வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991

1991 வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 (The Places Of Worship (Special Provisions) Act, 1991), பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 நாளுக்கு முன்னர் வழிப்பாட்டு தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் இச்சட்டத்தின் மையக் கருத்தாகும்.[1]

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991
சான்றுACT NO. 42 OF 1991
சுருக்கம்
எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடைசெய்வதற்கும், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையைப் பேணுவதற்கும், அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களுக்காகவும் ஒரு சட்டம்.

இச்சட்டத்தின் படி, 15 ஆகஸ்டு 1947-க்கு முன்னர் ஒரு சமயத்தினரின் அல்லது ஒரு சமயப் பிரிவின் வழிபாட்டுத் தலத்தை, வேறு சமயத்தினரோ அல்லது ஒரே சமயத்தின் வேறொரு பிரிவினரோ ஆக்கிரமிப்பு செய்திருந்தால் இச்சட்டப்படி, ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் இச்சட்டம் பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி நிலப்பிரச்சினைக்கு பொருந்தாது.[2]

பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்வு மனைகள் மற்றும் எஞ்சி நிற்பவைகள் சட்டம், 1958இன் கீழ் (The Ancient Monuments and Archaeological. Sites and Remains Act -1958) பாதுகாக்கப்பட்டுள்ள தொன்மையான மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.[3]

வரலாறு

தொகு

அயோத்தி இராமர் கோவில் இயக்கம் உச்சம் அடைந்த காலத்தில், இந்த சட்டம் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்திற்கும், மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கும் மற்றும் மதுரா பள்ளிவாசல் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும். இவைகள் இரண்டும் தற்போதும் நிலப்பிரச்சினையில் ஒரு பகுதியாக இருக்கும் இடங்கள் ஆகும்.

இச்சட்டம் குறித்தான இந்திய உச்ச நீதிமன்றத்தின் விமர்சனம்

தொகு

ராம ஜென்ம பூமிபாபர் மசூதி விவகாரத்தில் இந்துக் கட்சிக்காரர்களுக்கு ஆதரவாக அமைந்த உச்ச நீதிமன்றத்தின் 2019-ஆம் ஆண்டு அயோத்தி சிக்கலுக்கான தீர்ப்பில், 1991-ஆம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் சட்டம் ஒரு சட்டரீதியான தலையீடு என்றும், இது நமது மதச்சார்பற்ற விழுமியங்களின் இன்றியமையாத அம்சமாக பின்வாங்குவதை பாதுகாக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Places Of Worship (Special Provisions) Act, 1991
  2. What does the Places of Worship Act protect?
  3. https://tamil.news18.com/news/explainers/all-you-need-to-know-about-mughal-era-gyanvapi-mosque-and-1991-places-of-worship-special-provisions-act-sal-747660.html