ஜார்ஜ் கிறிஸ்டோபர் மோல்ஸ்வொர்த் பேர்ட்வுட்

ஆங்கிலோ-இந்திய அதிகாரி, இயற்கை ஆர்வலர், எழுத்தாளர்

சர் ஜார்ஜ் கிறிஸ்டோபர் மோல்ஸ்வொர்த் பேர்ட்வுட் (Sir George Molesworth Birdewood) (8 டிசம்பர் 1832 ஜூன் 1917) சர் ஜார்ஜ் பேர்ட்வுட் என்றும் அழைக்கப்படும் இவர் ஆங்கிலோ-இந்திய அதிகாரியும், இயற்கை ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். இவர், 1846 முதல் 1858 வரை அப்போதைய மம்பாயின் முதல் செரிப்பாக பணியாற்றினார்.

ஜார்ஜ் பேர்ட்வுட்
இந்தியப் பேரரசின் ஆணை , இந்தியப் பேரரசின் நட்சத்திரத் தகுதி, செவாலியே விருது
பம்பாயின் முதல் செரிப்
பதவியில்
1846 - 1858
முன்னையவர்பதவி உருவானது
பின்னவர்பூமாஞ்சி ஓர்முசி வாடியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜார்ஜ் கிறிஸ்டோபர் மோல்ஸ்வொர்த் பேர்ட்வுட்

8 டிசம்பர் 1832
பெல்காம், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு28 ஜூன் 1917 (வயது 85)
ஈலிங், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானிய இந்தியர்
துணைபிரான்சிசு ஆன் தோல்ச்சர்
பெற்றோர்கிறிஸ்டோபர் பேர்ட்வுட்(தந்தை)
இலிடியா ஜூலியானா டைலர் (தந்தைr)
முன்னாள் கல்லூரிபிளைமவுத் இலக்கணப் பள்ளி
எடின்பரோ பல்கலைக்கழகம்
வேலைஇயற்கை ஆர்வலர், எழுத்தாளர்
விருதுகள்இந்தியப் பேரரசின் ஆணை
இந்தியப் பேரரசின் நட்சத்திரத் தகுதி
செவாலியே விருது

வாழ்க்கை

தொகு

ஜெனரல் கிறிஸ்டோபர் பேர்ட்வுட்டின் மகனான இவர், அப்போதைய பம்பாய் மாகாணத்தில் பெல்காமில், 1832 டிசம்பர் 8 அன்று பிறந்தார்.[1][2] இங்கிலாந்தின் பிளைமவுத் இலக்கணப் பள்ளி மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு இவர் "கருத்துக்களின் தோற்றம்" ("The origin of ideas") என்ற ஆய்வறிக்கையை முன்வைத்து முனைவர் பட்டம் பெற்றார்.[3] 1854 ஆம் ஆண்டில் பம்பாய் மருத்துவ சேவையில் நுழைந்த இவர், 1856 முதல் 1857 முடிய நடைபெற்ற ஆங்கிலேய பாரசீகப் போரில் பணியாற்றினார். பின்னர் கிராண்ட் மருத்துவக் கல்லூரி பேராசிரியராகவும், பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகவும், பம்பாயின் செரிப்பாகவும் மற்றும் ஆசிய மற்றும் தோட்டக்கலை சங்கங்களின் செயலாளராகவும் பணியாற்றினார்.[2]

== ஜார்ஜ் கிறிஸ்டோபர் பம்பாயின் நகராட்சியின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டினார்.அங்கு இவர் செல்வாக்கையும் பிரபலத்தையும் பெற்றார். 1868 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு இந்திய அலுவலகத்தின் வருவாய் மற்றும் புள்ளிவிவரத் துறையில் பணியில் சேர்ந்தார். [2]

இந்திய பத்திரிகைகளுக்கு தொடர் பங்களிப்புகளுடன் இந்தியாவுடனான தனது தொடர்பை இவர் பராமரித்தார். மேலும் இந்திய இளவரசர்கள் மற்றும் தன்னுடன் படித்த இந்தியர்களுடன் நீண்டகாலம் நட்புடன் இருந்தார். 1846 ஆம் ஆண்டில் இவர் பம்பாயின் செரிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டில் இவர் இந்தியப் பேரரசின் ஆணையின் நைட் கமாண்டர் ஆனார். மேலும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் இவருக்கு சட்டத்தில் முனைவர் பட்டம் வழங்கியது. பிரான்சிய அகாதமி வழங்கிய செவாலியே விருது பெற்றவர்.[4]

இறப்பு

தொகு

பேர்ட்வுட் 1917 ஜூன் 28 அன்று ஈலிங்கில் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Head, Raymond (1988). "Indian Crafts and Western Design from the Seventeenth Century to the Present". RSA Journal 136 (5378): 121–122. பன்னாட்டுத் தர தொடர் எண்:0958-0433. https://www.jstor.org/stable/41374508. 
  2. 2.0 2.1 2.2 Chisholm 1911.
  3. Birdwood, George Christopher Molesworth (1854) (in en). The origin of ideas. https://era.ed.ac.uk/handle/1842/32836. 
  4. Dictionary of Indian Biography.
  5.    "Birdwood, Sir George Christopher Molesworth". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (12வது) 30. (1922). 456–457. 

மேலும் படிக்க

தொகு
  • Rao, C. Hayavadana, தொகுப்பாசிரியர் (1915). "Birdwood, Sir George Christopher Molesworth". The Indian Biographical Dictionary. 
  • Cooper, Thompson, தொகுப்பாசிரியர் (1884). "Birdwood, George Christopher Molesworth". Men of the Time.