மருத்துவர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம்

இந்தியாவின் மும்பையிலுள்ள ஒரு அருங்காட்சியகம்

மருத்துவர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம் (Dr. Bhau Daji Lad Museum) என்பது மும்பையிலுள்ள மிகப் பழமையான அருங்காட்சியகம் ஆகும். பைகுல்லாவின் கிழக்கிலுள்ள பைகுல்லா விலங்குக்காட்சிசாலையின் அருகாமையில் அமைந்துள்ள இது, முதலில் 1855 ஆம் ஆண்டில் அலங்கார மற்றும் தொழில்துறை கலைகளின் இல்லமாக நிறுவப்பட்டது, பின்னர் இந்திய மருத்துவர் பாவ் தாஜியின் நினைவாக மறுபெயரிடப்பட்டது.

மருத்துவர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம்
மருத்துவர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகத்தின் முன்பக்கத் தோற்றம்
மருத்துவர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம் is located in Mumbai
மருத்துவர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம்
Location within Mumbai
நிறுவப்பட்டது2 May 1872; 152 ஆண்டுகள் முன்னர் (2 May 1872)
அமைவிடம்வீர் மாதா ஜிஜாபாய் போன்ஸ்லே உத்யான், டாக்டர். பாபா சாகப் அம்பேத்கர் மார்க், பைகுல்லா கிழக்கு, மும்பை, மகாராட்டிரம்- 400027.
ஆள்கூற்று18°58′46″N 72°50′05″E / 18.979472°N 72.834806°E / 18.979472; 72.834806
நிறுவியவர்ஜார்ஜ் கிறிஸ்டோபர் மோல்ஸ்வொர்த் பேர்ட்வுட்
ஜம்சேத்ஜி ஜிஜீபாய்
பாவ் தாஜி
ஜெகந்நாத் சங்கர்சேத்
ஜியார்ஜ் பஸ்ட்
இயக்குனர்தஸ்நீம் சக்காரியா மேதா
வலைத்தளம்www.bdlmuseum.org

வரலாறு

தொகு

காலனித்துவ நிர்வாகியான ஜான் எல்பின்ஸ்டோன் 1855 ஆம் ஆண்டில் மும்பையில் முதல் அருங்காட்சியகமாக இயற்கை வரலாறு, பொருளாதாரம், புவியியல், தொழில் மற்றும் கலைகளுக்கான மத்திய அருங்காட்சியகம் ஒன்றை நிறுவினார். 1857 ஆம் ஆண்டில், இது மூடப்பட்டது . அதன் சேகரிப்பு வேறொரு பகுதிக்கு மாற்றப்பட்டது. 1858 ஆம் ஆண்டில், ஜார்ஜ் பேர்ட்வுட் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். விரைவில், அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கு பணம் திரட்டுவதற்காக பாவ் தாஜி மற்றும் ஜெகந்நாத் சங்கர்சேத் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 1862 இல் புதிய கட்டிடத்தின் அடித்தளம் போடப்பட்டது. டேவிட் சசோன், ஜம்சேத்ஜி ஜிஜீபாய் மற்றும் ஜெகந்நாத் சங்கர்சேத் போன்ற பல பணக்கார இந்திய வணிகர்கள் மற்றும் பரோபகாரர்களின் ஆதரவுடன் இது கட்டப்பட்டது.

