போஜசாலை
போஜசாலை ( Bhojshala) (‘போஜ மண்டபம்’) போஜ்சாலா எனவும் அறியப்படும் இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்திலுள்ள தார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று கட்டிடமாகும். மத்திய இந்தியாவின் பரமார வம்சத்தின் புகழ்பெற்ற மன்னன் போஜனிடமிருந்து இந்த பெயர் பெறப்பட்டது. போஜன் கலை, இலக்கியம், அறிவியலையும் மற்றும் கலைஞர்களையும், அறிஞர்களையும் பேணி காக்கும் புரவலர் எனப் பெயர் பெற்றவர். கவிதைகள், யோகக் கலை மற்றும் கட்டிடக்கலை பற்றிய முக்கிய சமசுகிருத படிப்புகளையும் கற்க வகை செய்தவர்.[1] போஜ சாலை என்ற சொல் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டிடத்துடன் இணைக்கப்பட்டது; கட்டமைப்பின் கட்டடக்கலை பகுதிகள் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. ஆனால் முக்கியமாக 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. வளாகத்தில் உள்ள இசுலாமிய கல்லறைகள் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சேர்க்கப்பட்டன.[1] வரலாறு: போஜ மன்னன்தொகுஇராசபுத்திர குலமான பரமார வம்சத்தின் பேரரசரரான போஜன், தார் எனும் நகரத்தை தலைநகராகக் கொண்டு, மால்வா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கி பி 1010 முதல் 1055 முடிய ஆட்சி செய்த புகழ் பெற்ற இந்து மன்னராவர். போஜராஜனின் ஆட்சிப் பரப்பு வடக்கே சித்தோர்கார் முதல் தெற்கே கொங்கண் வரையிலும், மேற்கே சபர்மதி ஆறு முதல் கிழக்கே விதிஷா வரையிலும் பரவியிருந்தது. போஜன் கலை, இலக்கியம், அறிவியலையும் மற்றும் கலைஞர்களையும், அறிஞர்களையும் பேணி காக்கும் புரவலர் எனப் பெயர் பெற்றவர்.[2] போஜ சாலை எனும் கல்வி நிறுவனத்தை நிறுவி சமசுகிருத படிப்புகளை கற்க வகை செய்தவர்.[3][4] போஜராஜன் பல்துறை அறிஞராவார். பல சிவன் கோயில்களை எழுப்பியவர். தற்கால மத்தியப் பிரதேசத்தில் போஜ்பூர் எனும் நகரை நிறுவி, அந்நகரத்தில் சிவன் கோயிலை எழுப்பினார். இக்கோயில் போஜராஜனின் வரலாற்றை நினைவு படுத்தும் ஒரே சின்னமாக இன்றும் உள்ளது. விக்கிரமாதித்தன் கதைகளின் துவக்கத்தில் போஜராஜன் குறித்தான குறிப்புகள் உள்ளது. மகாகவி காளிதாசன், போஜராஜனின் அரசவைக் கவிஞர் ஆவார்.[5] போஜன் போஜ்பூரில் ஒரு சிவன் கோவிலைக் கட்டத் தொடங்கினார். அவர் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டிருந்தால், கஜுராஹோ நினைவுச்சின்னங்களின் தொகுதியிலுள்ள இந்துக் கோயில்களை விட இரண்டு மடங்கு பெரியதாக இருந்திருக்கும். கோயில் ஓரளவு கட்டி முடிக்கப்பட்டது. மேலும் போஜன் இந்துக் கோயில்களை நிறுவி கட்டினார் என்பதை கல்வெட்டுச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.[3] ஆய்வு மற்றும் கல்வெட்டுகள்தொகுதார் தொல்லியல் தளங்கள், குறிப்பாக கல்வெட்டுகள், காலனித்துவ இந்தியர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆரம்பகால கவனத்தை ஈர்த்தது. ஜான் மால்கம் போஜ மன்னரால் திட்டமிடப்பட்டு முடிக்கப்பட்ட அணைகள் போன்ற கட்டுமான திட்டங்களுடன் 1822 இல் தார் நகரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[6] பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1871 இல் பாவ் தாஜியின் முயற்சியால் போஜ சாலையின் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வு தொடர்ந்தது.