எலிபெண்டா தீவு
எலிபெண்டா தீவு, இதனை காரபுரி தீவு அல்லது போரித் தீவு என்றும் அழைப்பர் (Elephanta Island or Gharapuri Island or Pory Island[1]) மகாராட்டிரா மாநிலத் தலைநகரம் மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்த பல தீவுகளில் ஒன்றாகும். எலிபெண்டா தீவில் உள்ள எலிபண்டா குகைகளில் இந்து, பௌத்தக் குடைவரைக் கோயிலைக் கொண்டுள்ளது.
எலிபெண்டா தீவு
एलिफेंटा आइलैंड காராபுரி | |
---|---|
தீவு | |
ஆள்கூறுகள்: 18°57′36″N 72°56′06″E / 18.96°N 72.935°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
பெருநகரம் | மும்பை |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மும்பை நகரத்தின் தென்கிழக்கில் 10 கிமீ தொலைவில் அமைந்த இத்தீவின் புகழ் பெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தால், உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட[2] எலிபண்டா குகைகளைக் காண, மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயிலிருந்து, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு இயந்திரப் படகு, எலிபெண்டா தீவிற்கு இயக்கப்படுகிறது. எலிபெண்டா தீவிலிருந்து மும்பைக்குத் திரும்ப, முதல் படகு மதியம் 12.30க்கும், கடைசிப் படகு மாலை 5.30க்கும் இயக்கப்படுகிறது. இத்தீவில் சுற்றுலாப் பயணிகள் இரவில் தங்க அனுமதி இல்லை.
எலிபெண்டா தீவு 16 கிமீ பரப்பளவு கொண்டது. 18°57′N 72°56′E / 18.95°N 72.93°E. எலிபெண்டா தீவு, ராய்காட் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
எலிபெண்டா தீவு தென்னை, மா, புளி போன்ற மரங்களுடைய அடர்ந்த காடாக உள்ளது.
இத்தீவின் மக்கள் தொகை 1,200 மட்டுமே. இங்குள்ள மக்கள் நெல் பயிரிடுதல், மீன் பிடித்தல், படகுகளை பழுது நீக்குதல் போன்ற பணிகளில் உள்ளனர். இத்தீவின் உயரமான பகுதியில், மராத்தியப் பேரரசின் இரண்டு பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளது.
எலிபெண்டா தீவில் செண்ட்பந்தர், மோராபந்தர் மற்றும் ராஜ்பந்தர் என மூன்று குக்கிராமங்கள் உள்ளது. எலிபண்டா குகைகள் செண்ட்பந்தர் கிராமத்தில் உள்ளது. மோராபந்தர் கிராமம் அடர்ந்த காடுகளைக் கொண்டது. எலிபெண்டா தீவில் இரவில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதியில்லை.
படக்காட்சியகம்
தொகு-
எலிபெண்டா அறிவிப்புப் பலகை
-
எலிபண்டா தீவின் காட்சி
-
எலிபண்டா தீவு
-
தோனித்துறையிலிருந்து எலிபெண்டா மலையடிவாராத்திற்குச் செல்லும் சிறு இரயில்
-
எலிபெண்டா தீவின் பீரங்கி தளம்
-
தீவில் வாழும் மீனவர்கள்
-
எலிபெண்டா – மும்பை சுற்றுலாப் படகு
-
பீரங்கி தளத்திலிருந்து ஒரு காட்சி
-
எலிபெண்டா தீவின் வீடுகள்
-
சிவன் குகை (முக்கியக் குகை)
-
குகையின் சிற்பங்கள்
-
திருமூர்த்திகளின் சிற்பம், எலிபெண்டா தீவு
-
சிவன் குகைக் கோயிலின் மண்டபம்
-
எலிபெண்டா குகைகள்
-
எலிபெண்டா குகைகள்
-
கங்காதர மூர்த்தி (வலது), சிவ-பார்வதி (இடது)
-
அர்த்தநாரீஸ்வரர்
-
கயிலை மலையில் சிவ-பார்வதி
-
கயிலை மலையை தூக்கும் இராவணன்
மேற்கோள்கள்
தொகு- Elephanta பரணிடப்பட்டது 2005-08-10 at the வந்தவழி இயந்திரம்
- Elephanta caves
- UNESCO World Heritage Site
- Going’s tough at Gharapuri
- Duffer's Guide to Elephanta, மிட் டே, Feb 22, 2007, pg A14