பர்த்மார்க்
பர்த்மார்க் (Birthmark) என்பது 2024 இல் சிறீதரன் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் நாடகத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் சபீர் கல்லரக்கல், மிர்னா மேனன், போர்கோடி செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தை சேப்பியன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விக்ரம் சிறீதரனும் சிறீராம் சிவராமனும் தயாரித்தனர்.[2]
பர்த்மார்க் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | விக்ரம் சீறீதரன் |
தயாரிப்பு | விக்ரம் சிறீதரன் சிறீராம் சிவராமன் |
கதை | விக்ரம் சீறீதரன் சிறீராம் சிவராமன் |
இசை | விஷால் சந்திரசேகர் |
நடிப்பு | சபீர் கல்லரக்கல் மிர்னா மேனன் |
படத்தொகுப்பு | இனியவன் பாண்டியன் |
கலையகம் | சாபின்சு எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 23 பெப்பிரவரி 2024 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- டேனியலாக சபீர் கல்லரக்கல்
- ஜெனிபர் கதாபாத்திரத்தில் மிர்னா மேனன்
- ஆசாவாக போர்கோடி செந்தில்
- செபாசுதியன் கதாபாத்திரத்தில் இந்திரசித்
- அமுலுவாக தீப்தி ஓரியண்டேலு
- குந்தவியாக பி. ஆர். வரலட்சுமி
தயாரிப்பு
தொகுபடத்தின் தலைப்புத் தோற்றம் சூன் 2023 இல் வெளியிடப்பட்டது [3]
வரவேற்பு
தொகுதி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ரூபா இராதாகிருஷ்ணன் 5 இற்கு 3 என்று மதிப்பிட்டதுடன் "சபீர் கல்லரக்கல், மிர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக அற்புதமானவர்கள் என்றும், நடக்கும் அனைத்தையும் விற்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்" என்றும் குறிப்பிட்டார்.[4] விக்ரம் சிறீதரன் ஒரு வித்தியாசமான கதையுடன் படத்தை இயக்கியுள்ளார் என்று மாலை மலர் விமர்சகர் கூறினார்.[5] சினிமா எக்ஸ்பிரஸின் விமர்சகர் ஒருவர் "பர்த்மார்க் ஒரு ஈர்க்கக்கூடிய அமைப்புடன் நம் கவனத்தை ஈர்க்கிறது, ஆனால் ஒற்றைப்படை இயக்குநர் தேர்வுகள், தொனி சிக்கல்கள், பலவீனமான திரைக்கதை காரணமாக, திரைப்படம் பார்த்து நாம் உணர விரும்பும் பதற்றத்தை அரிதாகவே உணர்கிறோம்". என்று எழுதினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Director Vikram Shreedharan: The portrayal of pregnancy in Birthmark is not a plot device, but the plot itself". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 22 பெப்பிரவரி 2024. Archived from the original on 2024-02-25. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
- ↑ "Birthmark". The Times of India. 2024-02-10 இம் மூலத்தில் இருந்து 2024-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220011415/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/birthmark-a-story-of-love-and-danger-in-1999/articleshow/107581582.cms.
- ↑ "Shabeer Kallarakkal and Mirnaa to headline Birthmark". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 7 June 2023. Archived from the original on 2024-01-17. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
- ↑ "Birthmark Movie Review : A film to remember rather than reminisce which does have conviction but isn't coherent" இம் மூலத்தில் இருந்து 2024-02-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240224165852/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/birthmark/movie-review/107906804.cms. பார்த்த நாள்: 2024-02-25.
- ↑ "பர்த்மார்க்". மாலை மலர். 2024-02-23. Archived from the original on 2024-02-25. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
- ↑ "Birthmark Movie Review: Misses the mark by a mile". சினிமா எக்ஸ்பிரஸ். 23 பெப்பிரவரி 2024. Archived from the original on 25 பெப்பிரவரி 2024. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்பிரவரி 2024.