பரிஷிஷ்டபர்வன்
பரிஷிஷ்டபர்வன் (ஆங்கிலம்:Parishishtaparvan) என்பது ஹேமசந்திரா எழுதிய 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத மகாகாவியம் ஆகும். இது ஆரம்பகால சமண ஆசிரியர்களின் வரலாறுகளை விவரிக்கிறது. இந்தக் கவிதை நூல் 3,460 இரட்டை அடிகளைக் கொண்டுள்ளது, சமமற்ற நீளமுள்ள 13 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டைய இந்தியாவின் அரசியல் வரலாறு பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.[1][2]
திரிஷஷ்டிஷலாகபுருஷசரித்ரா (அறுபத்து மூன்று புகழ்பெற்ற மக்களின் வாழ்க்கை) என்ற சமணத்தின் முக்கிய நபர்களைப் பற்றிய பெரும் சமஸ்கிருதக் கவிதையை சாளுக்கிய மன்னன் குமாரபாலாவின் வேண்டுகோளுக்கிணங்க ஹேமசந்திரா இயற்றினார். ஸ்தவிரவலிசரித்ரா (சமண மூத்தோர்களின் வாழ்க்கை) இந்த தொகுப்பின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது, எனவே இது பரிஷிஷ்டபர்வன் அல்லது பின்னிணைப்பு என்று குறிப்பிடப்படுகிறது.[3]
காலம்
தொகுகவிதையில் பெரும்பாலும் உள்ளடக்கப்பட்டுள்ள காலம் கி.மு. 480 - கி.மு. 200 வரையிலான காலகட்டத்திற்கு ஒத்திருக்கிறதுஅண். 480 – அண். 200 BCE. இது மகத அரசின் வளர்ச்சியையும் மௌரிய பேரரசின் நிறுவுதலையும் பின்பற்றுகிறது. ஹேமசந்திராவின் கூற்றுப்படி, விவாதிக்கப்பட்ட சமணர்களின் காலத்தில் ஆட்சியாளர்களின் வரிசை: ஸ்ரேனிகா, குனிகா, உதயின், ஒன்பது நந்தர்கள், சந்திரகுப்த மௌரியா, அசோகா மற்றும் சம்பிரதி. சமணம் தெற்கே மேலும் பரவுவதில் சம்பிரதி முக்கியப் பங்கு வகித்ததாகவும் ஹேமசந்திரா கூறுகிறார்.[4] பரிஷிஷ்டபர்வன் ஹேமசந்திராவின் கடைசி பெரிய படைப்பாகும்.[3]
உள்ளடக்கம்
தொகுஇந்த உரை தன நந்தனின் தலைநகரைத் தாக்குவது பற்றிய சாணக்கியரின் தவறான உத்தியைப் பற்றி பேசுகிறது[5] . இந்த சம்பவத்திலிருந்து சாணக்கியர் பாடம் கற்றுக்கொண்டதாகவும், ஹிமவத்குட்டாவின் பர்வதகரிலிருந்து தொடங்கி விளிம்பு நிலை அரசுகளை இணங்க வைப்பதன் மூலம் தனது உத்தியை மாற்றியதாகவும் இது விவரிக்கிறது.[5]
மொழிபெயர்ப்பு
தொகு- The Lives of the Jain Elders (1998) by R.C.C. Fynes[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Upinder Singh 2016, ப. 26.
- ↑ Fynes 1998, ப. xxxiii.
- ↑ 3.0 3.1 Fynes 1998, ப. xi.
- ↑ Fynes 1998, ப. xxvii–xxix.
- ↑ 5.0 5.1 Mookerji 1966, ப. 34.
- ↑ Fynes 1998.