது தகவல்தொடர்பு திறன், மென் திறன்கள், படைப்பாற்றல், உள்வாங்குதல் ஆகியவற்றை வளர்த்தல் மற்றும் சுய வளர்ச்சியில் மாணவர்களுக்கு உதவுவதே நோக்கம் எனப்படுகிறது.

இந்நிறுவனம் விளையாட்டில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இது சொந்தமாக உள் விளையாட்டரங்கம், உடற்பயிற்சி கூடம், உணவு மையம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அறிவியல் மற்றும் மானுடவியல் பள்ளிதொகு

இக்கல்லூரி பின்வரும் துறைகளை நிர்வகிக்கிறது:

 • ஆங்கிலத் துறை
 • கணிதத் துறை
 • இயற்பியல் துறை
 • வேதியியல் துறை

தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்விதொகு

கல்லூரி பின்வரும் துறைகளை நிர்வகிக்கிறது:

 • குடிசார் பொறியியல் துறை
 • கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
 • தகவல் தொழில்நுட்பத் துறை
 • இயந்திர பொறியியல் துறை
 • வான்வெளிப் பொறியியல் துறை
 • மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை
 • தொடர்பு பொறியியல் துறை

இருப்பிடம்தொகு

இக்கல்லூரியானது தஞ்சாவூரின் புறநகரில் உள்ள நாஞ்சிக்கோட்டை வட்டச் சாலையில் அமைந்துள்ளது. ஆள்கூறுகள்: 10°44′10″N 79°07′35″E / 10.7361°N 79.1264°E / 10.7361; 79.1264 இந்த வட்டச்சாலை தேசிய நெடுஞ்சாலை 67 (என்.எச் -67) என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்புகள்தொகு