மாண்டவி, குஜராத்

மாண்டவி (Mandvi), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றத்துடன் கூடிய துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் 450 ஆண்டு கால பழமையான சிறு கப்பல் கட்டும் துறை கொண்டுள்ளது. 2001 குஜராத் நிலநடுக்கத்தின் போது மாண்டவி நகரம் பெரும் அழிவுகளைச் சந்தித்தது.

மாண்டவி
நகரம்
மாண்டவி கடற்கரை
மாண்டவி கடற்கரை
மாண்டவி is located in குசராத்து
மாண்டவி
மாண்டவி
மாண்டவி is located in இந்தியா
மாண்டவி
மாண்டவி
ஆள்கூறுகள்: 22°50′00″N 69°21′20″E / 22.83333°N 69.35556°E / 22.83333; 69.35556
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்கட்ச் மாவட்டம்
Established1580
தோற்றுவித்தவர்முதலாம் கேங்கர்ஜி
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்51,376
மொழிகள்
 • அலுவல் மொழிகள்கட்சு மொழி, குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
370465
தொலைபேசி குறியீடு2834
வாகனப் பதிவுGJ-12
பாலின விகிதம்0.970 / 0.930
source:Census of India[1]

அமைவிடம்

தொகு

துறைமுக நகரமான மாண்டவி 22°49′N 69°22′E / 22.81°N 69.36°E / 22.81; 69.36 ருக்மாவதி ஆற்றின் கரையில், கட்ச் வளைகுடாவில், கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாண்டவி நகரம் மாவட்டத் தலைமையிடமான புஜ் நகரத்தின் தெற்கில் 56 கிமீ தொலைவிலும், அகமதாபாத் நகரத்திலிருந்து 446 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

கோட்டை

தொகு
 
சிதிலமடைந்த கோட்டைச் சுவர்கள்

மாண்டவி கோட்டை கிபி 1549ல் கட்ச் இராச்சியத்தின் மன்னர் ராவ்சிறீ பார்மால்ஜியால் கட்டப்பட்டது. எட்டு கிலோ மீட்டர் நீளமும்; 2.7 மீட்டர் அகலமும் கொண்ட இக்கோட்டையில் ஐந்து கதவுகளும், மூன்று சன்னல்களும் கொண்டது. 2001ல் இக்கோட்டையின் இரண்டு நிலைகளும், நான்கு கதவுகள் தவிர பிற பகுதிகள் இடிக்கப்பட்டது. [2]

வரலாறு

தொகு

கட்ச் இராச்சியத்தின் மன்னர் முதலாம் கேங்கர்ஜி கிபி 1580ல் மாண்டவி நகரத்தை, ஆணி மாண்டவ்யர் எனும் முனிவரின் பெயரால் நிறுவினார். [3]

 
ருக்மாவதி ஆற்றின் பாலம்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு

தொகு

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மாண்டவி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 51,376 ஆகும். அதில் ஆண்கள் 26,075 ஆகவும்; பெண்கள் 25,301 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 970 வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 6181 ஆக உள்ளனர். எழுத்தறிவு 80.38% ஆக உள்ளது. மாண்டவி நகரத்தில் 10,346 வீடுகள் உள்ளது.

சமயம்

தொகு

மாண்டவி நகரத்தில் இந்துக்கள் 59.82%, இசுலாமியர்கள் 36.69%, சமணர்கள் 3.09%, மற்றவர்கள் 0.40% ஆக உள்ளனர். [4]

தொழில்கள்

தொகு
 
மரக் கப்பல் கட்டும் துறை

மீன் பிடித்தல், சிறு கப்பல்கள் கட்டுதல், பருத்தி பயிரிடுதல், உணவு எண்ணெய் உற்பத்தி போன்ற சிறு தொழில்கள் மாண்டவி நகரத்தின் முக்கியத் தொழில்களாகும்.

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India". Office of registrar general and census commissioner of India. பார்க்கப்பட்ட நாள் 2008-08-29. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "500-year-old Mandvi fort being demolished in Kutch". The Times of India. 29 October 2001. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  3. Cutch
  4. Mandvi Population Census 2011

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டவி,_குஜராத்&oldid=3224347" இலிருந்து மீள்விக்கப்பட்டது