பாவ் தாஜி
இராமச்சந்திர விட்டல் லாட் ( Ramachandra Vitthal Lad ) (1822-1874), பொதுவாக டாக்டர். பாவ் தாஜி லாட் என்று அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய மருத்துவரும், சமசுகிருத அறிஞரும் மற்றும் பழங்காலப் பொருட்களின் ஆர்வலரும் ஆவார். 1869 முதல் 1871 வரை இரண்டு முறை மும்பையின் செரிப்பாக பணியாற்றினார். நவீன மும்பையை உருவாக்குவதில் இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக, பல சாலைகள், பகுதிகள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டன.
மருத்துவர் பாவ் தாஜி லாட் | |
---|---|
डॉ. भाऊ दाजी लाड | |
மும்பையின் மூன்றாவது மற்றும் செரிப் | |
பதவியில் 1870–1871 | |
முன்னையவர் | இவரே |
பின்னவர் | தோசபாய் பிராம்ஜி கரகா |
பதவியில் 1869–1870 | |
முன்னையவர் | பூமோஞ்சி ஓர்முசி வாடியா |
பின்னவர் | இவரே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராமச்சந்திர விட்டல் லாட் 1822 மாண்ட்ரெம், போர்த்துகேய இந்தியா |
இறப்பு | 1874 (aged 52) |
தேசியம் | பிரித்தானிய இந்தியர் |
அரசியல் கட்சி | மும்பைச் சங்கம் |
முன்னாள் கல்லூரி | எல்பின்ஸ்டோன் கல்லூரி கிராண்ட் மருத்துவக் கல்லூரி |
வேலை | மருத்துவர், பழங்காலப் பொருட்கள் ஆர்வலர், சமூக சேகவர் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுபாவ் தாஜி லாட் 1822 இல் கோவாவின் மாண்ட்ரெம் (மஞ்சரி) என்ற இடத்தில் ஒரு கவுட சாரஸ்வத் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். சதுரங்க விளையாட்டில் இவரது புத்திசாலித்தனத்தைக் கவனித்த ஒரு ஆங்கிலேயர் இவருக்கு ஆங்கிலக் கல்வியைக் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.
பாவ் தாஜி, மும்பைக்கு குடிபெயர்ந்து எல்பின்ஸ்டோன் நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். இந்த நேரத்தில் இவர் சிசுக்கொலை பற்றிய கட்டுரை எழுதியதற்காக பரிசு பெற்றார். மேலும் எல்பின்ஸ்டோன் நிறுவனத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1850 ஆம் ஆண்டில் கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று கல்லூரியின் முதல் பட்டதாரியானார்.
மருத்துவ வாழ்க்கை
தொகு1851 ஆம் ஆண்டில், பாவ் தாஜி மும்பையில் மருத்துவப் பயிற்சியை வெற்றிகரமாகத் தொடங்கினார். மேலும், சமசுகிருத மருத்துவ இலக்கியங்களைப் படித்தார். தொழு நோய் பற்றி ஆராயும் வரலாற்று ஆர்வமுள்ள பிற நோயியல் பாடங்களில், பண்டைய இந்துக்கள் அற்புதமான சக்திகளைக் கூறிய மருந்துகளின் மதிப்பையும் இவர் சோதித்தார்.[1]
கல்வியாளர்
தொகுகல்வியின் தீவிர ஊக்குவிப்பாளராக இருந்த இவர், மும்பையில் கல்வி வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தின் சக ஊழியர்களில் ஒருவர். மாணவர் இலக்கிய மற்றும் அறிவியல் சங்கத்தின் பூர்வீக வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவராக இருந்தார். பெண்கள் கல்வி கற்கவேண்டிய காரணத்தை முன்னிறுத்தினார். இவரது பெயரில் ஒரு பெண்கள் பள்ளி நிறுவப்பட்டது. அதற்காக இவரது நண்பர்கள் மற்றும் பின்பற்றுபவர்களிடமிருந்து நன்கொடை பெறப்பட்டது. எல்பின்ஸ்டன் கல்லூரியில் 'தின்யான் பிரசாரக் சபா' என்பதைத் தொடங்கினார். மேலும், எல்பின்ஸ்டோன் நிதியத்தின் அறங்காவலராகவும் இருந்தார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுஇந்தியாவில் நிகழும் அரசியல் முன்னேற்றங்களில் பாவ் தாஜி மிகுந்த ஆர்வம் காட்டினார். மும்பைச் சங்கம் மற்றும் கிழக்கிந்திய சங்கத்தின் மும்பை கிளைகள் இவரது அவருடைய திறமை மற்றும் உழைப்பினால் வளர்ச்சியடைந்தது. மருத்துவர் பாவ் தாஜியின் நினைவாக, மும்பையின் மாட்டுங்காவிலுள்ள கிங்ஸ் சர்க்கிளில் ஒரு சாலைக்கு இவரது பெயரிடப்பட்டது. 1869 இல் ஒரு முறையும், 1871 இல் இரண்டு முறையும் மும்பையின் செரிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
ஆராய்ச்சி
தொகுஇங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உள்ள பல்வேறு அறிவியல் சங்கங்கள் இவருக்கு உறுப்பினர் பதவியை வழங்கின. அரச கழக ஆசியச் சங்கத்தின் மும்பை கிளையின் பத்திரிகைக்கு இவர் பல கட்டுரைகளை வழங்கினார்.[2]
பொழுதுபோக்குகள்
தொகுஅரிய பழங்கால இந்திய நாணயங்களின் பெரிய சேகரிப்பை இவர் கொண்டிருந்தார். இவர் இந்திய தொல்ல்லியல் பொருட்களைப் படித்தார். கல்வெட்டுகளைப் புரிந்து கொண்டார். மேலும், பண்டைய சமசுகிருத ஆசிரியர்களின் தேதிகள் மற்றும் வரலாற்றைக் கண்டறிந்தார். பாவ் தாஜி லாட் மே 1874 இல் இறந்தார்.[2]
மும்பை, விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 1975 இல் இவரது பெயரில் மருத்துவர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது. அது தற்போது கலை மற்றும் பாரம்பரியத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்கு சான்றாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Bhau Daji". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press.
- ↑ 2.0 2.1 2.2 2.3 இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Bhau Daji". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press.