பர்கூர் பாலமுருகன் கோயில்
பர்கூர் பாலமுருகன் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]
அருள்மிகு பாலமுருகன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | ஜெகதேவி சாலை, பர்கூர், கிருஷ்ணகிரி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பர்கூர் |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | பாலமுருகன் |
தாயார்: | வள்ளிதெய்வாணை |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடிக்கிருத்திகை, 7 நாட்கள் |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் சிறிய குன்றின்மீது அமைந்துள்ளது. இக்கோயிலை அடைய ஏறக்குறைய 60 படிகள் ஏறிச் செல்லவேண்டும். இக்கோயிலில் பாலமுருகன், வள்ளிதெய்வாணை சன்னதிகளும், விநாயகர், சிவன், நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. கோயிலின் வெளியே இடும்பன் சந்நிதி அமைந்துள்ளது.[2] இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடிக்கிருத்திகை, 7 நாட்கள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
அமைவிடம்
தொகுஇக்கோயில் கிருஷ்ணகிரி- சென்னை நெடுஞ்சாலையில் 20 கி.மீ தொலைவில் பருகூர் அமைந்துள்ளது. பருகூர் ஜெகதேவி செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 76–77.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)