பரிச்சா அனல் மின் நிலையம்

பரிச்சா அனல் மின் நிலையம் (Parichha Thermal Power Station) இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தில் பரிச்சாவில் அமைந்துள்ளது. இது ஜான்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் உத்தரப்பிரதேச மாநிலம் வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

செயல்பாடுகள்

தொகு

இந்த ஆலை இரண்டு நிலைகளுடன் மொத்தம் 6 அலகுகளைக் கொண்டுள்ளது. இந்த இயந்திரங்கள் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், எம் / எஸ் ஏபிபி, மெஸ் ஆல்ஸ்டோம், மெசஸ் யோகோகாவாவில் தயாரிக்கப்பட்டன. அனைத்து பிரிவுகளுக்கும் தேவையான நிலக்கரி பாரத் கோக்கிங் நிலக்கரி நிறுவனம் மற்றும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து சரக்கு ரயில் மூலம் வழங்கப்படுகிறது.[1]

இந்த நிலையத்தின் அனைத்து அலகுகளும் நிலக்கரி மூலம் எரியும் அனல் மின் நிலையங்களாகும். இதன் மொத்த உற்பத்தித் திறன் 1140 மெகாவாட் ஆகும்.[2] இங்குப் பின்வரும் அலகுகள் உள்ளன.

நிலை அலகுகள் எண். நிறுவப்பட்ட திறன் மதிப்பிடப்பட்ட திறன் ஒத்திசைவு தேதி வணிக செயல்பாட்டின் தேதி இயந்திர உற்பத்தியாளர்கள்
1 01 110 மெகாவாட் (எல். எம் இசட் மாதிரி) 110 31.03.1984 01.10.1985 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், இந்தியா.
2 02 110 மெகாவாட் (எல். எம் இசட் மாதிரி) 110 31.03.1984 டிச .1984 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், இந்தியா.
3 03 210 மெகாவாட் (கே. டபுள்யூ. யு. மாதிரி) 210 மே .2006 24.11.2006 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், இந்தியா.
4 04 210 மெகாவாட் (கே. டபுள்யூ. யு. மாதிரி) 210 28.12.2006 01.12.2007 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், இந்தியா.
5 05 250 மெகாவாட் (கே. டபுள்யூ. யு. மாதிரி) 250 15.05.2012 17.07.2012 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், இந்தியா.
6 06 250 மெகாவாட் (கே. டபுள்யூ. யு. மாதிரி) 250 17.09.2012 18.04.2013 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட், இந்தியா.

அனைத்து அலகுகளுக்கும் தேவையான நிலக்கரி பி.சி.சி.எல், ஈ.சி.எல் இன் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து ரயில்வே மூலம் வழங்கப்படுகிறது.

திறன்

தொகு

பரிச்சா அனல் மின் நிலையம் 1140 மெகாவாட் திறன் கொண்டது; 110 மெகாவாட்டின் 2 அலகுகள், 210 மெகாவாட்டின் 2 அலகுகள் மற்றும் 250 மெகாவாட்டின் 2 அலகுகள் என நிறுவப்பட்டுள்ளன. இதன் ஆறாவது அலகு 250 மெகாவாட் ஏப்ரல் 2013இல் தொடங்கப்பட்டது. மொத்த நிறுவப்பட்ட திறனாக 1140 மெகாவாட் உள்ளது. இது என்.ஆர்.எல்.டி.சி டெல்லி வழியாக தேசியத் கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிலை அலகு எண் நிறுவப்பட்ட திறன் (மெகாவாட்) நிலை
1 1 110 நிரந்தரமாக மூடப்பட்டது
1 2 110 நிரந்தரமாக மூடப்பட்டது
2 3 210 செயல்பாட்டில்
2 4 210 செயல்பாட்டில்
3 5 250 செயல்பாட்டில்
3 6 250 செயல்பாட்டில்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parichha Thermal Power Station". www.cseindia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.
  2. "Welcome to Uttar Pradesh Rajya Vidyut Utpadan Nigam Limited, Government of Uttar Pradesh, India. / Parichha Thermal Power Station". upenergy.in. Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-03.