ஹேமச்சந்திரன்
ஆச்சார்யர் ஹேமச்சந்திரன் (Hemachandra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் சைன அறிஞரும், கவிஞரும், கணிதவியலாளரும், பல்துறைக் கலைஞரும் ஆவார். இவர் இலக்கணம், மெய்யியல், உரைநடை, கணிதம், சமகால வரலாறு ஆகியவற்றை எழுதினார். இவரது சமகாலத்தவர்களால் தலைசிறந்தவராகக் குறிப்பிடப்பட்ட இவர், கலிகாலசர்வக்ஞர் ("தனது காலத்தில் அனைத்து அறிவையும் அறிந்தவர்") என்ற பட்டத்தைப் பெற்றார்.
ஆச்சார்யர் ஹேமச்சந்திரன் சூரி | |
---|---|
Official name | ஆச்சார்ய ஹேமச்சந்திர சூரி |
சுய தரவுகள் | |
பிறப்பு | சங்கதேவன் அண்மை. 1088 (குறிப்பைப் பார்க்கவும்) தண்டுகம் |
இறப்பு | அண்மை. 1173 (குறிப்பைப் பார்க்கவும்) |
சமயம் | சைனம் |
பெற்றோர்(s) | சச்சிங்கன், பாகினி |
உட்குழு | சுவேதாம்பரர் |
குறிப்பிடத்தக்க ஆக்கம் | சித்த ஹேம சப்தானுசாசனம், யோக சாத்திரம் |
பதவிகள் | |
Initiation | சோமச்சந்திரன் கம்பாட் by தேவசந்திரசூரி |
Post | ஆச்சார்யர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஹேமச்சந்திரன், இன்றைய குசராத்தில் உள்ள தண்டுகாவில் பிறந்தார். இவரது பிறந்த தேதி ஆதாரங்களின்படி வேறுபடுகிறது ஆனால் பொ.ச.1088 பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[note 1] [1] இவரது தந்தை, சச்சிங்க-தேவன் ஒரு மோத் பணியா வைணவராவார். இவரது தாயார், பாகினி, ஒரு சைன பரம்பரையைச் சேர்ந்தவர்.[2] [3] ஹேமச்சந்திரரின் இயற்பெயர் சங்கதேவன் என்பதாகும். இவரது குழந்தைப் பருவத்தில், சைனத் துறவியான தேவசந்திரசூரி தண்டுகாவிற்கு வந்தபோது சிறுவன் சங்கதேவனின் திறமையைக் கண்டு வியந்தார். தேவசந்திரசூரியின் சீடராக சங்கதேவனை அனுப்ப இவரது தாயும், தாய்மாமாவும் விரும்பினர். ஆனால் இவரது தந்தை மறுத்துவிட்டார். ஆனால் தேவசந்திரசூரி சங்கதேவனை கம்பாட் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று சைன மதத்திற்கு மாற்றினார்.[2][3] இவருக்கு ஆன்மிகச் சொற்பொழிவுகள், தத்துவம், தர்க்கம், இலக்கணம் உட்பட பல சைன மற்றும் சைனமல்லாத புராணங்களில் பயிற்சி அளித்து ராஜஸ்தானின் நாகவுரிலுள்ள சுவேதாம்பர சைனப் பயிற்சி மையத்தில் ஆச்சாரியராக நியமிக்கப்பட்டு ஹேமச்சந்திரசூரி என மாற்றப்பட்டது. கம்பாட்டின் ஆளுநர் உதய் மேத்தா என்பவர், தேவசந்திரசூரிக்கு இவ்விழாவில் உதவினார்.[2][3] [3] [4]
அந்த நேரத்தில், குசராத் சோலாங்கி வம்சத்தால் அன்கிலாவத் பதானிலிருந்து (தற்போதைய பதான்) ஆட்சி செய்யப்பட்டது. ஹேமச்சந்திரர் எப்போது முதல் முறையாக பதானுக்கு வந்தார் என உறுதிப் படுத்தப்படவில்லை. சைனத் துறவிகள் சன்னியாசிகளாக இருப்பதால் எட்டு மாதங்கள் பிரயாணத்திலும், மழைக்காலமான நான்கு மாதங்கள் ஒரே இடத்திலிருந்து சாதுர்மாசிய விரதமிருப்பர். இந்தக் காலகட்டங்களில் இவர் பதானில் வசிக்கத் தொடங்கி, தனது பெரும்பாலான படைப்புகளை அங்கேயே உருவாக்கியிருக்கலாம்.[2]
அனேகமாக பொ.ச.1125 ஆம் ஆண்டில், இவர் செயசிம்ம சித்தராசனிடம் (ஆட்சிக்காலம் 1092 – 1142 ) அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் இவர் விரைவில் சோலாங்கிய அரச சபையில் பிரபலமடைந்தார்.[3] ஹேமச்சந்திரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாறான பிரபவசந்திரர் எழுதிய பிரபாவகசரிதம் என்ற நூலின்படி, செயசிம்மன் தனது தலைநகரின் தெருக்களில் செல்லும் போது இவரைக் கண்டான். இந்த இளம் துறவி சொன்ன ஒரு வசனத்தால் அரசன் ஈர்க்கப்பட்டான். [5]
செயசிம்மன் மால்வா மீது போரிட்டு பரமார மன்னனை தோற்கடித்த போது பல சமசுகிருத நூல்களை குசராத்து கொண்டு வந்தார். இந்த கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று 11 ஆம் நூற்றாண்டின் பரமார மன்னன் போஜனால் எழுதப்பட்ட இலக்கணக் கட்டுரையை உள்ளடக்கியது. இந்தப் பணியால் ஈர்க்கப்பட்ட செயசிம்மன், இலக்கணத்தைப் பற்றிய எளிமையானதும் விரிவான ஆய்வுக் கட்டுரையை எழுத ஹேமச்சந்திரரை நியமித்தார். ஹேமச்சந்திரர் பல படைப்புகளை ஆலோசித்த பிறகு புதிய கட்டுரையை முடித்தார். மேலும் புதிய படைப்பிற்கு சித்த ஹேம சப்தானுசாசனம் என மன்னனின் பெயரிட்டார்.[6][7] செயசிம்மன் இந்தியா முழுவதும் இந்த கட்டுரையை விநியோகித்தான். [6] ஹேமச்சந்திரர் திவ்யாச்சார்ய காவ்யம் போன்ற பிற படைப்புகளையும் இயற்றினார். அவை செயசிம்மனின் மரணத்திற்குப் பிறகு முடிக்கப்பட்டன.[8]