[6] 1903 இல் தார் சமஸ்தானத்தின் கல்விக் கண்காணிப்பாளரான கே. கே. லேலே, கமால் மௌலாவில் உள்ள தூண் மண்டபத்தின் சுவர்களிலும் தரையிலும் பல சமசுகிருத மற்றும் பிராகிருத கல்வெட்டுகளை கண்டுபிடித்தபோது இத்தளம் உலகிற்கு தெரிய வந்தது. [7] கல்வெட்டுகளின் ஆய்வு இன்றுவரை பல்வேறு அறிஞர்களால் தொடர்கிறது. தளத்தில் உள்ள பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளின் வகை மற்றும் அளவு, அவற்றில் சமசுகிருத மொழியின் இலக்கண விதிகளை வழங்கும் இரண்டு பாம்பு கல்வெட்டுகள், பொருட்கள் பரந்த பகுதியிலிருந்தும் பல்வேறு கட்டமைப்புகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டதைக் காட்டுகின்றன.[8] இரோதாவின் ரௌலா வேலாதொகுஜான் மால்கம் கமல் மௌலாவிலிருந்து ஒரு பொறிக்கப்பட்ட கல்வெட்டை கண்டெடுத்ததாகக் குறிப்பிட்டார். [9] இது பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கவிஞர் இரோதாவால் இயற்றப்பட்ட ஒரு கவிதைப் படைப்பான ரௌலா வேலா என்று தோன்றுகிறது.[10] இது இந்தியின் ஆரம்ப வடிவங்களில் ஒரு தனித்துவமான கவிதைப் படைப்பாகும். இந்தக் கல்வெட்டு முதலில் மும்பையின் ஆசியச் சங்கத்தில் வைக்கப்பட்டு பின்னர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்க்ராயலத்துக்கு மாற்றப்பட்டது. [11] கூர்மசடகம்தொகுகே.கே.லேலே கண்டுபிடித்த கல்வெட்டுகளில், விஷ்ணுவின் கூர்மம் அல்லது ஆமை அவதாரத்தைப் புகழ்ந்து பேசும் தொடர்ச்சியான வசனங்களைக் கொண்ட ஒரு பிராகிருதக் கல்வெட்டு இருந்தது. 'கூர்மசடக மன்னன் போஜன் இதை அமைத்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் பதிவின் பழங்காலவியல் இந்த நகல் பன்னிரண்டாம் அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டதாகக் கூறுகிறது. இந்த உரை 1905-06 இல் ரிச்சர்ட் பிச்செல் என்பவரால் வெளியிடப்பட்டது. புதிய பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு 2003 இல் வி. எம். குல்கர்னியால் வெளியிடப்பட்டது.[12] இந்தக் கல்வெட்டு தற்போது கட்டிடத்தின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைதொகுபோஜசாலை தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக உள்ளது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் மேற்கிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இக்கட்டிடம் என்-எம்பி-117 என்ற எண்ணைக் கொண்டுள்ளது. சில சமயங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் இந்த தளத்தை உரிமை கொண்டாடி தங்கள் பிரார்த்தனைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்தியத் தொல்லியல் துறையின் வழிகாட்டுதல்களின்படி, முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையும், இந்துக்கள் செவ்வாய் கிழமையும் சரசுவதி தேவிக்காக வசந்த பஞ்சமி பண்டிகையிலும் பிரார்த்தனை செய்யலாம். மற்ற நாட்களில் பார்வையாளர்களுக்காக தளம் திறக்கப்படுகிறாது. 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் மூலம் கட்டிடம் இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது[13] மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
ஆராய்ச்சிக் குறிப்புகள்தொகு
|