 
அருங்காட்சியகத்தின் உட்புறங்கள்

பைகுல்லாவிலுள்ள ஜிஜாமாதா உதயானில் தற்போதைய கட்டிடத்தின் கட்டுமானம் 1862 இல் தொடங்கி 1871 இல் நிறைவடைந்தது.[1] இந்த அருங்காட்சியகம் 1872 மே 2 அன்று மும்பையிலுள்ள ‘விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகம் ’என்ற பெயரில் திறக்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 1,1975 அன்று, அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கு உதவிய டாக்டர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம் என்று மறுபெயரிடப்பட்டது. பாவ் தாஜி லாட் மும்பையின் முதல் இந்திய செரிப்பாகவும் வரலாற்றாசிரியராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தார். அருங்காட்சியகக் குழு முதன்முதலில் நிறுவப்பட்டபோது அதன் செயலாராகவும் இருந்தார்.[2]

2003 ஆம் ஆண்டில், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையானது, ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை மற்றும் பெருநகரமும்பை மாநகராட்சி ஆகியவற்றுடன் இணைந்து கட்டிடத்தை விரிவாக புதுப்பித்தது.[3][4]

ஐந்து வருட தீவிரமான பணிகளுக்குப் பிறகு, அருங்காட்சியகம் ஜனவரி 4,2008 அன்று பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

விருதுகளும் அங்கீகாரமும்

தொகு
 
'வீர் மாதா ஜிஜாபாய் போன்ஸ்லே உத்யான்' நுழைவாயிலில் ஒரு கடிகார கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகம் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர் விகாஸ் திலவாரியால் மீட்டெடுக்கப்பட்ட பின்னர் கலாச்சார பாதுகாப்பில் யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் விருதை வென்றது.[5]

2016 ஆம் ஆண்டில், இந்த அருங்காட்சியகம் தரம், தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் கவனம் செலுத்தியதற்காக தங்க பிரிவில் சர்வதேச தர கிரீடம் விருதைப் பெற்றது.[6]

நிர்வாகம்

தொகு

இந்த அருங்காட்சியகம் பொது-தனியார் கூட்டாண்மையால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் முதல் கலாச்சார நிறுவனமாகும். இந்த கூட்டாண்மை பெருநகரமும்பை மாநகராட்சி, ஜம்னாலால் பஜாஜ் அறக்கட்டளை மற்றும் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை ஆகியவற்றை உள்ளடக்கியது.[7]

சேகரிப்புகள்

தொகு
 
எலிபெண்டா தீவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட யானைச் சிற்பம்

இந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள், வரைபடங்கள் மற்றும் மும்பையின் வரலாற்று புகைப்படங்கள், களிமண் மாதிரிகள், வெள்ளி மற்றும் செம்பு பொருட்கள் மற்றும் ஆடைகள் உள்ளன. அதன் குறிப்பிடத்தக்க சேகரிப்புகளில் 17 ஆம் நூற்றாண்டின் ஆதிம்தையின் கையெழுத்துப் பிரதியும் அடங்கும்.[8]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "PLACES". Maharashtra State Gazetteers-Greater Bombay District. Archived from the original on 9 August 2011.
  2. "DR. Bhau Daji Lad Mumbai City Museum - About". bdlmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 23 April 2022.
  3. "Bhau Daji Lad museum to be finally inaugurated". இந்தியன் எக்சுபிரசு. 2 January 2008. பார்க்கப்பட்ட நாள் 27 June 2009.
  4. Thomas, Skye Arundhati (25 August 2017). "Mumbai's oldest museum looks to the future". Apollo Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
  5. Talreja, Sarvesh (19 January 2018). "Timeless treasures of Bhau Daji Lad Museum" (in en). Mint. https://www.livemint.com/news/business-of-life/timeless-treasures-of-bhau-daji-lad-museum-1541868156777.html. 
  6. Menon, Rashmi (9 August 2016). "Mumbai's Dr Bhau Daji Lad museum to get a Crown!". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/mumbais-dr-bhau-daji-lad-museum-to-get-a-crown/articleshow/53616782.cms. 
  7. "Dr. Bhau Daji Lad Museum - The Tripatriate Agreement". Dr. Bhau Daji Lad Museum website. Archived from the original on 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011.
  8. "Passage To Bombay". Outlook (in ஆங்கிலம்). 5 February 2022. பார்க்கப்பட்ட நாள் 23 April 2022.

வெளி இணைப்புகள்

தொகு