இறப்பு
தொகுஇவர் தனது மரணத்தை ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்தார். மேலும், தனது கடைசி நாட்களில் சல்லேகனை என்றழைக்கப்படும் சைன நடைமுறையில் விரதம் இருந்தார். இவர் அன்கிலாவத் பதானில் இறந்தார். ஆதாரங்களின்படி இறந்த ஆண்டு வேறுபடுகிறது. ஆனால் பொ.ச. 1173 என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. [1]
பணிகள்
தொகுஒரு அற்புதமான எழுத்தாளரான ஹேமச்சந்திரர், சமசுகிருதம், பிராகிருதம் ஆகியவற்றில் இலக்கணங்கள், கவிதைகள், உரைநடை, சொற்களஞ்சியம் , அறிவியல் , ஏரணம் பற்றிய நூல்களையும், இந்திய மெய்யியலின் பல கிளைகளைப் பற்றியும் எழுதினார். மொத்தம் 3.5 கோடி வசனங்களை ஹேமச்சந்திரர் இயற்றியதாகவும், அவற்றில் பல இப்போது காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
யோகசாத்திரத்தில் சைனப் பாதையைப் பற்றிய இவரது முறையான விளக்கமும் அதன் தன்னியக்க வர்ணனையும் சைன சிந்தனையில் மிகவும் செல்வாக்கு மிக்க உரையாகும். [9]
அவரது மற்ற படைப்புகள் அலங்கார சூடாமணி, அபிதான-சிந்தாமணி, [2] பிரமான-மீமாஞ்சம் (தர்க்கம்), விதர்க-தோத்ரம் (பிரார்த்தனைகள்) என்ற சொல்லாட்சிப் படைப்பில் ஒரு வர்ணனையாகும். [3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ The dates of birth and death differs according to sources. He was initiated at age of 21.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Joshi, Dinkar (1 January 2005). Glimpses of Indian Culture. Star Publications. pp. 79–80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7650-190-3.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Dundas, Paul. The Jains. Psychology Press. pp. 134–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-26606-2.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Datta, Amaresh (1 January 2006). The Encyclopaedia Of Indian Literature (A To Devo). Sahitya Akademi. pp. 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1.
- ↑ The Kumarapalacarita (Prakrta Dvyasraya Kavya) of Hemachandra with commentary of Purnakalashagani. The Bhandarkar Oriental Institute. 1936. pp. xxiii–xxv.
- ↑ Asoke Kumar Majumdar 1956.
- ↑ 6.0 6.1 Asoke Kumar Majumdar 1956, ப. 84-85.
- ↑ M. M. Jhaveri 1978, ப. 11.
- ↑ Asoke Kumar Majumdar 1956, ப. 85.
- ↑ Olle Quarnström, The Yogasastra of Hemacandra : a twelfth century handbook of Svetambara Jainism, 2002, introduction
- ↑ Gujarat (India) (1984). Gazetteers. Directorate of Government Print., Stationery and Publications. p. 183.
- ↑ Mehta, Makrand (1 January 1991). Indian Merchants and Entrepreneurs in Historical Perspective: With Special Reference to Shroffs of Gujarat, 17th to 19th Centuries. Academic Foundation. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7188-017-1.
ஆதாரங்கள்
தொகு- Doniger, Wendy, ed. (1993), Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-1381-0
- Asoke Kumar Majumdar (1956). Chaulukyas of Gujarat. Bharatiya Vidya Bhavan. இணையக் கணினி நூலக மைய எண் 4413150.
- Singh, Upinder (2016), A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-325-6996-6
- Cinnaiya, S., Nayara, H. K., & Mathura, R. (2017). Cakita kare Fibonācī. Bengaluru: Pratham Books.
வெளி இணைப்புகள்
தொகு- Trishashti Shalaka Purusha Caritra of Hemchandra English translation of books 1-10
- Bibliography of Hemachandra's works, Item 687, Karl Potter, University of Washington
- Acharya Hemchandra by Madhya Pradesh Hindi Granth Academy
- The Rhythm of Poetry
- The Golden Mean and the Physics of Aesthetics