பர்புபாய் வசவா
இந்திய அரசியல்வாதி
பர்புபாய் நாகர்பாய் வசவா (Parbhubhai Vasava; பிறப்பு மார்ச் 1,1970) ஓர் இந்திய அரசியல்வாதியும் குசராத்து பர்தோலி மக்களவைத் தொகுதி மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2012இல் மாண்ட்வி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த வசவா 2014-இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[1] இவர் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பர்தோலி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[2]
பர்புபாய் வசவா
| |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர்-இந்திய நாடாளுமன்றம் பர்தோலி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
தொகுதி | பர்தோலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1970 கோல்காதி, மாண்டவி, குஜராத், சூரத்து, குசராத்து |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பன்னாபென் பி வசவா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | சதாவவ், மாந்தவி, சூரத், குசராத்து |
வேலை | விவசாயம் |
As of 15 திசம்பர், 2016 மூலம்: [1] |
வசவா மீண்டும் மூன்றாம் முறையாக 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 763950 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் இந்தியத் தேசியக் காங்கிரசு வேட்பாளர் சவுத்ரி சித்தார்த் அமர்சிங்கை தோற்கடித்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Narendra Modi-ruled Gujarat to hold polls for 7 assembly seats in sync with Lok Sabha elections". 5 March 2014.
- ↑ "Vasava, Shri Parbhubhai Nagarbhai". Lok Sabha. Archived from the original on 13 October 2016. பார்க்கப்பட்ட நாள் 12 October 2016.
- ↑ "Bardoli Constituency Lok Sabha Election Results 2024". Bru Times News (in ஆங்கிலம்).
- ↑ "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024". results.eci.gov.in/.