ஆங்கிலேய பாரசீகப் போர்

ஆங்கிலேய-பாரசீகப் போர் (Anglo–Persian War) பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளுக்கும், பாரசீகத்தை (தற்கால ஈரான்) ஆண்ட குவாஜர் பேரரசின் படைகளுக்கும் 1 நவம்பர் 1856 முதல் 4 ஏப்ரல் 1857 முடிய நடைபெற்ற போராகும். பிரித்தானியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானித்தானின் ஹெராத் நகரத்தை பாரசீகர்கள் கைப்பற்றினர். ஹெராத் நகரத்தை விட்டு வெளியேற பாரசீகர்களை, பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர் கேட்டுக் கொண்டனர். இதனை பார்சீகர்கள் மறுத்த காரணத்தால் இப்போர் நடைபெற்றது. போரின் முடிவில், பாரசீகப் படைகள் தோற்றது. 1857-இல் செய்து கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் படி, பாரசீகர்கள் ஹெராத் நகரத்திலிருந்து படைகள் திரும்பப் பெற்றனர்.அதே போல் பிரித்தானிய இந்தியப் படைகளும் பாரசீகத்திலிருந்து வெளியேறினர்.

ஆங்கிலேய பாரசீகப் போர்

1857 கூசாப் சன்ன்டையின் சித்திரம்
நாள் 1 நவம்பர் 1856–4 ஏப்ரல் 1857
(5 மாதம்-கள் and 3 நாள்-கள்)
இடம் தெற்கு பாரசீகம் (ஈரான்), கீழ் மெசொப்பொத்தேமியா; மேற்கு ஆப்கானித்தான்
பிரித்தானிய இந்திய அரசுக்கு வெற்றி.[1][2]
  • 1857 பாரிஸ் உடன்படிக்கை
  • பார்சீகத்திலிருந்து பிரித்தானியப் படைகள் திரும்பப் பெறுதல்
  • ஆப்கானித்தானின் ஹெராத் நகரத்திலிருந்து பாரசீகப் படைகள் திரும்பப் பெறுதல்
பிரிவினர்
ஆப்கானித்தான் அமீரகம்
 பிரித்தானியா
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
பாரசீகத்தின் குவாஜர் வம்சம்
தளபதிகள், தலைவர்கள்
பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் சர் ஜேம்ஸ் அவுட்ரம்
தோஸ்த் முகமது கான்
நாசர் அல்-தீன் ஷா
பலம்
தரைப்படையின் 21-வது பிரிவு, புனா குதிரைப் படை குவாஜர் அரசக் காவல் படை, தெற்கு பாரசீகப் படைகள்

மேற்கோள்கள் தொகு

  1. Denemark & Robert p. 148
  2. "ANGLO-IRANIAN RELATIONS ii. Qajar period – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-01. பிரிட்டனுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் ஈரானுக்கான பிரித்தானிய மந்திரி திரு. முர்ரே உடனான குழப்பத்தால் மேலும் மோசமடைந்தது. அவர் தெகுரானை விட்டு வெளியேறினார். மிர்சா அகா கான் தனது கவனத்தை ஹெறாத் நகரம் பக்கம் திருப்பினார், அங்கு (1855) ஈரானியக் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த ஒரு புதிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஷா ஆப்கானித்தானுக்கு ராணுவத்தை அனுப்பினார். அக்டோபர் 1856 இல், ஹெறாத் நகரம் ஈரானியர்களிடம் வீழ்ந்தது. பதிலுக்கு பிரிட்டன் ஆங்கிலோ-பாரசீகப் போரைத் தொடங்கியது. போரின் விளைவாக ஈரான் விரைவில் தோல்வி அடைந்தது. 1857 இல் பாரிஸ் அமைதி ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஈரான் இறுதியாக ஆப்கானித்தானுக்கு உரிமை கோரியது.

ஆதார நூற்பட்டியல் தொகு

  • Sandes, Lt Col E.W.C. The Indian Sappers and Miners (1948) The Institution of Royal Engineers, Chatham.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anglo-Persian War
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலேய_பாரசீகப்_போர்&oldid=3924543" இலிருந்து மீள்விக்கப்பட்டது