பரோசோரசு
பரோசோரசு (Barosaurus) என்பது நீண்ட வால், நீண்ட கழுத்துக் கொண்ட தாவரம் உண்ணும் வகையைச் சார்ந்த மாபெரும் டைனசோராக இருந்தது. இது மிகவும் அறிந்திருக்கும் டிப்லோடோக்கசு இனத்துக்கு நெருங்கிய தொடர்பு கொண்டதாய் இருந்தது.
பரோசோரசு புதைப்படிவ காலம்:Late Jurassic, | |
---|---|
Mounted skeleton in rearing posture, American Museum of Natural History | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
வரிசை: | |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | †பரோசோரசு Marsh, 1890
|
இனம்: | †B. lentus
|
இருசொற் பெயரீடு | |
Barosaurus lentus Marsh, 1890 |
பெயரீடு
தொகுபரோசோரசு (Barosaurus) எனும் பெயர் கிரேக்கச் சொற்களான “கனமான” எனும் பொருள் தரும் பாரிசு (βαρυς) மற்றும் “பல்லி” எனும் அர்த்தம் தரும் சோரசு (σαυρος) என்பவற்றின் சேர்க்கையால் உருவானது; எனவே இது “கனமான பல்லி” ஆகின்றது.
விளக்கம்
தொகுஇது ஒரு பெரிய உருப்படியான விலங்கினமாகும். முதிர்ந்த இனமொன்று 26 மீற்றர் (85 அடி) நீளத்தையும் 20 மெட்ரிக் தொன் எடையையும் கொண்டிருந்தது. [1] டிப்லோடோக்கசுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் நீளமான கழுத்தையும் (10 மீற்றர் நீளம்)[2] குறுகிய வாலையும் கொண்டிருந்தது, ஆனால் இவை இரண்டும் ஏறக்குறைய ஒரே மொத்த நீளம் உடையவை.[3] இவற்றின் மண்டையோடுகள் இதுவரையிலும் அகழ்வாயிலோ அல்லது தொல் ஆய்விலோ கண்டுபிடிக்கப்படவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Seebacher, Frank. (2001). "A new method to calculate allometric length-mass relationships of dinosaurs". Journal of Vertebrate Paleontology 21 (1): 51–60. doi:10.1671/0272-4634(2001)021[0051:ANMTCA]2.0.CO;2.
- ↑ National Geographic, Museum Secrets, Episode 3: Royal Ontario Museum, Segment "Lost Dinosaur". Broadcast 2012-12-10.
- ↑ McIntosh, John S. (2005). "The genus Barosaurus Marsh (Sauropoda, Diplodocidae)". In Tidwell, Virginia & Carpenter, Ken (eds.) (ed.). Thunder-lizards: The Sauropod Dinosaurs. Bloomington: Indiana University Press. pp. 38–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-34542-1.
{{cite book}}
:|editor=
has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)