முதன்மை பட்டியைத் திறக்கவும்

போஜன் (மன்னர்)

போஜராஜன் (Bhoja) (ஆட்சிக்காலம்:கி பி 1010-1055) இராசபுத்திர குல பரமார வம்சத்தின் பேரரசரரான போஜன், தாரா எனும் நகரத்தை தலைநகராகக் கொண்டு, மால்வா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கி பி 1010 முதல் 1055 முடிய ஆட்சி செய்த புகழ் பெற்ற இந்து மன்னராவர்.

போஜன் (மன்னர்)
பாரமார-பாட்டரக மகாராஜாதிராஜ பரமேஷ்வரன்

போஜராஜன்
பேரரசர் போஜனின் சிலை, போபால்
மால்வாவின் மன்னர்
ஆட்சிக்காலம் கி பி 1010-1055
முன்னையவர் சிந்துராஜன்
பின்னையவர் முதலாம் ஜெயசிம்மன்
தந்தை சிந்துராஜன்
மரபு பரமார வம்சம்
பிறப்பு {வார்ப்புரு:Place of birth

போஜராஜனின் ஆட்சிப் பரப்பு வடக்கே சித்தோர்கார் முதல் தெற்கே கொங்கண் வரையிலும், மேற்கே சபர்மதி ஆறு முதல் கிழக்கே விதிஷா வரையிலும் பரவியிருந்தது.

மன்னர் போஜன் கலை, இலக்கியம், அறிவியலையும் மற்றும் கலைஞர்களையும், அறிஞர்களையும் பேணி காக்கும் புரவலர் எனப் பெயர் பெற்றவர். போஜ சாலை எனும் கல்வி நிறுவனத்தை நிறுவி சமசுகிருத படிப்புகளை கற்க வகை செய்தவர்.

போஜராஜன் பல்துறை அறிஞர் ஆவார். பல சிவன் கோயில்களை எழுப்பியவர். தற்கால மத்தியப் பிரதேசத்தில் போஜ்பூர் எனும் நகரை நிறுவி, அந்நகரத்தில் சிவன் கோயிலை எழுப்பினார். இக்கோயில் போஜராஜனின் வரலாற்றை நினைவு படுத்தும் ஒரே சின்னமாக இன்றும் உள்ளது.

விக்கிரமாதித்தன் கதைகளின் துவக்கத்தில் போஜராஜன் குறித்தான குறிப்புகள் உள்ளது. மகாகவி காளிதாசன், போஜராஜனின் அரசவைக் கவிஞர் ஆவார்.[1]

திரைப்படம்தொகு

தமிழ் மொழியில் மன்னர் போஜன் வரலாறு குறித்து 1948-இல் திரைப்படம் வெளிவந்துள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

ஆதார நூற்பட்டியல்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜன்_(மன்னர்)&oldid=2712146" இருந்து மீள்விக்கப்பட்டது