பர்தியா திடீர்த் தாக்குதல்

பார்டியா திடீர்த்தாக்குதல் (Bardia raid) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு திடீர்த்தாக்குதல். இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். பிரித்தானிய அதிரடிப் படைகள் அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டிலிருந்த பார்டியா நகரில் நாசம் விளைவிக்கவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் இத்திடீர்த்தாக்குதலை நிகழ்த்தின.

பார்டியா திடீர்த்தாக்குதல்
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி
நாள் 19/20 ஏப்ரல் 1941
இடம் பார்டியா, சிரனைக்கா, லிபியா
பிரிட்டானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஆத்திரேலியா
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் லெப்டினன்ட் கர்னல் கோல்வின் நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
இத்தாலி ரொடோல்ஃபோ கிராசியானி
பலம்
நம்பர் 7 கமாண்டோ
1 டாங்கு படைப்பிரிவு
எச். எம். எசு, கிளென்கயில், கோவன்ட்ரி, சுட்டூவர்ட், வாயேஜர், வாட்டர்ஹென் மற்றும் டிரியம்ஃப்
தெரியவில்லை
இழப்புகள்
ஒருவர் கொல்லப்பட்டர்
70 போர்க்கைதிகள்
ஒரு பீரங்கிக் குழுமமும் ஒரு சரக்குக் கிடங்கும் தகர்க்கப்பட்டன

1941ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அச்சு நாட்டுப்படைகள் டோபுருக் நகரை முற்றுகையிட்டன. இந்த முற்றுகையில் ஈடுபட்டிருந்த படைகளுக்கு அனுப்பப்படும் தளவாடங்களின் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதற்காக பார்டியா மீது திடீர்த்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பிரிட்டானிய கமாண்டோ படைகள் கடல்வழியாக பார்டியா அருகே தரையிறங்கி அந்நகரைத் தாக்கின. ஆனால் அவை எதிர்பார்த்தபடி பார்டியா நகரில் அச்சு நாட்டுப்படைகள் எதுவும் இல்லை. அங்கிருந்த தளவாட கிடங்கு மற்றும் பீரங்கிக் குழுமத்தை மட்டும் அழித்துவிட்டு பின்வாங்கின. இத்தாக்குதலில் மோதல் எதுவும் நிகழவில்லையென்றாலும் நேச நாட்டுப் படைகளால் தங்கள் படைநிலைகளுக்குப் பின்புறம் தாக்கி தளவாடப் போக்குவரத்துக்கு ஊறு விளைவிக்க முடியும் என்று ஜெர்மானியத் தளபதிகளுக்குப் புலனானது. இதனால், தளவாடப் போக்குவரத்தை வருங்கால நாசத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க சொல்லம் நகரிலிருந்த ஒரு பிரிவை பார்டியாவுக்கு அவர்கள் அனுப்பினர். இதனால் போர்முனையில் நேச நாட்டுப் படைகளுக்கு நெருக்கடி சற்றே குறைந்தது.