பர்சானா (Barsana), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.[1] இது இந்து தொன்மவியல் ஊர் ஆகும். கிருஷ்ணரின் இளமைப் பருவ தோழியான இராதை பிறந்த ஊராகும். இவ்வூரில் இராதை-கிருஷ்ணர் நினைவுவைப் போற்றும் விதமாக இராதா ராணி கோயில் அமைந்துள்ளது.

பர்சானா
பேரூராட்சி
பர்சானாவில் இராதா ராணி கோயில்
பர்சானாவில் இராதா ராணி கோயில்
அடைபெயர்(கள்): ராதையின் பிறந்த ஊர்
பர்சானா is located in உத்தரப் பிரதேசம்
பர்சானா
பர்சானா
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பர்சானாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°38′56″N 77°22′44″E / 27.64889°N 77.37889°E / 27.64889; 77.37889
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்மதுரா
ஏற்றம்182 m (597 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்9,215
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி & பிராஜ் பாஷா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்281405
வாகனப் பதிவுUP-85

மதுராவிற்கு வடமேற்கே 50 கிலோ மீட்டர் தொலைவில், இராஜஸ்தான் மாநில எல்லையை ஒட்டி பர்சானா ஊர் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10 வார்டுகளும், 1,950 குடும்பங்களும் கொண்ட பர்சானா பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 11,184 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 5,914 மற்றும் பெண்கள் 5,270 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 891 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1712 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 69.9%. ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 2,278 மற்றும் 0 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.9%, இசுலாமியர்கள் 3.84% மற்றும் பிறர் 0.27% ஆக உள்ளனர்.[2]இங்குள்ள மக்கள் இந்தி & பிராஜ் பாஷா பேசுகின்றனர்.

முக்கிய இடங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்சானா&oldid=3437004" இருந்து மீள்விக்கப்பட்டது