பர்தீப் சாகு

பர்தீப் சாகு (பிறப்பு: ஆகஸ்ட் 21, 1985) இந்தியன் பிரீமியர் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார்.

பர்தீப் சாகு
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு21 ஆகத்து 1985 (1985-08-21) (அகவை 35)
பிவானி, அரியானா, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை பந்துவீச்சு
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல்,கூக்ளி
பங்குபந்து வீச்சு பன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002/03–2011/12ஹரியானா கிரிக்கெட் அணி
2015ராஜஸ்தான் ராயல்ஸ்
2016–தற்போது வரைகிங்ஸ் லெவன் பஞ்சாப்
மூலம்: ESPNcricinfo

வாழ்க்கை மற்றும் தொழில்தொகு

2002 ஆம் ஆண்டில் தனது 17 வயதில் தனது முதல் தர அறிமுகமானதிலிருந்து, சாஹு 2011 வரை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹரியானாவுக்காக அவ்வப்போது விளையாடி வந்தார். 2012 ஆம் ஆண்டில், அவர் மும்பைக்கு தனது வசிப்பிடத்தை மாற்றினார். அங்கு தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்ததில் தணிக்கையாளராக பணியாற்றினார். நவம்பர் 2014 இல் நடந்த கங்கா லீக் பிரிவு ஒரு போட்டியில், சாஹு ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி, லீக்கில் அவ்வாறு செய்த நான்காவது பந்து வீச்சாளராக ஆனார். [1]

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரால் 2015 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ரூபாய் 10 லட்சத்திற்கு சாஹு வாங்கப்பட்டார், ஆனால், அந்த காலகட்டத்தில் எந்த போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. 2016 ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதே விலைக்கு தேர்வு செய்தது. ஜனவரி 2018 இல், அவரை 2018 ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியது. [2]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தீப்_சாகு&oldid=3038361" இருந்து மீள்விக்கப்பட்டது