பரித்கோட் இல்லம்

பரித்கோட் இல்லம் (Faridkot House) என்பது பரித்கோட் மகாராசாவுக்குச் சொந்தமான தில்லியில் உள்ள முன்னாள் குடியிருப்பு ஆகும். இந்த இல்லம் பரோடா இல்லத்திற்கு அடுத்துள்ள கோப்பர்நிக்கசு மார்க்கில் அமைந்துள்ளது. எடுப்பான நிறங்கள் வடிவ வடிவமைப்புகள் மற்றும் நெகிழி மற்றும் கண்ணாடிப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஆர்ட் டெக்கோ என்ற கலைநயத்துடன் இவ்வில்லம் கட்டப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளாக நடைபெற்ற நீதிமன்றப் போராட்டத்தை சர் அரீந்தர் சிங் பிராரின் மகள்கள் வெற்றிபெற்றனர். இந்த வெற்றியினால் அவர்களுக்கு 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து கிடைத்தது. இச்சொத்தில் பரித்கோட் இல்லமும் அடங்கும்[1][2][3][4][5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரித்கோட்_இல்லம்&oldid=2009409" இலிருந்து மீள்விக்கப்பட்டது