மதுரா பள்ளிவாசல்

மதுரா சாகி ஈத்கா பள்ளிவாசல் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்தில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ளது. மதுராவில் இருந்த பழைய கிருஷ்ணர் கோயிலை இடித்த இடத்தில், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கட்டளையின் படி, மதுரா பிரதேச முகலாயப் படைத்தலைவர் அப்துன் நபி என்பவரால் 1662-இல் நிறுவப்பட்டது.[1]

சாகி ஈத்கா பள்ளிவாசல், மதுரா
மதுரா பள்ளிவாசல் புகைப்படம், ஆண்டு 1855.
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மதுரா, உத்தரப் பிரதேசம், இந்தியா
சமயம்இசுலாம்
மசூதியின் பின்னணியில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில்

கட்டிடக்கலை தொகு

மதுரா பள்ளி வாசல் 4 மினார்கள் கொண்டது. அவைகள் ஒவ்வொன்றும் 40 மீட்டர் (132 அடி) கொண்டது. மசூதியின் முகப்பின் இரு பக்கச் சுவர்களிலும் அல்லாவின் 99 திருப்பெயர்கள் பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜென்மபூமி நில மீட்பு வழக்கு தொகு

மதுராவில் உள்ள ஈத்கா பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்ற வழக்கை ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவரால், மதுரா நகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கிருஷ்ண ஜென்மபூமி என்று கருதப்படும் இடத்தில், மதுரா கிருஷ்ணர் கோயிலின் 13.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, 17ஆம் நூற்றாண்டில் ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்றும், அதனை மீட்டு மதுரா கிருஷ்ணர் கோயிலுக்கு மீட்டுத் தரவேன்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த வழக்கு மதுரா நகர சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் 1991 வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இந்த தள்ளுபடி செய்தனர்.[2] கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யுமாறு மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.[3][4][5]இந்த வழக்கில் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி மற்றும் ஏழு பேர் குழந்தை தெய்வம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா விராஜ்மான், மதுரா கிருஷ்ணா ஜன்மபூமி அறக்கட்டளை மற்றும் கிருஷ்ணா ஜென்மஸ்தான சேவா சங்கம் ஆகியோர் வாதிகளாகவும்; சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் சாகி ஈத்கா பள்ளிவாசல் அறக்கட்டளை மேலாண்மை குழு ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_பள்ளிவாசல்&oldid=3625339" இருந்து மீள்விக்கப்பட்டது